எண்ணெய் பசை நீங்கி பொலிவான சருமத்தை பெற

oily skin curd
- Advertisement -

என்னதான் நாம் அழகாக இருந்தாலும் நம் முகத்தில் எண்ணெய் பசை இருந்தால் அந்த அழகெல்லாம் காணாமல் போய்விடும். முகம் ஒருவித சோர்வோடு காணப்படும். இப்படி சோர்வை நீக்கி எப்பொழுதும் புத்துணர்ச்சியுடனும் அதே சமயம் பொலிவுடனும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் தங்கள் சருமத்தில் உற்பத்தியாகும் எண்ணெய் பசையை குறைக்க வேண்டும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் எண்ணெய் பசை குறையவும் சருமத்தை பொலிவாக வைத்திருக்கவும் செய்யக்கூடிய ஃபேஸ் பேக்கை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

ஒரு எண்ணெய் பசை மிகுந்த சருமத்திற்கும் வறண்ட சருமத்திற்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. ஒரு சருமத்திற்கு உபயோகப்படுத்தும் ஃபேஸ் பேக்கை மற்றொரு சருமத்திற்கு நாம் உபயோகப்படுத்தும் பொழுது அதனால் நமக்கு பாதிப்பே ஏற்படும். இதனால்தான் பலரும் ஃபேஸ் பேக்கை முயற்சி செய்து எதுவும் ஆகவில்லை என்று கூறுவார்கள். அந்த ஃபேஸ் பேக்கில் சேர்க்கக்கூடிய பொருட்கள் எதற்குரிய பொருட்கள் என்பதை அறிந்து கொண்டு சேர்ப்பதன் மூலமே நாம் நினைத்த பலனை நம்மால் பெற முடியும். அந்த வகையில் எண்ணெய் சருமம் மிகுந்தவர்கள் செய்யக்கூடிய எளிமையான ஒரு ஃபேஸ் பேக்கை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக் தயார் செய்ய நமக்கு கெட்டியான தயிர் வேண்டும். அரை கப் அளவிற்கு கெட்டியான தயிரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். பிறகு இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு தேன், ஒரு டீஸ்பூன் அளவு எலுமிச்சம் பழச்சாறு இவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கலந்த இந்த தயிரை முகம், கழுத்து, கை, கால் என்று நமக்கு எந்த இடத்தில் தேவையோ அந்த இடங்களில் எல்லாம் போட்டு ஐந்து நிமிடம் நன்றாக மசாஜ் செய்து 15 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும்.

15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் எண்ணெய் சுரப்பது குறைய ஆரம்பிக்கும். முகம் பொலிவு பெறும். முகத்தில் இருக்கக்கூடிய கருமை நீங்கும். முகப்பருக்கள் நீங்கவும், முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் மறையவும் இந்த ஃபேஸ் பேக் உதவி செய்யும்.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக்கை ஆண்களும் உபயோகப்படுத்தலாம். கஸ்தூரி மஞ்சள் என்பதால் அதனால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. இப்படி நம்முடைய சருமத்திற்கு ஏற்றார் போல் ஃபேஸ் பேக்கை உபயோகப்படுத்தினால் கண்டிப்பான முறையில் நம்முடைய சருமத்தில் நல்ல மாற்றத்தை நம்மால் உணர முடியும்.

இதையும் படிக்கலாமே: முகத்தை இளமையாக்கும் பீட்ரூட்

மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய வீட்டிலேயே இருக்கக்கூடிய பொருட்களை மட்டுமே பயன்படுத்தி நம்முடைய எண்ணெய் பசை மிகுந்த சருமத்தை பொலிவான சருமமாக மாற்ற முடியும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -