ஃபேரன் லவ்லியை முகத்தில் இப்படி ஒரு முறை போட்டு பாருங்களேன். பிறகு நீங்கதான் பேரழகியாயாக இருப்பிங்க. இவ்வளவு குறைந்த செலவில் இத்தனை அழகு கிடைக்குமா என்ன?

face10
- Advertisement -

விசேஷங்களுக்கு செல்லும் போது நம்முடைய முகம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக அழகாக இருந்தால் நல்லா இருக்கும் என்று தான் எல்லோருக்கும் தோன்றும். நேரம் இருந்தால், பணம் இருந்தால் பார்லருக்கு போய் நம்முடைய முகத்தை அழகுபடுத்திக் கொள்ளலாம். நேரமும் இல்லை, அதேசமயம் கையில் பணமும் இல்லை எனும் பட்சத்தில் நம்முடைய முகத்தை இன்ஸ்டன்ட் பொலிவாக மாற்ற என்ன செய்யலாம். ஃபேரன் லவ்லியை வைத்து இப்படி ஃபேஸ் மாஸ்க் போடலாம். பத்தே நிமிடத்தில் பளிச் பளிச் முகம் தயாராகிவிடும். நீங்க வேணும்னா ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

ஒரு சின்ன பவுல் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் அளவு ஃபேரன் லவ்லி போட்டுக்கொள்ளுங்கள். 2 ஸ்பூன் கடலை மாவு, 1 ஸ்பூன் அரைத்த சர்க்கரை இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து முதலில் நன்றாக கலந்துவிட்டு, இரண்டு சொட்டு தண்ணீர் ஊற்றி இதை க்ரீம் போல கொண்டு வந்துவிடுங்கள். நிறைய தண்ணீர் ஊற்றி விட வேண்டாம். சர்க்கரையில் இருந்து கொஞ்சம் தண்ணீர் விடும். அரைத்த சர்க்கரையைத் தான் போடவேண்டும். கொரகொரப்பாக இருக்கக்கூடிய சர்க்கரையை சேர்க்காதீர்கள்.

- Advertisement -

உங்களுடைய முகத்தை முதலில் சுத்தமாக கழுவி விடுங்கள். முகத்தில் எந்த மேக்கப்பும் இருக்கக் கூடாது. அதன் பின்பு இந்த கிரீமை உங்களுடைய முகம் கழுத்து எல்லா இடங்களிலும் அப்படியே அப்ளை செய்து கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்பு முகத்தை தண்ணீரில் நனைத்து கொண்டு உங்கள் கையை வைத்து வட்ட வடிவில் லேசாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட்டு, அதன் பின்பு உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள்.

இந்த பேக் போடுவதற்கு முன்பு இருந்த முகப் பொலிவுக்கும், இப்போது இருக்கக்கூடிய முகப்பொலிவுக்கும் நிச்சயமாக வித்தியாசம் தெரியும். 13 வயதிற்கு மேல் உள்ள ஆண் பெண் இருபாலரும் இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணலாம். டக்குன்னு ஒரு மணி நேரத்தில் வெளியே கிளம்ப போறீங்க. முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்றால், இந்த டிப்ஸ் உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் ‌
நிறைய பேருக்கு இந்த இடத்தில் சந்தேகம் வரும். ஃபேரன் லவ்லியை மட்டும் தான் பயன்படுத்த வேண்டுமா. அல்லது வேறு ஏதாவது கிரீமை பயன்படுத்தி கொள்ளலாமா என்று. மற்ற எந்த ஃபேர்னஸ் கிரீம் ஆக இருந்தாலும் நீங்கள் இந்த ஃபேஸ் பேக்காக பயன்படுத்திக்கொள்ளலாம். தினந்தோறும் உங்களுடைய சருமத்திற்கு எந்த கிரீம் போடுவீங்களா, அந்த கிரீமை ஃபேரன் லவ்லிக்கு பதிலாக யூஸ் பண்ணிக்கோங்க.

கடலைமாவு உங்களுக்கு அலர்ஜியாக இருந்தால், பயத்தமாவு பயன்படுத்தலாம். இப்படி சில மாற்றங்களை கொண்டும் இந்த ஃபேஸ் பேக்கை தயார்செய்து முகத்தில் போட்டு சருமத்தை பொலிவடைய செய்து கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. குறைந்த செலவில் உடனடி அழகை தரும் குறிப்பு இது.

- Advertisement -