நாம் என்னதான் வீட்டை விட்டு வெளியே சென்று பலரை சந்தித்தாலும் நிம்மதியாக வந்து அமர்வதோ உறங்குவதோ நம்முடைய வீட்டில் தான். நிம்மதி என்பதற்கே வீடுதான் முக்கியமான காரணமாக திகழ்கிறது. யாராலும் வெளியில் செல்லும்பொழுது அவர்கள் இஷ்டப்படி நிம்மதியாக வாழ முடியாது. ஆனால் அவர்களுடைய சொந்த வீட்டில் மட்டும்தான் அவர்களின் இஷ்டப்படி நிம்மதியாக வாழ வேண்டும். அப்படிப்பட்ட வீட்டிற்குள் வந்தாலே சண்டை வந்து கொண்டிருக்கிறது, வீட்டில் இருப்பது மூன்று பேர் என்றால் மூன்று பேரும் மாற்றி மாற்றி சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நிம்மதியற்ற சூழ்நிலை இருக்கிறது என்பவர்கள் அந்த நிம்மதியற்ற சூழ்நிலையை மாற்றி சந்தோஷமான சூழ்நிலையாக ஆக்குவதற்கு கிருஷ்ண பகவானே எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
குடும்ப சண்டை தீர வழிபாடு
பெருமாளின் அவதாரங்களில் ஒன்றாக திகழ்வதுதான் கிருஷ்ணர் அவதாரம். கிருஷ்ணரை நாம் மனதார நினைத்து கிருஷ்ணா என்று கூப்பிட்டாலே அவர் ஓடி வந்துவிடுவார் என்று கூறப்படுகிறது. ஒரு சிறிய பொருளை அவருக்கு முழு அன்போடு தருவதன் மூலம் அவரது மனம் உகர்ந்து ஏற்றுக்கொண்டு நமக்கு நல்வழி காட்டுவார் என்றும் பல கதைகள் கூறி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அற்புதமான கிருஷ்ண பகவானை நாம் முழு மனதோடு வழிபாடு செய்தோம் என்றால் நம் வீட்டில் சந்தோஷத்திற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது.
இந்த வழிபாட்டை வியாழக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அருகில் கிருஷ்ணரின் ஆலயம் எங்கு இருக்கிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை ஆலயத்திற்கு சென்று தான் செய்ய வேண்டும். வீட்டில் செய்யக்கூடாது. இந்த ஆலயத்திற்கு செல்வதற்கு முன்பாக புதிதாக ஒரு மஞ்சள் நிற துணியை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் 11 துளசி இலைகளை வைத்து அதனுடன் மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பழத்தை வைக்க வேண்டும்.
உதாரணமாக மாம்பழம், வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒரு மஞ்சள் நிற பழத்தை வைத்து அதை அப்படியே எடுத்து கொண்டு கிருஷ்ணரின் ஆலயத்திற்கு சென்று அவரின் பாதங்களில் வைக்க அவருக்கு கொடுத்துவிட வேண்டும். பிறகு வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் பெயரை கூறி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 11 வாரங்கள் செய்யும் பொழுது கிருஷ்ண பகவானின் அருளால் அவர் எப்படி சந்தோஷமாக இருந்தாரோ அதேபோல் நம்முடைய குடும்பத்தையும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் மாற்றி விடுவார்.
இதையும் படிக்கலாமே:செல்வ வளம் பெருக முருகன் வழிபாடு
பெரிதும் செலவில்லாத இந்த எளிமையான வழிபாட்டு முறையை நாமும் பின்பற்றி நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் அனைத்தையும் நீக்கி மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.