ஜோதிடம் : வதந்திகள், ஆதாரமற்ற செய்திகள் பரவுவதற்கு காரணம் இது தான்

fake-news

ஒரு விடயத்தை பிறருக்கு தெரியப்படுத்தும் முன்பு அது உண்மைதானா என்றும் அதற்கு ஆதரமிருக்கிறதா என்றும் பார்ப்பது மிகவும் அவசியம். கடந்தாண்டு இப்படி ஆதாரமற்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி அதன் காரணமாக நாடு முழுவதும் சிலர் கொல்லப்பட்டதை நாம் அறிவோம். சமீபமாக இத்தகைய வதந்திகள் மக்களிடம் பரப்பபட்டு வருகின்றன. இதற்கான ஜோதிட ரீதியான விளக்கத்தை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

budhan

பேச்சாற்றலுக்கு காரகனாகிய புதன் கிரகம், அனைத்து ராசியினரையும் சற்று ஆட்டிப்படைக்கும் நிழற்கிரகமான ராகு ஆகிய இரு கிரகங்கள் கோட்சார உராய்வு தன்மை பெற்றுள்ளதால் நாடெங்கிலும் உண்மைக்கு புறம்பான வீண் வதந்திகள், ஆதாரமற்ற செய்திகள் ஆகியவை மக்களிடையேயும், ஊடங்கங்களிலும் பரவும் நிலை ஏற்படும் என்று துல்லியமாக கணித்து கூறியிருந்தனர் சில திறமை வாய்ந்த ஜோதிடர்கள்.

இதன் படி கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய விமான படை தாக்குதல் நடத்திய விவகாரம், சென்னை ரயில் நிலையதிற்கு போலி வெடிகுண்டு மிரட்டல், பந்திப்பூர் வன சரணாலயத்தில் காட்டு தீ குறித்த தகவல்கள் என பல விவகாரங்களில் ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான தகவல்கள் சமூக வலைத்தளங்கள், ஊடகங்களில் பரவி வருவதை நாம் பார்க்கிறோம்.

rahu 1

பிப்ரவரி 28 ஆம் தேதி புதன் ராகு கிரகங்களின் உராய்வு நிலை மாறுபடுவதால் மேற்கூறிய அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள் பரவுவது, உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகும் நிலை போன்ற நிலை மாறி விடும் எனவும் கூறுகின்றனர் திறமை வாய்ந்த அந்த ஜோதிடர்கள்.

இதையும் படிக்கலாமே:
நவகிரகத்தால் ஏற்படும் நோய்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Fake news Jothidam in Tamil. It is also called as Budhan graham in Tamil or Rahu graha in Tamil or Budhan rahu palan in Tamil or Budhan rahu in Tamil.