5 ரூபாய் செலவில், 5 நாட்களில், அழகுன்னா அழகு அப்படி ஒரு பேரழகை பெற இந்த 1 பொருள் போதும்.

face
- Advertisement -

நம்ம எல்லோர் வீட்டு சமையலறையிலும் இருக்கக்கூடிய மலிவாகக் கிடைக்கக்கூடிய வெந்தயம் போதும். உங்களுடைய சரும அழகையும் ஜொலி ஜொலிக்க வைக்கலாம். தலைமுடியையும் உதிராமல் பலபலக்க வைக்கலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். அதுவும் குறைந்த செலவில். வெந்தயத்தை வைத்து ரொம்ப ரொம்ப ஈசியான ரெமிடி உங்களுக்காக. அழகின் மீது ஆர்வம் உள்ளவர்கள் இந்த ரெமிடியை மிஸ் பண்ணாம தெரிஞ்சு வச்சுக்கோங்க.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் உதாரணத்திற்கு, 1 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, 2 டேபிள் ஸ்பூன் அளவு வெந்தயத்தை போட்டு அந்த தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள். வெந்தயத்தின் எசன்ஸ் முழுவதும் தண்ணீரில் இறங்கி, தண்ணீரின் நிறம் மாறும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த தண்ணீரை நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஆற வைத்த தண்ணீரை வடிகட்டி தண்ணீரை மட்டும் ஒரு ஸ்ப்ரே பாட்டில் அல்லது கண்ணாடி பாட்டில் அல்லது சில்வர் பாட்டிலில் ஊற்றி, மூடி போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிரிட்ஜில் வைத்தால் 10 நாட்கள் வரை இந்த தண்ணீர் கெட்டுப் போகாது. இந்தத் தண்ணீரை எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் உங்களுடைய முகத்தில் ஸ்பிரே செய்து கொள்ளலாம். முகத்தில் மேக்கப் இருக்கக்கூடாது. முகத்தை கழுவி விட்டு முகத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.

அப்படியே அந்த தண்ணீரை உங்களுடைய முகம் உறிஞ்சிக் கொள்ளும். அதன் பின்பு முகம் கழுவ வேண்டாம். அப்படியே விட்டுவிடலாம். இப்படி தினம்தோறும் முகத்தில் வெந்தயத் தண்ணீரை ஸ்ப்ரே செய்து வரும் போது, முகத்தில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளும், 5 நாட்களில் குறையத் தொடங்கும்.

- Advertisement -

பகலில் இந்த தண்ணீரை முகத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ள முடியாதவர்கள், இரவு தூங்கச் செல்லும் போது முகத்தை நன்றாக கழுவி விட்டு இந்த தண்ணீரை ஸ்பிரே செய்து விட்டு அப்படியே தூங்கலாம். மறுநாள் காலை எப்போதும் போல முகத்தை கழுவிக் கொள்ளுங்கள்.

இந்தத் தண்ணீரை உங்களுடைய தலைமுடிக்கும் ஸ்ப்ரே செய்து கொள்ளலாம். தலைக்கு குளிப்பதற்கு முன்பு 1 மணி நேரத்திற்கு முன்பாக இந்த தண்ணீரை உங்களுடைய தலையில், மண்டை ஓட்டில் படும்படி ஒரு காட்டன் பஞ்சில் அல்லது உங்கள் கையாலேயே தொட்டு நன்றாக தலையை மசாஜ் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்பு முடியின் மேல் பக்கத்தில் இருந்து கீழ்ப்பாக்கம் வரை இந்த தண்ணீரை ஸ்ப்ரே செய்துவிட்டு அப்படியே கொண்டை கட்டிக்கொள்ளுங்கள்.

30 நிமிடம் கழித்து தலைக்கு குளித்தால் முடி உதிர்வு குறையும். முடி பார்ப்பதற்கு பலபல வென ஷைனிங்காக இருக்கும். இவ்வளவு சிம்பிளான இந்த டிப்ஸ் உங்களுக்கு பிடித்திருந்தா நீங்க ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமாக உங்களுடைய அழகு மேலும் அழகாவதற்க்கு 100% கேரன்டி.

- Advertisement -