ரோஹித்தை இதற்காக தான் சீண்டினோம் – ஆரோன் பின்ச் விளக்கம்

finch

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் மற்றும் இந்திய கேப்டன் கோலிக்கும் இடையே வார்த்தை போர் நடந்தது. தற்போது மீண்டும் ஆஸ்திரேலிய அணி நடந்தது. இந்திய அணியின் அதிரடி வீரரான ரோஹித் சர்மாவினை சீண்டும் விதமாக பேசிவருகிறார். ரோஹித் சர்மா பேட்டிங் செய்யும் போது ஸ்டம்புக்கு பின்னால் இருந்து ரோஹித் சர்மாவினை பார்த்து அவரது பேட்டிங் குறித்து விமர்சித்தார்.

rohit-3

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரரான ஆரோன் பின்ச் ரோஹித்தை சீண்டியதன் காரணத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது : பெயின் மட்டுமல்ல நானும் ரோஹித்தை சீண்டினேன். ரோஹித் விளையாடும்போது மிட் ஆனில் பீல்டரை நிறுத்துகிறேன் தூக்கி அடிக்கிறாயா என்று கேட்டேன். அதற்கு ரோஹித் பதில் சொல்லாமல் தொடர்ந்து ஆடினார்.

மேலும் IPL மோடுக்கு மாறுங்க ரோஹித் இந்த பேட்டிங் ஸ்டைல் உங்களுடையது அல்ல என்றும் அவரை உசுப்பினேன். இவைகள் மூலம் ரோஹித் பொறுமை இழந்து தூக்கி அடித்து அவுட் ஆவார் என்று நினைத்து செய்தோம். ஆனால், ரோஹித் நிதானமாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேசமயம் அவரின் எளிதான கேட்ச் ஒன்றையும் கோட்டை விட்டோம் என்று ஆரோன் பின்ச் தெரிவித்தார்.

rohit-2

இந்நிலையில் நாளை மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆஸ்திரேலிய வீரர்களை இந்திய அணி எதிர்கொள்ளும் விதத்தினை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இதையும் படிக்கலாமே :

ஆஸ்திரேலிய வாழ் இந்திய சிறுவனின் ஆசையை நிறைவேற்ற கோலி செய்த செயல். வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்