பிப்ரவரி மாத ராசி பலன் 2024 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

feb 2024
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உயர்வான மாதம் திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிகமான பண வரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். குழந்தை பாக்கியத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். முறையான உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்வதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையை தரும். குடும்ப விஷயத்தில் மூன்றாவது நபரின் தலையீட்டை தவிர்ப்பது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. தங்களின் வேலையை திறம்பட செய்வதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்று விரும்பிய சலுகைகளை பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைத்தாலும் அந்த லாபத்தால் பழைய கடனை தீர்க்கக் கூடிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். எதிரிகளின் தொல்லைகள் குறைய ஆரம்பிக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானையும் நந்தீஸ்வரனையும் வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முயற்சிகள் வெற்றி அடையும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிகமான பண வரவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் நலனில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு எடுப்பது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையில் கவனம் செலுத்தி உரிய நேரத்தில் முடிப்பது நன்மையை தரும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழிலில் இதுவரை வராமல் இருந்த நிலுவைத் தொகை வந்து சேரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொறுமையாக செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் அந்த வேலையை செய்து முடிப்பீர்கள். அதன் மூலமாக புதிய பொறுப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்காது. தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தக்க ஆலோசனை பெற்று முடிவுகளை எடுப்பது நன்மையை தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மாரியம்மன் வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் திருப்திகரமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் திடீர் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஒரு சிலர் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சுப நிகழ்வுகள் வீட்டில் நடைபெறும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. இதுவரை வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படும். தொழிலில் இருந்து வந்த போட்டிகள் குறைய ஆரம்பிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு குலதெய்வத்தை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிதானமாக செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்காமல் நிறுத்தி நிதானமாக யோசித்து எடுப்பது நன்மையை தரும். திருமண முயற்சிகள் வெற்றி அடையும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை குறைய ஆரம்பிக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்றுவதற்கு எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி அடையும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

வேலையை பொருத்தவரை நிதானமாக செயலாற்றுவது நன்மையை தரும். தங்களின் வேலையை தாங்களே பொறுப்புடன் செய்து முடிப்பதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியடையும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சனி பகவானை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தைரியத்துடன் செயலாற்றும் மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் செலவுகளும் அதிகமாகவே இருக்கும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறைய ஆரம்பிக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று கூடுதலாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் உண்டாக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள நினைப்பவர்கள் இந்த காலத்தை பயன்படுத்திக் கொண்டால் வெற்றி பெறுவார்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கோபத்தை தவிர்க்க வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிகமான பண வரவு ஏற்படும். அதே சமயம் செலவுகளும் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தாருடன் தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் ஒத்துழைத்து செயலாற்றி அந்த பணியை முடிப்பதன் மூலம் நன்மைகள் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க வேண்டும் என்றால் அதற்காக கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது கவனத்துடன் செயலாற்றுவது நன்மையை தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டகரமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவைவிட அதிகளவு பண வரவு ஏற்படும். வராது என்று நினைத்த பணமும் வந்து சேரும். உடல் நலனில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த காலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் புதிதாக முயற்சிகளை மேற்கொள்வதை மட்டும் தவிர்ப்பது நன்மையைத் தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பிரத்தியங்கரா தேவியை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உற்சாகத்துடன் செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு விபரீத ராஜயோகம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். பணரீதியான பரிவர்த்தனை செய்யும் பொழுது கவனமாக கையாள வேண்டும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். பொறுப்புடன் செய்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தங்களுக்கு கீழ் பணி புரிபவர்களை கண்காணிப்பது தொழிலை நஷ்டம் அடையாமல் பார்த்துக் கொள்ளும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றிகள் நிறைந்த மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். இருப்பினும் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புகளும் இருக்கிறது. உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சேமிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. கடினமான வேலையையும் எளிதில் செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்றுவதற்கான அடுத்த கட்ட முயற்சியை மேற்கொள்வீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வாராகி அன்னையை வழிபட வேண்டும்.

- Advertisement -