தரித்திரம் நீங்கி வெற்றிகள் பல குவிய காலையில் எழுந்ததும் கடைப்பிடிக்கக் கூடிய 6 விஷயங்கள் என்ன? இத செஞ்சா தோல்வியே இல்லையாம்!

wake-up-crow-kula-dheivam
- Advertisement -

நம்மிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் அதிகரிக்கவும், தரித்திரங்கள் நீங்கவும் அதிகாலை நேரம் மிகவும் உகந்ததாக இருக்கின்றது. அதிகாலையில் எழுந்ததும் நாம் எதை முதலில் செய்கிறோமோ, அதைப் பொறுத்தே அந்த நாள் முழுவதும் அமையும் என்பது ஆன்மீக கருத்தாகும். இந்த வகையில் தரித்திரங்கள் நீங்கி, வெற்றிகள் பல வந்து நம் வாழ்வில் குவிவதற்கு காலையில் எழுந்ததும் கடைபிடிக்கக் கூடிய 6 விஷயங்கள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அலச இருக்கிறோம்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நீங்கள் உங்களுடைய குலதெய்வத்தை மனதில் கொண்டு வர வேண்டும். பின் உள்ளங்கையை பார்த்து விட்டு எழ வேண்டும். அதிகாலையில் குலதெய்வத்தை வணங்குபவர்களுக்கு என்றுமே தோல்விகள் என்பது கிடையாது. உங்களுடைய குலதெய்வத்தை மனதில் கொண்டு வந்த பின்பு கண்களை விழித்து உள்ளங்கையை பார்க்க வேண்டும். அதன் பின்பு மற்ற வேலைகளைத் துவங்கலாம்.

- Advertisement -

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக சென்று சிலர் டிவி யை போட்டு விடுவார்கள். அல்லது மொபைல் போன் போன்றவற்றை நோண்டிக் கொண்டிருப்பார்கள். வெற்றிகள் குவிவதற்கு முதல் வேலையாக காலையில் எழுந்ததும் டிவி பார்ப்பது, மொபைல் போன் நோண்டுவது போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இதில் ஒலிக்கக் கூடிய பாடல்கள் அல்லது ஏதோ ஒரு செய்திகள் நம்மை பாதிக்க கூடும். அது நாள் முழுவதும் நம்மை பின் தொடர்வதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு எனவே இதனை தவிருங்கள்.

காலையில் எழுந்ததும் கண்டிப்பாக பல் துலக்கி விட்டு பத்து நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும். நீங்கள் அமைதியாக ஓரிடத்தில் தியான நிலையில் உட்கார்ந்து கொண்டிருந்தால் போதும்! உங்கள் மனம் ஒரு நிலைக்கு வந்து விடும். அதன் பிறகு நீங்கள் சிந்திக்க கூடிய செயல்கள் நேர்மறையாக நிச்சயம் இருக்கும்.

- Advertisement -

காலையில் எழுந்ததும் எப்பொழுதும் சண்டை, சச்சரவு என்று இருக்கக்கூடாது. சண்டைகளை போடுவதாக இருந்தால் பிறகு போட்டுக் கொள்ளலாம் என்று அதனை தவிர்த்து விடுவது தான் நல்லது. எழுந்ததும் சண்டை, சச்சரவு என்று ஆரம்பித்தால், அந்த நாள் முழுவதும் அதனுடைய பாதிப்புகள் தொடரும். இதனால் செய்யும் செயலில் வெற்றி என்பது தடைப்பட்டுவிடும். வரக்கூடிய அதிர்ஷ்டங்களும் உங்களை விட்டு விலகிவிடும் எனவே காலையில் எழுந்ததும் சண்டை போடாதீர்கள்.

சூரிய வெளிச்சம் என்பது அதிகாலையில் நம் வீட்டிற்குள் வர வேண்டும். அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வது அல்லது சூரிய ஒளியில் சென்று நிற்பது, சூரிய ஒளியை வீட்டிற்குள் வருமாறு ஜன்னல்கள், கதவுகளை திறந்து வைப்பது போன்றவற்றை செய்யும் பொழுது சூரிய பகவானுடைய அருள் நமக்கு கிடைக்கும். இதனால் வெற்றிகள் பல குவியும். நம் உடலில் இருக்கும் கெட்ட சக்திகள் விலகும். காலையில் எழுந்ததும் கண்டிப்பாக குளித்து முடித்து சுத்தமாக இருக்க வேண்டும். பிறகு குளித்துக் கொள்ளலாம் என்று சோம்பேறித்தனமாக இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் எப்பொழுதும் தரித்திரம் தான் பிடிக்கும், வெற்றிகள் என்பது வரவே செய்யாது.

காலையில் நீங்கள் முதல் உணவாக எதை சாப்பிட்டாலும், அதை ஒரு பிடி கையில் வைத்துக் கொண்டு அன்னபூரணியை மனதில் நினைத்து வணங்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு அதை கொண்டு போய் காகத்திற்கு வைத்து உங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்ட பிறகு வந்து அமர்ந்து காலை உணவை முடித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு காலையில் எழுந்ததும் கடைபிடித்து வந்தால் நிச்சயம் உங்களுக்கு தரித்திரங்கள் விலகி, வெற்றிகள் வாழ்வில் குவியும் என்பதில் ஐயமில்லை.

- Advertisement -