உங்களுடைய முகமே, அடுத்தவர்கள் முகம் பார்க்கும் கண்ணாடி போல பளபளப்பாக மாறிவிடும். இந்த ஃபேசியலை வீட்டிலேயே செலவில்லாமல் செய்தால்.

face1
- Advertisement -

பார்லருக்கு சென்று ஃபேஷியல் செய்து கொள்ள ஆகும் செலவை விட, நம் வீட்டிலேயே செய்து கொள்ளும் இந்த ஃபேஷியலுக்கு ஆகும் செலவு மிக மிகக் குறைவு. எளிமையான முறையில் நாமே நம்முடைய முகத்தை அழகுப்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக கிளாஸ்சி ஸ்கின் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த குறிப்புகளை அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய அழகு இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகை பெற வேண்டுமா. இந்த அழகு குறிப்பு உங்களுக்காக மட்டும் தான்.

Step 1:
முதலில் உங்களுடைய முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். காய்ச்சாத பச்சை பால் அல்லது ரோஸ் வாட்டர் ஏதாவது ஒரு பொருளில் காட்டன் பஞ்சை நனைத்து உங்களுடைய முகத்தை நன்றாக துடைத்து சுத்தம் செய்து விடுங்கள்.

- Advertisement -

Step 2:
அதன் பின்பு ஒரு சிறிய கிண்ணத்தில் கோதுமை மாவு போட்டு, தேவையான அளவு பால் போட்டு, கலந்து இதை முகம் முழுவதும் தேய்த்து ஸ்க்ரப் செய்து கழுவிக்கொள்ள வேண்டும். ஐந்து நிமிடங்கள் இந்த பேக்கை போட்டு முகத்தை மசாஜ் செய்தால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கிவிடும்.

Step 3:
அடுத்தபடியாக ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக 1 டேபிள் ஸ்பூன் தயிர், 1 ஸ்பூன் பீட்ரூட் ஜூஸ் ஊற்றி கலந்து இதை உங்களுடைய முகம் முழுவதும் அப்ளை செய்து வட்ட வடிவில் மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து வெறும் தண்ணீரில் கழுவி விடுங்கள். பீட்ரூட் ஜூஸுக்கு பதிலாக, தக்காளி சாறு கூட இதில் கலக்கலாம்.

- Advertisement -

Step 4:
இறுதியாக சூப்பரான பெஸ்ட்டான ஃபேஸ் பேக். இதற்கு நீங்கள் சில பொருட்களை கடையில் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும். ஆரஞ்சு பீல் பவுடர், முல்தானி மெட்டி, சுத்தமான சந்தன பொடி, இந்த மூன்று பொருட்களையும் தரமானதாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். மூன்று பொடியையும் ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். (இந்த பொடி ஒரே நாளில் தீர போவது கிடையாது. பல நாட்கள் ஃபேசியல் பண்ண இதை ஸ்டோர் செய்து பயன்படுத்தலாம்.)

இதையும் படிக்கலாமே: நீங்க எவ்வளவு கருப்பா இருந்தாலும் இனி கவலையே இல்லை. வெறும் 15 நிமிடத்தில் மல்லி பூ மாதிரி அப்படியே வெள்ளையா மாற இந்த 4 பொருட்கள் போதுமே.

மூன்று பொருட்களும் சேர்ந்த பொடியை 1 டேபிள் ஸ்பூன் அளவு ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு, அதோடு மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், தயிர் சிறிதளவு, காய்ச்சாத பால் ஊற்றி இதை கட்டிகள் இல்லாமல் கலந்து அப்படியே ஃபேஸ் மாஸ்க் போட்டுக் கொள்ள வேண்டும். 15 லிருந்து 20 நிமிடம் கழித்து லேசாக மசாஜ் செய்து முகத்தை கழுவி விட்டால், உங்களுடைய முகம் பளிச்சு பளிச்சென மாறும். சொன்னால் நம்ப மாட்டீங்க. மேல் சொன்ன இந்த அழகு குறிப்பை பின்பற்றினால் முதல் தடவையில் க்ளாஸி ஸ்கின் உங்களுக்கு கிடைத்துவிடும். சூப்பர் சூப்பர் சூப்பரான பேசியல் ரெமிடி இது. மிஸ் பண்ணாதீங்க. அழகின் மீது ஆர்வம் இருப்பவர்கள் இந்த குறிப்பை கட்டாயம் ட்ரை பண்ணி பாக்கணும்.

- Advertisement -