எந்த ஷாம்பு யூஸ் பண்ணாலுமே உங்க முடி கையோட உதிர்ந்து வருதா? அப்படியானால் இந்த டிப்ஸ் உங்களுக்கு தான். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

hair-bath-wash-fall
- Advertisement -

இப்போது இருக்கும் கால சூழ்நிலையில் தினமும் தலைக்கு குளித்தே ஆக வேண்டும். அந்த அளவிற்கு வெளியில் தூசு நிரம்பி இருக்கிறது. இதை நம்மால் தடுக்கவே முடியாது. அதனால் தினமும் தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதையும் நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் தினமும் ஷாம்பு பயன்படுத்துவதாலே முடி பாதிப்படைந்து உதிர்ந்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். முன்பெல்லாம் தலைக்கு அரப்பு போட்டு குளித்து வந்தார்கள். அதையும் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள் மட்டும் செய்தார்கள். இப்பொழுதெல்லாம் வாரத்தில் ஐந்து நாளும் ஷாம்பு சேர்த்து குளிக்கும் பழக்கம் உள்ளது.

ஷாம்புவை நாம் தினமும் பயன்படுத்துவதால் நம் தலையில் உள்ள இயற்கையான எண்ணெய் பசைகள் அனைத்தும் நீங்கி தலைமுடியில் வறட்சி ஏற்பட்டு முடி உதிர்வு அதிகரிக்கும். இப்போதெல்லாம் வரும் ஷாம்புகளில் அதிக அளவில் கெமிக்கல்கள் கலந்து உள்ளது. நல்ல தரமான ஷாம்புகளை பயன்படுத்தும் போது முடி உதிர்வு ஓரளவிற்கு மட்டுப்படும். ஆனால் அது எல்லாம் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதாக இருக்கும். இதை எல்லோரும் செய்ய முடியாதல்லவா? ஆகையால் நீங்கள் தினமும் பயன்படுத்தும். இந்த ஷாம்புவை இப்படி பயன்படுத்தினால் ஓரளவிற்கு இந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து கொள்ளலாம். அதை பற்றிய ஒரு சிறிய விளக்கத்தை இந்த அழகு குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தலைக்கு ஷாம்புவை பயன்படுத்தும் முறை
பொதுவாக நாம் தலைக்கு குளிக்கும் பொழுது தலை முடியில் நேரடியாக ஷாம்பூவை தேய்த்து குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம் ஆனால் இது முற்றிலும் தவறான ஒரு விஷயம் தலையில் நாம் எண்ணெய் தேய்த்து இருக்கும் போது ஷாம்பு தேய்த்தால் அந்த எண்ணெயில் வெளியில் இருக்கும் அழுக்கு தூசி படிந்து தலை முழுவதும் அழுக்காக இருக்கும். அந்த நேரத்தில் நாம் நேரடியாக ஷாம்புவை தலையில் தேய்த்தால் நிச்சயம் முடி உதிர்வை அதிகரிக்கும்.

இப்படி ஆகாமல் இருக்க நாம் ஷாம்புவை கொஞ்சம் தண்ணீரில் நன்றாக கலந்து கொண்டு முதலில் நம் தலையில் தண்ணீர் ஊற்றி ஒரு முறை முடியை நன்றாக அலசிய பிறகு தண்ணீரில் கலந்த ஷாம்புவை நன்றாக கலந்து பிறகு தலையில் சேர்த்து அலசும் போது தலைமுடியில் உள்ள அழுக்கு நீங்குவதுடன் முடி உதிரவும் கட்டுப்படும். அது மட்டும் இன்றி ஷாம்புவை நேராக தலையில் தேய்க்கும் போது ஷாம்பு படும் அந்த இடங்களில் அதிகமான முடி உதிர்வு வளர்ச்சியும் ஏற்படும்.

- Advertisement -

இத்துடன் பெரும்பாலும் நாம் தலைக்கு குளிக்கும் போது அவசர அவசரமாக ஷாம்புவை போட்டு வேகமாக முடியை கசக்கி குளிப்போம். இதுவும் சரியான முறை கிடையாது தலையில் தண்ணீர் ஊற்றிய பிறகு தண்ணீர் கலந்த ஷாம்பை மெதுவாக தலையில் தேய்த்து குளிப்பதே ஒரு மசாஜ் செய்வது போல் இருக்க வேண்டும். இந்த முறையில் அழுக்குகள் முழுவதுமாக நீங்குவதுடன் முடி வேர்க்கால்களில் இருந்து வராமல் இருப்பதுடன் தலைமுடிக்கும் மசாஜ் செய்தது போல இருக்கும்.

அதே போல் முடிந்த அளவிற்கு வாரத்தில் ஐந்து நாளும் தலைக்கு ஷாம்பு போடுவதை தவிர்த்து விடுவது நல்லது. இரண்டு நாட்கள் ஷாம்பு போட்டு குளித்து மற்ற நாட்களில் கண்டிஷனர் அல்லது இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஷாம்பு சீயக்காய் போன்றவற்றை பயன்படுத்தலாம். அப்படி நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவை கூட சாதம் வடித்த தண்ணீரில் கலந்து தேய்த்த முடி உதிர்வு இல்லாமல் இருப்பதோடு முடி வளர்வதற்கான வாய்ப்பு உண்டு.

இந்த காலக்கட்டத்தில் இதையெல்லாம் எப்படி பொறுமையாக செய்து கொண்டிருப்பது என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் முடி உதிர்வு பிரச்சினைக்கு என்று அடுத்த நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக முடி உதிர்வுக்கான காரணங்களை நாம் சரி செய்து கொள்வது நல்லது. எதையும் வருமுன் சரி செய்து கொள்வது நல்லது தானே. இந்த குறிப்பில் உள்ள தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தோன்றினால் நீங்களும் இந்த முறையை பின்பற்றி பலன் அடையலாம்.

- Advertisement -