சமையல் கட்டில் தினமும் பயன்படுத்தும் இந்த 2 பொருள் இருந்தா போதும்! உங்க முகத்தை அடிக்கடி கண்ணாடியில் நீங்களே பார்க்க ஆசைப்படுவீங்க அவ்வளவு அழகா மாறிடுவீங்க!

face-tomato
- Advertisement -

சிலருக்கு கண்ணாடியில் போய் முகத்தை பார்த்தாலே வேதனையாக இருக்கும். நம் முகத்தில் இருக்கக்கூடிய முகப்பருக்கள், கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் அல்லது எண்ணெய் பிசுக்கு போன்றவற்றை என்னதான் செய்தாலும் அவ்வளவு சுலபமாக விரட்டி அடித்து விட முடியாது. அதிலும் கரடு முரடாக இருக்கக்கூடிய முகத்தை அடிக்கடி கண்ணாடியில் பார்க்க விரும்பவே மாட்டோம். அப்படி இருப்பவர்களுக்கு ரொம்பவே எளிதாக நாம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய இந்த இரண்டு பொருட்களை வைத்து எப்படி முகத்தை கண்ணாடி போல பளபளன்னு ஜொலிக்க செய்வது? என்பதை தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

பல ஆயிரம் செலவு செய்து நீங்கள் பார்லருக்கு போய் பேசியல் செய்தாலும், அதில் ஸ்டீமிங் செய்யும் ஒரு முறை உண்டு. அதாவது முகத்தை ஆவியில் காண்பித்து முக துவாரங்களுக்குள் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றுவது. இந்த ஒரு விஷயத்தை வீட்டிலேயே நாம் எளிய முறையில் இப்படி செய்து வந்தால் நம் முகத்தில் எந்த விதமான சரும பிரச்சனைகளும் அண்டாது.

- Advertisement -

நம் வீட்டில் தினமும் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் இரண்டு தக்காளி மற்றும் மஞ்சள் தூள் ஆகும். இந்த இரண்டும் நம் முகத்தை எப்படி பொலிவுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது? என்று பார்ப்போம். தலைபாரம், ஜலதோஷம் வந்தால் எப்படி நாம் ஆவி பிடிப்போமோ, அதே போல தண்ணீரை தயார் செய்து கொள்ள வேண்டும். அந்த தண்ணீரில் கால் ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். அதன் பிறகு வழக்கம் போல முகம் முழுவதும் நன்கு தண்ணீர் வெளியேறும்படி ஆவி பிடிக்க வேண்டும்.

இதனால் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் வியர்வைகள் மூலம் அழுக்குகள் வெளியேறும். முக துவாரங்கள் திறக்கும், இதனால் அதற்குள் இருக்கும் அழுக்குகளும், கிருமிகளும், பாக்டீரியா தொற்றுகளும் வெளியில் வந்து விடும். இறந்த செல்களும் நீங்கும். அதன் பிறகு முகம் புத்துணர்வுடன் இருக்கும். இதனால் வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவை அடுத்து தோன்றவே செய்யாது. முக துவாரங்கள் இப்பொழுது திறந்த நிலையில் இருக்கும்.

- Advertisement -

முகத்தை ஒரு மெல்லிய காட்டன் துணியால் துடைத்து ஒற்றி எடுங்கள். அதன் பிறகு தக்காளியை நன்கு கழுவி சுத்தம் செய்து அதை துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு துண்டையும் எடுத்து முகத்தில் மசாஜ் செய்வது போல மெல்லமாக முன்னிருந்து பின்புறமாகவும், பின்னிருந்து முன்புறமாகவும் வட்ட வடிவில் ரொட்டேட் செய்து மசாஜ் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே:
வீட்டிலேயே 4 பொருள் வைத்து இயற்கையான புரோட்டின் ஹேர் பேக் எப்படி தயார் செய்வது? மளமளவென அதிவேகமாக முடி வளர இத செய்யுங்க!

முகத்தில் இருக்கும் எல்லா பகுதிகளிலும் தக்காளியுடைய சாறு படும்படி அழுத்தம் கொடுக்காமல் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் முகத்திற்கு நல்ல ஒரு புத்துணர்வு கிடைத்து, முக துவாரங்கள் இறுக ஆரம்பிக்கும். இப்பொழுது பத்து நிமிடம் அப்படியே ஃபேன் காற்றில் உலர விட்டு விடுங்கள். நன்கு காய்ந்து இறுகியதும் ஒரு மெல்லிய ஈரத் துணியில் முகத்தை துடைத்து கொள்ளுங்கள். அவ்வளவுதான், அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடலாம். இது போல வாரம் ஒரு முறை மட்டும் ரொம்ப சுலபமாக பத்து நிமிடம் மெனக்கட்டு செய்தால், நம் முகத்தில் சரும பிரச்சனைகள் என்பது வரவே செய்யாது. இதற்காக பல ஆயிரம் செலவு செய்யவும் தேவையில்லை, ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -