ஆஸ்திரேலிய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஆஸி கேப்டன்! ஏன் தெரியுமா?

labus-1

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 2 போட்டிகளை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 2 போட்டியில் வென்றுள்ளது. இதனால் இந்திய அணி (2-1) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

finch 1

தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற உள்ளது. அந்த அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டனான பின்ச் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்த தொடர் முழுவதும் பின்ச் சரியாக ஆடவில்லை. மேலும் துவக்க ஜோடி நல்ல துவக்கத்தினை அளித்தால் தான் பின்வரிசை வீரர்கள் நிலைத்து நின்று ஆட முடியும். இந்த தொடர் முழுவது அவர் புதிய பந்துகளை துவக்கத்திலேயே அடிக்க திணறி வருகிறார். இதனால் அவரது விக்கெட்டும் எளிதாக விழுகிறது.

finch

எனவே பின்ச் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணியில் இளம் ஆல்ரவுண்டர் வீரரான மிச்சல் மார்ஷ் அவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது ஆட்டமும் இந்த தொடரில் எடுபடவில்லை. எனவே இந்த மாற்றங்களை அணி நிர்வாகம் கொண்டுவந்துள்ளது.

இதையும் படிக்கலாமே :

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன்! இவரா ?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்