1 ரூபாய்க்கு இதை வாங்கினால் போதும் உங்களுடைய முகம் சாஃப்ட் அண்ட் ஷைனிங்கா 10 நிமிஷத்திலேயே மாறிடும்! ஒரே நாளில் ரிசல்ட் கொடுக்கும் ஃபேஸ் பேக்!

face-pack-shampoo
- Advertisement -

நல்ல ஒரு மிருதுவான சருமம் பெறுவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல! இதற்காக இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து முகத்தை நாம் ப்ளீச் செய்வது உண்டு. இப்படி ஃபேஸ் பேக் போட்டு கொள்பவர்கள் அதை வார கணக்கில் கூட செய்ய வேண்டி இருக்கும். ஆனால் இதை ஒரே நாளில் போட்டு பாருங்கள், ரிசல்ட் அவ்வளவு சூப்பராக இருக்கும். நம் முகம் பளிச்சென்று இருக்க எளிதான ஃபேஸ் பேக் என்ன? இதைப் பற்றி அழகு குறிப்பு தகவல்களை இனி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

எல்லோருடைய முகமும் ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது. ஒவ்வொருவருடைய சருமமும் ஒவ்வொரு விதமான தன்மை கொண்டுள்ளது. சிலருக்கு எண்ணெய் பசை உள்ள சருமம் இருக்கும். சிலருக்கு சருமம் வறண்டு போய் காணப்படும். டேமேஜ் சருமம் என்றும் சிலருடைய சருமத்தை கூறுவது உண்டு. இவர்களுடைய சருமத்தில் முகப்பருக்களும், மேடும் பள்ளமுமான கரடு முரடான ஸ்கின்னும் இருக்கும். இப்படி வெவ்வேறு விதமான சரும அமைப்புகள் இருந்தாலும், இந்த ஒரு பேக்கை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம். எவ்வகையினரும் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கக்கூடிய இந்த ஃபேஸ் பேக் போடுவதற்கு நமக்கு ஒரு ரூபாய் ஷாம்பு தேவை.

- Advertisement -

ஒரு ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய கிளினிக் பிளஸ் ஷாம்பூ ஒன்றை வாங்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதை கத்தரித்து முழுமையாக ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கடலை மாவு அல்லது கான்பிளவர் மாவு கலந்து கொள்ளுங்கள். உங்களிடம் எது இருக்கிறதோ, அதை கலந்து கொள்ளலாம். இதனுடன் கால் ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். கஸ்தூரி மஞ்சள் தூள் முகத்தை மாசு, மருவில்லாமல் பொன்னிற மேனியாக நமக்கு மாற்றி கொடுக்கும்.

பின் இதனுடன் பேஸ்ட் கண்சிஸ்டெண்சி வருவதற்கு ஏற்ப பசும்பால் பச்சையாக ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை பேஸ்ட் போல நன்கு அடித்துக் கொள்ளுங்கள். இதை முகத்திற்கு அப்ளை செய்வதற்கு முன்பு முகத்தை ஒரு முறை நன்கு கழுவிக் கொண்டு வந்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் முகத்தை துடைத்துக் கொண்டு இந்த பேக்கை அப்ளை பண்ண வேண்டும். முகம் முழுவதும் இதை அப்ளை பண்ணுங்கள்.

- Advertisement -

புருவங்கள் மற்றும் உதடுகளில் படாமல் அப்ளை செய்வது மிகவும் முக்கியம். பத்து நிமிடம் கழித்து முகத்தை நன்கு மசாஜ் செய்ய வேண்டும். ஓரளவுக்கு முகம் காய்ந்து இருக்கும் இந்த நேரத்தில், முன்னும் பின்னும் ஆக வட்ட வடிவத்தில் எல்லா இடங்களிலும் மெதுவாக அழுத்தம் கொடுக்காமல் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி நீங்கள் செய்வதால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறும். மூக்கிற்கு இரண்டு பக்கங்களிலும் இருக்கும் இடுக்குகள், உதடுக்கு கீழே இருக்கும் பள்ளமான பகுதி, கண் கருவளையங்கள் ஆகிய இடங்களில் குறிப்பாக மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
வெள்ளை முடிக்கு டை போட்டு இருக்கீங்கன்னு யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இயற்கையான முறையில் வெள்ளை முடிகளை இப்படி நிரந்தரமாக கருப்பா மாத்திக்கோங்க.

இப்படி நீங்கள் செய்து கொடுக்கும் பொழுது, அந்த இடத்தில் இருக்கும் அழுக்குகளும், இறந்த செல்களும் நீங்கும் அதன் பிறகு ஒரு ஐந்து நிமிடம் கழித்து முகத்தை மென்மையாக வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீர் கொண்டு கழுவி வாருங்கள். ஒருமுறை இப்படி செய்யும் பொழுதே செமையான ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும். நம்முடைய முகமா? என்று பார்ப்பதற்கு ஆச்சரியப்படும் வகையில் ஜொலிக்கும். இதே போல நீங்கள் வாரம் ஒருமுறை செய்து வந்தாலே உங்கள் சருமம் சார்ந்த எந்த பிரச்சனைகளும் வராது.

- Advertisement -