முகப்பரு வந்தால் இந்த 3 விஷயங்களை மட்டும் செய்யவே செய்யாதீர்கள்! முகப்பரு வந்த வடு கூட தெரியாமல் ஓடிப் போய்விடும்.

muga-paru-katralai
- Advertisement -

இளம் வயதினருக்கு வரக்கூடிய இந்த முகப்பரு பிரச்சனை ரொம்ப எளிதாக கையாளுவது நல்லது. முகப்பரு வந்துவிட்டது என்று பதட்டப்பட்டு ஏதேதோ செய்வதை விட, அதை பாதுகாப்பாக விரட்டி அடிப்பது ஆரோக்கியம் தரும். முகப்பருவிலிருந்து நிவாரணம் காண முதலில் முகப்பருக்களை விரட்டி அடிக்க கெமிக்கல் பொருட்களை உபயோகிக்க கூடாது. இயற்கையான முறையில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து எப்படி முகப்பருக்களை விரட்டி அடிப்பது? முகப்பரு வந்தால் செய்யக்கூடாத 3 விஷயங்கள் என்னென்ன? என்பதை தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த விஷயங்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முகப்பரு வந்துவிட்டது என்று தெரிந்த உடனேயே முதலில் கற்றாழை மடலில் இருக்கக்கூடிய ஜெல்லை நன்கு ஆறேழு முறை அலசி அதை கைகளால் பிசைந்து முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். பரு வந்த இடத்தில் மட்டுமல்லாமல் முகம் முழுவதும் கூட நீங்கள் தடவிக் கொள்ளலாம். இது முகப்பருவை பெரிதாக்காமல் அதே நிலையில் வைத்திருக்க உதவி செய்யும்.

- Advertisement -

முகப்பருவை விரட்டி அடிக்கிறேன் என்கிற பெயரில் ஏதாவது நீங்கள் செய்யப் போனால் முகப்பருவின் தழும்புகள் அப்படியே பதிந்துவிடும். அது கருப்பாக மாறி முகத்தின் அழகை கெடுத்து விடவும் வாய்ப்புகள் உண்டு. எனவே பரு வந்தவுடன் அதில் சம்ஸ்கிரீன் தடவி வையுங்கள். இதனால் கருப்பாக மாறாமல் வடுவாகாமல் சுத்தமாக வேருடன் அதுவாகவே சென்றுவிடும்.

முகப்பரு வந்ததும் அடிக்கடி பார்லருக்கு செல்ல வேண்டாம். சேவிங் செய்வது, ஐப்ரோ, த்ரெட்டிங் போன்றவற்றை செய்தால் நம்மை அறியாமல் முகப்பருக்கள் உடைந்து விட வாய்ப்புகள் உண்டு. இதனால் பல்வேறு இடங்களுக்கும் முகப்பருக்கள் பரவும் அபாயம் இருக்கிறது. அடிக்கடி கைகளை முகத்திற்கு கொண்டு போக கூடாது. கைகளை சுத்தமாக சோப்பு போட்டு அடிக்கடி கழுவ வேண்டும். முகப்பருக்கள் வந்தால் சிலர் பூண்டு வைத்து அதை விரட்டி அடிக்க முயற்சி செய்வார்கள். இது முகப்பருக்களை குறைக்க செய்யாது, அதிகப்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

மேலும் அதில் டூத் பேஸ்ட் போன்றவற்றை வைப்பதும் தவறான முறையாகும். இந்த விஷயங்களை எல்லாம் கையாளாமல் இருப்பது நல்லது. இதற்கு பதில் இயற்கையாக அதிக வீரியம் இல்லாத உருளைக் கிழங்கின் சாற்றை முகப்பரு இருக்கும் இடங்களில் தடவி விட்டால் முகம் பரு வந்த இடம் தெரியாமல் அதுவாகவே அமுங்கி விடும். அந்த இடம் கருப்பாகவும் மாறாது. வலி உள்ள முகப்பருவில் சுத்தமான மஞ்சள் தூளை வைத்து அழுத்தி விடுங்கள், இதனாலும் முகப்பருக்களின் வடுக்கள் உண்டாகாமல் தடுக்கப்படும்.

இதையும் படிக்கலாமே:
உங்களுடைய கன்னங்கள் எப்போதும் பேபி சாஃப்ட் கன்னங்களாகவே இருக்க வேண்டுமா? இந்த ஒரு ஐஸ் கட்டி இருந்தால் போதும். மாசு மறு இல்லாத பளபளக்கும் பளிங்கு கன்னங்களை பெறலாம்.

முகப்பருவை விரட்டியடிக்க கூடிய அற்புதமான ஒரு பொருள் ஜாதிக்காய். ஜாதிக்காயை மஞ்சளை இழைக்கும் கல்லில் போட்டு இழைத்து அதன் விழுதை முகப்பரு உள்ள இடங்களில் எல்லாம் தடவி நன்கு உலர விட்டு விடலாம். அதன் பிறகு முகத்தை குளிர்ந்த நீரினால் கழிவினால் முகப்பருக்கள் வந்த இடம் தெரியாமல் மாயமாய் தானாகவே மறைந்து போய்விடும். இப்படி இயற்கையான முறையில் முகப் பருக்களை விரட்டி அடிக்க முயற்சி செய்யுங்கள். அதன் வடுக்கள் நாளடைவில் உங்களை தொந்தரவு செய்யாமல் இருக்கும்.

- Advertisement -