கண்ணுக்கு கீழே கருவளையம், உதட்டை சுற்றிலும் இருக்கும் கருமை நீங்க ஃபேஸ் மசாஜ் வீட்டிலேயே நாமே செய்வது எப்படி?

face-massage-karuvalaiyam
- Advertisement -

தினமும் ஒரு பத்து நிமிடம் ஆவது உங்கள் முகத்திற்கு ஒரு மசாஜ் செய்து கொடுங்கள். பார்லர்களில் இது போல ஃபேஸ் மசாஜ் செய்வது உண்டு. இதனால் முகம் ரொம்ப டைட்டாக மாறி இளமையான தோற்றம் கொடுக்கும். முகத்தை சுற்றிலும் இருக்கும் கருமை, குறிப்பாக உதட்டை சுற்றிலும் இருக்கும் கருந்திட்டுக்கள் மறையும். அதே போல கண்ணுக்கு கீழ் இருக்கும் கருவளையம், பள்ளம் போன்ற அமைப்பு ஆகியவை சரியாகும். தினமும் ஒரு பத்து நிமிடம் செய்து வந்தால் நீங்கள் விரைவிலேயே நல்ல பொலிவான மற்றும் இளமையான சருமத்தை பெறலாம். ஃபேஸ் மசாஜ் செய்வது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நம் உடம்பில் இருக்கும் மற்ற உறுப்புகளுக்கு தேவையான சக்தியை கொடுக்க உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். மனோ பலம் பெற, யோகா, தியானம் போன்றவற்றை செய்து கொள்ளலாம். ஆனால் முகத்தில் இருக்கும் பொலிவை மீட்டு எடுக்க முகத்திற்கு கண்டிப்பாக தினமும் ஒரு பத்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முகத்திற்கு மசாஜ் செய்வதால் ஏகப்பட்ட பலன்கள் நமக்கு கிடைக்கும். முகம் ரொம்பவும் மென்மையானது. முக சருமம் தளர்வாக இருந்தால் விரைவாக முதுமையை அடைந்து விடுவீர்கள் எனவே முகத்தை இறுக்கி புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள முகத்தில் இருக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்கி எப்பொழுதும் இளமையான தோற்றத்தை கொடுக்க சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

- Advertisement -

முதலில் உதட்டை சுற்றிலும் இருக்கும் கருமை நீங்க, உங்கள் நாக்கை வைத்து உதட்டை சுற்றிலும் உள்புறம் மேலிருந்து கீழாக 20 முறை சுழற்ற வேண்டும். அதே போல ஆன்ட்டி கிளாக் வைஸ் இடமிருந்து வலமாக 20 முறை இதே போல சுழற்ற வேண்டும். பிறகு உட்புற தாடையின் வலது புறம் மட்டும் கீழிருந்து மேலாக பத்து முறையும், மேலிருந்து கீழாக பத்து முறையும் தேய்க்க வேண்டும். அதே போல இடது புறமும் 20 முறை நாக்கை கொண்டு தேய்க்க வேண்டும். இதனால் உதட்டை சுற்றிலும் இருக்கும் ரத்த ஓட்டம் சீராகி முகத்தை இழந்த பொலிவிலிருந்து மீட்டெடுக்கும்.

கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் மறைய உங்கள் இரண்டு கண்களுக்கு கீழேயும், இரண்டு விரல்களை வைத்து அப்படியே கீழிருந்து மேலாக நன்கு விரல்களை வைத்து, அழுத்தி நீட்டி மேலே புருவத்தை சுற்றி கொண்டு போய் புருவத்திற்கு மேலே நிறுத்த வேண்டும். இது போல ஒரு நிமிடம் மசாஜ் செய்தால் கண்களை சுற்றிலும் இருக்கும் அயர்ச்சி நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

- Advertisement -

பிறகு உங்களின் இரண்டு விரல்களில் இருக்கும் ஆள்காட்டி விரலையும், பாதியாக மடித்து கண்களின் மூக்கு பகுதியை ஒட்டி இருக்கும் ஓரங்களில் இருந்து ஆரம்பித்து புருவத்தின் கடைசி பகுதி வரை சென்று நிறுத்தி லேசாக அழுத்தம் கொடுக்க வேண்டும். எப்போதும் அழுத்தம் கொடுக்கும் போது மசாஜ் செய்வது போல மிதமான அழுத்தம் கொடுக்க வேண்டும்.

பிறகு மூக்கு துவாரத்திற்கு பக்கத்தில் இருக்கும் இடத்தில் இரண்டு புறமும் நடுவிரலை வைத்து ஆள்காட்டி விரல்களால் புருவத்தை தூக்கி நிறுத்தி கண்களை விழித்து பார்ப்பது போல செய்ய வேண்டும். இதுவும் ஒரு நிமிடத்திற்கு செய்ய வேண்டும். இப்படி விரல்களால் முகத்திற்கு கிளாக் வைஸ் மற்றும் ஆன்டி கிளாக் வைஸ் முகம் முழுவதும் லேசான மசாஜ் செய்ய முகம் முழுவதும் நல்ல ஒரு ரத்த ஓட்டம் கிடைத்து, சருமம் இறுகி இளமையான தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -