ஆயுசுக்கும் உங்களுக்கு சனிபகவானால் வாழ்க்கையில் கஷ்டமோ நஷ்டமோ வரவே வராது. இந்த பரிகாரத்தை செய்து வந்தால், ஏழரை சனி தாக்கத்தில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம்.

சனிபகவான் என்று சொன்னாலே நம்மில் நிறைய பேருக்கு பக்தி வருகிறதோ இல்லையோ, அதிகப்படியான பயம் வந்துவிடும். ஜாதகத்தில் ஏழரை சனி நடந்து கொண்டு கொண்டிருக்கும் போதோ, அல்லது சனி நீச்சமாக இருக்கும் போதோ, சனி பகவானால் எந்தப் பிரச்சனையாக ஜாதக கட்டத்தில் இருந்தாலும், இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் சிறப்பானது. அதுமட்டுமல்லாமல் சனிபகவானால் பிரச்சனை வரும்போது மட்டும் தான் நாம் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் இந்த பரிகாரத்தை செய்தால், உங்களுக்கு ஏழரை சனி வரும் காலகட்டத்தில், வரக்கூடிய சோதனைகள் பிரச்சினைகள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க இந்த பரிகாரங்கள் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடர போகின்றோம்.

sani-baghavan

முதல் பரிகாரமாக சனிபகவான் என்றாலே முதியவர்கள், ஊனமுற்றவர்களை குறிக்கின்றது. ஆகவே வாரம்தோறும் வரக்கூடிய சனிக்கிழமைகளில் உங்கள் கையாலேயே வெல்லம் சேர்த்த பிரசாதத்தை செய்து அதை உங்கள் வீட்டில் இருக்கும் இறைவனுக்கு நிவேதனமாக படைத்து, அந்த பிரசாதத்தை வயது முதிர்ந்த ஆதரவற்ற ஏழை முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். இதை உங்களுடைய வாழ்நாள் வழக்கமாக மாற்றிக் கொண்டாலும் மிகவும் நல்லது. ஊனமுற்றவர்கள் வயதானவர்கள் தங்கக்கூடிய ஆசிரமங்கள் எவ்வளவு உள்ளது. அவர்களுக்கு வாரம் தோறும் வரும் சனிக்கிழமை அன்று இனிப்பு பலகாரங்களை தானமாக கொடுப்பது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

நிறைய பேருக்கு ஏழரை சனி காலகட்டத்தில் தொழிலில் வீழ்ச்சி தொழிலில் நஷ்டம் சில பேருக்கு தொழில் இல்லாமல் கூட போய்விடும். இந்த நஷ்டத்தை தவிர்க்க என்ன செய்யலாம்? வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கக்கூடிய ஊனமுற்றவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் வருமானம் தரக்கூடிய அளவில் உங்கள் கைகளால் ஏதேனும் ஒரு தொழிலை தொடங்கி தருவது, அப்படி இல்லை என்றால் அவர்களுக்கு கைத்தொழில் ஏதாவது இலவசமாக கற்று தருவது அவர்களுக்கான வாழ்வாதாரத்தை நீங்கள் தேடித் தருவது, இப்படிப்பட்ட உதவிகளை நீங்கள், வாழ்நாளில் தொடர்ந்து செய்து வந்தால் ஏழரை சனி காலகட்டத்தில் கூட உங்களுக்கு தொழில் முடக்கம் ஆகவே ஆகாது.

unamutravar

சில பேர் ஊனமுற்றவர்களுக்கு சக்கர நாற்காலி, வாக்கிங் ஸ்டிக் இப்படிப்பட்ட பொருட்களை வாங்கி தருவார்கள். இதுவும் நல்லது. இருப்பினும் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை வாழ முடியாமல் தவித்து வரும் சூழ்நிலையில், அவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் சிறியதாக ரோட்டில் கடை வைப்பது, அந்த சக்கர நாற்காலியிலேயே வைத்து விற்கும், பலூன் கடை, பொம்மை கடை இப்படிப்பட்ட விஷயங்களுக்கும் முதலில் ஒரு முதலீட்டை நீங்கள் கொடுக்கலாம். இப்படிப்பட்டவர்கள் நிறைய பேரை ரோட்டோரங்களில் பார்த்திருப்போம் அல்லவா? இப்படிப்பட்ட ஊனமுற்றவர்களுக்கு உதவியை செய்பவர்கள், வாழ்நாள் முழுவதும் பண கஷ்டமே இல்லாமல் வாழ்வார்கள் என்பது மட்டும் உறுதி.

- Advertisement -

பறவைகளுக்கு தொடர்ந்து உணவு தண்ணீர் இப்படிப்பட்ட விஷயங்களை உங்கள் வீட்டு மொட்டை மாடியிலோ, அல்லது வெளிப்புறங்களில் வைத்து வந்தாலும் சனி பகவானால் ஏற்படக்கூடிய கஷ்டங்கள் குறைக்கப்படும். முடிந்தவரை கூண்டில் சிக்கித் தவிக்கும் பறவையை, பணம் கொடுத்து வாங்கி அதை சுதந்திரமாக பறக்க விடுவது மேலும் சிறப்பான பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது.

deepam

இவை எல்லாவற்றையும் தாண்டி சனிக்கிழமைகளில் உங்களுடைய வீட்டிலேயே சனி பகவானை நினைத்து ஒரு மண் அகல் விளக்கில் கடுகு எண்ணெய் ஊற்றி அந்த எண்ணெயில் கொஞ்சமாக எள்ளு போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், சனிபகவான் உங்களுக்கு வாழ்க்கையில் நன்மையை மட்டுமே கொடுப்பார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சோதனைகளை கொடுத்தாலும் சோதனை மூலம் வேதனை ஏற்படாது. இந்த பரிகாரத்தை எல்லாம் செய்து வந்தாலும் கூட, நீங்கள் எப்போதுமே நேர்மையாக இருக்கவேண்டும். நேர்மையான இருப்பவர்களுக்கு ஏழரை சனி காலகட்டத்தில் நிச்சயமாக கஷ்டங்கள் குறையும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் இருக்கக்கூடிய தீராத எதிர்மறை சக்திகளை இழுத்துக் கொண்டு வந்து வெளியே எரித்து, பஸ்பமாக்க கூடிய சக்தி இந்த சிறு முடிச்சுக்கு உள்ளது. முடிச்சுக்கு உள்ளே இருக்கும் 3 ரகசிய பொருள் என்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.