- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ வளம் பெருக முருகன் வழிபாடு

செல்வ வளம் பெருக முருகன் வழிபாடு

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் செல்வ வளம் பெருக வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். இந்த செல்வ வளத்தை பெருக்குவதற்கு எந்த அளவிற்கு கடினமாக உழைக்கிறோமோ அதே அளவிற்கு தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுகிறோம். இப்படி கடினமாக உழைப்பதோடு தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடும்பொழுது நமக்கு நல்ல முன்னேற்றம் என்பது ஏற்படும். நியாயமான முறையில் சம்பாதிக்கும் பணமானது நம்மை விட்டு நீங்காமல் நம்மிடம் நிலையாக இருக்கவும், அதேசமயம் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும் முருகப்பெருமானை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செல்வ வளம் பெருக முருகன் வழிபாடு

இந்த கலியுகத்தில் முருகப்பெருமானின் வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட முருகப் பெருமானை நாம் கடன் தீருவதற்காகவும், சொந்த இடம் வாங்க வேண்டும் என்பதற்காகவும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், திருமண வரம் பெற வேண்டும் என்பதற்காகவும் பல வழிமுறைகளில் வழிபாடு செய்வோம். அந்த வகையில் செல்வ செழிப்பு உயர்வதற்கு செய்யக்கூடிய வழிப்பாட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

செல்வ செழிப்பு உயர வேண்டும், செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வார்கள். மகாலட்சுமி தாயாரை வெள்ளிக்கிழமையில் வழிபாடு செய்யும்பொழுது நல்ல பலன் கிடைக்கும். இதற்கு முக்கியமான காரணம் வெள்ளிக்கிழமை என்பது சுக்கிர பகவானுக்குரிய நாளாக திகழ்வதுதான். அப்படிப்பட்ட சுக்கிர பகவானுக்குரிய கிழமையில் முருகப்பெருமானை வழிபாடு செய்தாலும் நமக்கு செல்வ செழிப்பு என்பது ஏற்படும்.

வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று சுத்தமான பசு நெய்யை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். பிறகு முருகப்பெருமானுக்கு மல்லிகை பூக்களை வாங்கி கொடுத்து அவரை ஆறு முறை வலம் வந்து வணங்க வேண்டும். இப்படி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் நாம் வழிபாடு செய்துவர செல்வ செழிப்பு உயர்வதை நம்மால் கண்கூடாக காண முடியும்.

- Advertisement -

ஆலயத்திற்கு செல்ல இயலாது என்பவர்கள் தங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்திற்கு மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து உதிரி மல்லிகை பூக்களை வைத்து அர்ச்சனை செய்து வழிபாடு செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும். மேலும் முருகப் பெருமானை சரணாகதி அடைந்து வழிபாடு செய்யும் ஒவ்வொரு பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களை நல்ல நிலைக்கு உயர்த்த கூடியவராக தான் முருகப்பெருமான் திகழ்கிறார்.

கோவிலுக்கு சென்று வழிபாடு செய்பவர்கள் தங்களால் இயலும் பட்சத்தில் ஆறு தாமரை மலர்களை முருகப்பெருமானுக்கு வாங்கி கொடுத்து வழிபாடு செய்வது என்பது இன்னும் பல அற்புதமான பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது. தொழில் ரீதியாக ஏதாவது ஒரு செயலை செய்யப் போகிறோம் அந்த செயலில் வெற்றி அடைந்தால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் என்னும் பட்சத்தில் நாம் முருகப் பெருமானுக்கு ஆறு தாமரை மலர்களை வாங்கி கொடுத்து ஆறு நெய் தீபங்களை ஏற்றி வைத்து ஆறு முறை வலம் வந்து அங்கேயே அமர்ந்து கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து விட்டு சென்றோம் என்றால் அந்த காரியம் வெற்றிகரமாக நடைபெற்று அவர்களுடைய தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:ஆவணி முதல் வெள்ளி வழிபாடு
இந்த முறையில் ஆறு வாரங்கள் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை தோறும் முருகப்பெருமானுக்கு மல்லிகை பூக்களையும் தாமரை பூவையும் வாங்கி கொடுத்து வழிபாடு செய்பவர்களுக்கு செல்வ வளம் உயரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்