Ind vs Aus ODI : நாங்கள் இந்த தொடரை வென்றாலும், உ.கோ தொடரில் இந்திய அணிக்கு தான் அதிகமான வாய்ப்பு – பின்ச் பேட்டி

Finch
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி நேற்று டெல்லியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 272 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக கவாஜா 100 ரன்களை அடித்தார்.

Toss

பிறகு 273 ரன்கள் என்ற இலக்கினை எதிர்த்து ஆடிய இந்திய அணி 237 ரன்களை மட்டுமே அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்து தொடரை கோட்டை விட்டது. இந்த வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்தார்.

- Advertisement -

அதில் பேசிய பின்ச் : இந்த வெற்றி எங்களால் நம்ப முடியாத வெற்றியாகவே நான் கருதுகிறேன். சிறப்பாக விளையாடி இந்த தொடரை எங்களது அணி வீரர்கள் பெற்று தந்தனர். கவாஜா இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும், இந்திய அணியின் வீரர்களான குல்தீப், சாஹல் மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்திய அணிக்கு கிடைத்த அருமையான வீரர்கள் ஆவர்.

Cup

மேலும், உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி எங்களை தோற்கடிக்கும் வலிமையுடையதே என்று நான் கருதுகிறேன். மேலும், உலகக்கோப்பை தொடரை வெல்லும் வாய்ப்பும் இந்திய அணிக்கு உள்ளது. இந்த தொடர் வெற்றியை எங்களால் நம்பமுடியவில்லை. இந்திய அணியை இந்திய மண்ணில் வீழ்த்தியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது என்று கூறினார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Virat Kohli : தோல்விக்கு காரணம் இதுதான். வேறு எதையும் நான் கூற விரும்பவில்லை – கோலி ஓபன் டாக்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -