ஆஸ்திரேலிய வாழ் இந்திய சிறுவனின் ஆசையை நிறைவேற்ற கோலி செய்த செயல். வீடியோ

koli

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமான வீரராக அனல் வீசுவார். ஆனால், களத்திற்கு வெளியே அவரது செயல்கள் பெருமளவில் அவரது ரசிகர்களால் கவரப்பட்ட செயல்களாகவே உள்ளன. குறிப்பாக எந்த நாட்டு ரசிகர்கள் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டாலும் தயங்காமல் சென்று ஆட்டோகிராப் போடுவார்.

koli 2

மேலும் ரசிகர்களுடன் செல்பீ எடுக்கும் வழக்கமும் கோலிக்கு உண்டு. இது போன்ற நிகழ்வுகளை நாம் நிறைய கெல்பட்டு இருப்போம். இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் ஹோட்டலில் இருந்து கிளம்பியது இந்திய அணி. அப்போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் கோலியினை பார்த்த மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

அதில் ஒரு ஆஸ்திரேலிய வாழ் இந்திய சிறுவன் கோலியை ஹிந்தியில் அழைத்தான். உடனே கோலி அந்த சிறுவனின் அருகில் சென்று சிரித்தபடி அவனுக்கு ஆட்டோகிராப் போடு கொடுத்தார். பின்பு அந்த சிறுவன் நான் உங்களுக்கு பரிசாக ஒரு பொருளை வைத்துள்ளேன், இது உங்களுக்கு தான் வாங்கி கொள்ளுங்கள் என்றான்.

உடனே கோலி அதனை பெற்றுக்கொண்டு அனைவர்க்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்தினை தெரிவித்து விட்டு பஸ்சில் ஏறினார். ரசிகர்களின் ஆசைக்காக எப்போதும் சில நேரத்தினை ஒதுக்கி அவர்களின் ஆசையை நிறைவேற்ற கோலி எப்போதும் தவறுவதில்லை என்பதற்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

இதையும் படிக்கலாமே :

இவரது ஆட்டம் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தராது – பாண்டிங் சர்ச்சை பேட்டி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்