அத்திப்பழம் உடலுக்கு மட்டும் அல்ல தலைமுடிக்கும் பலம் கொடுக்கிறது தெரியுமா? பலம் இல்லாத உங்கள் கூந்தலை பலம் பெற செய்ய அத்திப்பழத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

athipalam-hair-mask
- Advertisement -

கூந்தலின் வறட்சி அதனை வேரோடு இழக்க செய்து விடுகிறது. கூந்தலை ஈரப்பதத்துடன் வைத்துக் கொண்டு வேரிலிருந்தே நன்கு பலமாக மாற்றக் கூடிய சத்துக்கள் அத்தனையும் அத்திப்பழத்தில் உண்டு. அத்திப்பழம் வெறும் உடலுக்கு நன்மைகள் செய்யவில்லை, நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. அப்படியான அத்திப்பழத்தை எப்படி தலைமுடிக்கு பயன்படுத்துவது? என்பதை தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பகுதியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒவ்வொரு விதமான பிரச்சினைகளால் தலைமுடி பிரச்சனைகளை எதிர்கொண்டு வருபவர்கள், அத்திப்பழத்தில் இருக்கும் நன்மைகளை பார்க்கலாம். அதில் ஏராளமான வைட்டமின்களும், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் இதர சத்துக்களும் நிரம்பியுள்ளன. இது அலற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இதனால் சேதுமடைந்த முடியை சூப்பராக சரி செய்து பலமடைய செய்யும்.

- Advertisement -

அத்திப்பழத்துடன் தேவையான அளவிற்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு பேஸ்ட் போல மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த விழுதினை தலை முழுவதும் தடவி நன்கு மசாஜ் செய்து கொண்டை போல கட்டிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து சாதாரண தண்ணீரில் தலைமுடியை அலசுங்கள். இது போல வாரம் ஒருமுறை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால், முடிக்கு ஈரப்பதம் கிடைத்து முடி வளர்ச்சியை தூண்டி விடுகிறது.

ரெண்டு அத்திப்பழத்துடன், ரெண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய முடியை பகுதி பகுதியாக பிரித்து தலை முடி முழுவதும் அத்திப்பழத்தின் இந்த விழுதை தடவி கொண்டை போல கட்டிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் அலசி வர தலைமுடி பஞ்சு போல மிருதுவாக மாறும். தலைமுடிக்கு நல்ல ஒரு சத்து கிடைத்து வலிமையும் உண்டாகும்.

- Advertisement -

தலைமுடிக்கு வலிமை தேவை. வலிமையை இழக்கும் பொழுது தான் முடி வேருடன் உதிர்கிறது. மேலும் உடைந்து போகவும் செய்கிறது. இரட்டை பிளவு உள்ள முடிகளுக்கு கூட அத்திப்பழம் சிறந்த ஒரு நிவாரணமாக இருக்கும். நுனி முடியில் இரட்டை பிளவுகள் இருந்தால், அவ்வப்பொழுது தலை முடியை ஒரு இன்ச் அளவிற்கு வெட்டி விடுங்கள். அதன் பிறகு இந்த அத்திப்பழத்தை நன்கு பேஸ்ட் போல அரைத்து அதனுடன் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து பீட் செய்ய வேண்டும். பின்னர் தலைமுடி முழுவதும் தடவி அதனை உலர விட்டு கழுவினால், நுனி மூடி பிளவுகள் இல்லாமல், முடிக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்து கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
முகப்பரு வந்தால் இந்த 3 விஷயங்களை மட்டும் செய்யவே செய்யாதீர்கள்! முகப்பரு வந்த வடு கூட தெரியாமல் ஓடிப் போய்விடும்.

அத்திப்பழத்துடன் உளுந்த மாவை சேர்த்து நைசாக அரைத்து அதையும் தலை முழுவதும் தடவிக் கொள்ளலாம். உச்சந்தலை முதல் நுனி வர எல்லா இடங்களிலும் தடவி தலையை கட்டிக் கொள்ளுங்கள். பிறகு அரைமணி நேரம் கழித்து மைல்டான ஷாம்பு கொண்டு தலை முடியை சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை தலைமுடியை அலசுவதும், அதற்கு இயற்கையான மாஸ்க்குகளை பயன்படுத்தி அலசுவதும் தேவை. அது போல தினமும் ஒரு பத்து நிமிடம் ஆவது தலை முடியை மசாஜ் செய்து விடவும். இதனால் ரத்த ஓட்டம் சீராகி முடி வளர்ச்சி தூண்டப்படுகிறது. இழந்த முடியை மீண்டும் அடைய இந்த முயற்சிகளை மேற்கொண்டால் விரைவிலேயே நல்ல பலன் காணலாம்.

- Advertisement -