வீட்டிலேயே 4 பொருள் வைத்து இயற்கையான புரோட்டின் ஹேர் பேக் எப்படி தயார் செய்வது? மளமளவென அதிவேகமாக முடி வளர இத செய்யுங்க!

hair-pack-pachai-payaru
- Advertisement -

உதிர்கின்ற முடியை சட்டுனு நிப்பாட்டி கொத்து கொத்தாக முடி வளர செய்ய இயற்கையான முறையில் புரோட்டின் ஹேர் பேக் நல்ல ஒரு ரிசல்ட்டை கொடுக்கும் வண்ணம் இருக்கிறது. வீட்டில் இருக்கக்கூடிய இந்த நான்கு பொருட்களை வைத்து எப்படி புரோட்டின் ஹேர் பேக் தயாரிப்பது? இதனால் கிடைக்க இருக்கும் பலன்கள் என்னென்ன? இதை எப்படி அப்ளை செய்ய வேண்டும்? என்பது போன்ற அழகு குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

புரோட்டின் ஹேர் பேக் செய்வதற்கு முதலில் வெள்ளை உளுந்து மற்றும் பாசிப்பயறு வேண்டும். இவற்றில் ஏராளமான புரோட்டீன்கள் நிறைந்து காணப்படுகின்றன. முந்தைய நாள் சாதம் வடித்த கஞ்சியை ஒரு கப் நிறைய எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் 3 ஸ்பூன் உளுந்து மற்றும் 5 ஸ்பூன் பாசிப்பயறை ஒருமுறை நன்கு தண்ணீரில் அலசி சுத்தம் செய்து விட்டு கஞ்சியில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து விடுங்கள்.

- Advertisement -

12 மணி நேரம் இரவு முழுவதும் நன்கு ஊறிய பிறகு மறுநாள் காலையில் நீங்கள் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல முதலில் ஒரு முறை சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ஆலிவ் ஆயில் இருந்தால் இரண்டு ஸ்பூன் அளவிற்கு ஊற்றி மறுபடியும் ஒரு சுற்று சுற்றி எடுங்கள். ஆலிவ் ஆயில் இல்லையென்றால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள் போதும்.

மீண்டும் நன்கு அரைத்து எடுத்து வந்த பின்பு இதை அப்படியே தலையில் மசாஜ் செய்து தலைமுடி முழுவதும் அப்ளை செய்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஒரு வெள்ளை காட்டன் துணியில் இதனை ஊற்றி நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் சக்கைகள் இல்லாமல் கிரீம் போல உங்களுக்கு ஹேர் பேக் கிடைக்கும். இந்த கிரீமை நீங்கள் தலை முழுவதும் தடவினால் அலசுவதற்கு வசதியாக இருக்கும்.

- Advertisement -

வேர்க்கால்கள் முதல் நுனி முடி வரை எல்லா இடங்களிலும் மசாஜ் செய்தபடி அப்ளை செய்யுங்கள். பிறகு தலைமுடியை முடிந்து நன்கு கட்டி ஒரு பாலிதீன் கவர் போட்டு பத்து நிமிடம் மூடி வைத்துக் கொள்ளுங்கள். பத்து நிமிடம் கழித்து தலை முடியை சாதாரணமாக நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பு அல்லது சிகைக்காய் போட்டு அலசி விடுங்கள்.

இந்த முறையில் நீங்கள் உங்களுடைய தலைமுடிக்கு நல்ல ஒரு போஷாக்கு கொடுத்து வந்தால் விரைவிலேயே முடி கொட்டுவது முழுமையாக நின்று தலைமுடியானது அதிவேகமாக வளர துவங்கும். தலைமுடியை வறண்ட தன்மையிலிருந்து மீட்டு எடுத்து ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளவும் உதவும் இந்த ஹேர் பேக்கை வாரம் ஒரு முறை போட்டால் போதுமானது. அடிக்கடி பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இதையும் படிக்கலாமே:
அழகான பேரழகை பெற இந்த ஒரு குளியல் பொடி போதும். பெண்களின் சருமத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் கூட, சீக்கிரத்தில் நிரந்தரமாக உதிர, ரகசிய பொருட்கள் இந்த பொடியோடு சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் எந்த விதமான குளிர்ச்சியை தரக்கூடிய பொருட்களும் இல்லை என்பதால் யார் வேண்டுமானாலும் தாராளமாக பயன்படுத்தலாம். பத்து நிமிடத்திற்கு மேல் ஊற வைக்க வேண்டிய அவசியமும் இல்லை, ரொம்ப ஈசியாக செய்யக்கூடிய இந்த புரோட்டின் ஹேர் பேக் அதிவேக ரிசல்ட் கொடுக்கக்கூடியது, நீங்களும் ட்ரை பண்ணி பயனடையுங்க!

- Advertisement -