இயற்கையான முறையில் இப்படி ஒரு முறை பேசியல் செய்து பாருங்கள். முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் விலகி, முகம் பொலிவுடன் மாசு மரு இல்லாமல் இருக்கும்.

facial lady
- Advertisement -

இந்த காலத்தில் ஆண், பெண் வேறுபாடு இன்றி அனைவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக அழகு நிலையத்திற்கு சென்று முகத்தை பேசியல் செய்து கொள்கிறார்கள். பல ரசாயன பொருட்களை பயன்படுத்தி செய்யக்கூடிய அந்த பேசியலால் முகத்திற்கு மேலும் பாதிப்புகள் அதிகரிக்குமே தவிர எந்தவித நன்மையும் ஏற்படாது. இவ்வாறு செய்வதற்கு பதிலாக நாமே நம் வீட்டில் இயற்கையான முறையில் எப்படி பேசியல் செய்வது என்று இந்த அழகு குறிப்பு பகுதியில் பார்ப்போம்.

பேசியல் என்று நாம் அழகு நிலையங்களுக்கு செல்லும் பொழுது அவர்கள் முறைப்படி சில வழிமுறைகளை மேற்கொள்வார்கள். அவ்வாறு மேற்கொண்டு செய்யக்கூடிய பேசியலுக்கு பல ரூபாய்கள் வசூலிக்கவும் செய்வார்கள். இவ்வாறு எதுவும் இல்லாமல் நம் வீட்டில் மிகவும் எளிமையான முறையில் கிடைக்கக்கூடிய இயற்கையான முகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய மூலிகைகளை வைத்து முறையான வழியில் பேசியல் செய்வதை பார்ப்போம்.

- Advertisement -

பேசியல் செய்வதற்கு முதலில் பேஸ் டீம் செய்வார்கள். இதற்கு நாம் உபயோகிக்கக்கூடிய பொருள்தான் எலுமிச்சை பழத்தின் தோல். எலுமிச்சம் பழத்தோலை கேரட் உரசுவது போல் உரசி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு அதில் 300 மில்லி அளவு சூடான தண்ணீரை ஊற்ற வேண்டும். பிறகு அதை நன்றாக கலக்கி, அதில் வரும் ஆவியில் நம்முடைய முகத்தை ஐந்து நிமிடம் காட்ட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் எலுமிச்சை பல தோளில் இருக்கக்கூடிய கிருமி நாசினி ஆனது நம் முகத்தில் இருக்கக்கூடிய துவாரங்களை திறந்து அதில் இருக்கும் கிருமிகளையும், அழுக்குகளையும் நீக்க உதவுகிறது.

- Advertisement -

அடுத்ததாக செய்யக் கூடியதுதான் பேஸ் ஸ்க்ரப். இதற்கு நாம் முதலில் ஒரு சோற்றுக்கற்றாழையை எடுத்து சுத்தம் செய்து அதில் இருக்கும் சதைப்பகுதியை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பவுலை எடுத்து அதில் 2 ஸ்பூன் அளவு அரிசி மாவை சேர்க்க வேண்டும். மேலும் அதனுடன் அரை எலுமிச்சம் பழச்சாறை சேர்க்க வேண்டும். பிறகு தேவையான அளவு சோற்றுக்கற்றாழை ஜூஸை ஊற்றி பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, முகத்தை ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான இறந்த செல்களும் நீக்கப்படும்.

- Advertisement -

கடைசியாக நாம் செய்யப் போவது தான் ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கிற்கு நமக்கு வேப்பிலை பொடி தேவைப்படும். ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் வேப்பிலை பொடியை போட்டு, அதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் கற்றாழை ஜூஸை ஊற்றி பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட்டை முகத்தில் நன்றாக தடவி விட வேண்டும். இந்த ஃபேஸ் பேக் நன்றாக காய்ந்த பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கிருமிகளும் நீங்குவதோடு, கரும்புள்ளிகளும் அகன்று, முகம் பொலிவுடன் காணப்படும்.

இதையும் படிக்கலாமே: எந்த ஷாம்பு யூஸ் பண்ணாலுமே உங்க முடி கையோட உதிர்ந்து வருதா? அப்படியானால் இந்த டிப்ஸ் உங்களுக்கு தான். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

எளிதாக கிடைக்கக்கூடிய இந்த இயற்கையான பொருட்களை வைத்து எந்தவித செலவு செய்யாமல் வீட்டிலேயே ஃபேஸ் பேஷியல் செய்து பயனடைவோம்.

- Advertisement -