ருத்ராட்சம் போலியானதா? உண்மையானதா? கண்டுபிடிக்க எளிமையான வழி.

ruthratcham

ருத்ராட்சம் என்றாலே ஒரு புனிதமான பொருள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இதை அணிந்து கொள்வதால் நம் உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மன உறுதி, நம்பிக்கை, இவற்றுடன் சேர்ந்து நேர்மறையான ஆற்றலும் நமக்கு கிடைக்கின்றது. பொதுவாக ஒரு பொருளுக்கான மதிப்பானது மக்களிடையே அதிகரித்துக்கொண்டு வருகின்றது என்றாலே அதற்கு இணையான போலி பொருட்கள் விற்பனைக்கு வந்துவிடும். இந்த கூற்றானது ருத்ராட்சத்திற்கும் பொருந்தும். ருத்ராட்சத்தின் அருமை பெருமைகளை மக்கள் தெரிந்து கொள்ள ஆரம்பித்த பிறகு அதை அதிகமாக வாங்கி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அதிக பணத்திற்காக ஆசைப்படும் சிலர் இந்த ருத்ராட்சத்தை போலியாக தயார் செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி இன்றளவும் விற்பனை செய்து வருகின்றனர். புனிதமான ருத்ராட்சத்தினை, போலியில்லாத ருத்ராட்சமாக எப்படி வாங்குவது என்பதை பற்றிதான் இந்த பதிவில் காணப் போகின்றோம்.

ruthratcham

ருத்ராட்சம் போலியானதா என்பதை கண்டறிய, இரண்டு செப்பு நாணயங்களுக்கு இடையில் ருத்ராட்சத்தை வைத்தால் ருத்ராட்சமானது சுற்றினால் அது போலி அல்ல என்று சிலர் கூறுவார்கள். இந்த இரண்டு செப்பு நாணயங்களுக்கு இடையில் ஒரு கோலி குண்டினை வைத்தால் கூட அதை சுத்த தான் செய்யும். இதனால் இதை நம்ப வேண்டாம்.

சிலர் ஒரு டம்ளர் தண்ணீரில் ருத்ராட்சத்தை போட்டு அது மிதந்தால் போலியானது என்று கூறுவார்கள். இதுவும் பொய்யான கூற்று தான். இதையும் நம்ப வேண்டாம்.

ruthratcham

ருத்ராட்சத்தை உண்மையான ருத்ராட்சம் தான் என்று கண்டறிவதற்கு உண்டான ஒரேவழி அதனை இரண்டு துண்டுகளாக வெட்டி பார்ப்பதுதான். நீங்கள் வாங்கும் ருத்ராட்சமானது ஐந்து முகங்களாக இருந்தால், அதன் உள்பகுதியில் ஐந்து துவாரங்கள் இருக்கும். ஆறு முகங்களாக இருந்தால் அதன் உள்பகுதியில் ஆறு துவாரங்கள் இருக்கும். இப்படி இருந்தால் மட்டுமே அது உண்மையான ருத்ராட்சம்.

- Advertisement -

ஆனால் அதிகமான விலையைக் கொடுத்து நாம் வாங்கும் அந்த ருத்ராட்சத்தை இப்படி வெட்டி பார்ப்பது என்பது முடியாத காரியம். இதன் மூலம் நீங்கள் இந்த ருத்ராட்சத்தை ஸ்கேனிங் செய்து அதன் உள்ளே உள்ள துவாரங்களை பார்ப்பது தான் ஒரே ஒரு வழி. கணினி ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு அதற்கான சான்றிதழுடன் ருத்ராட்சத்தினை வாங்கினால் மட்டுமே ஏமாறாமல் இருக்க முடியும். ருத்ராட்சத்தை நீங்கள் வாங்குவதாக இருந்தால் நம்பத் தகுந்த நம்பிக்கையான ஒரு மனிதராக இருந்தால் மட்டுமே அவரிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம். முன்பின் அறிமுகம் இல்லாத கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து வாங்கும் ருத்ராட்சமானது போலியாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

ruthratcham

ருத்ராட்ச வகைகளில் மொத்தமாக 21 முகங்கள் வரை உள்ளது. ஆனால் தற்போது நடைமுறையில் 12 அல்லது 14 முகங்கள் கொண்ட ருத்ராட்சம் வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதிகப்படியான மக்கள் ஒரு முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். காரணம் இந்த ஒரு முக ருத்ராட்சத்துக்கு இருக்கும் சக்தியானது மிக அதிகம். ஆனால் இந்த ஒரு முக ருத்ராட்சமானது கிடைப்பது என்பது மிகவும் அறிது. இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பாகவே இந்த ஒரு முக ருத்ராட்சத்துக்கு முன்பதிவு செய்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனால் இந்த ஒரு முக ருத்ராட்சமானது விற்பனைக்கு வருவது என்பது மிகவும் அறிது தான். நமக்கு நன்மை தருவதற்காக வாங்கக்கூடிய பொருளை அதிக விலை கொடுத்து எதற்காக போலியாக வாங்க வேண்டும்? போலியான அந்த ருத்ராட்சத்தின் மூலம் நமக்கு எந்த பயனும் இல்லை. சிந்தித்து உண்மையான ருத்ராட்சத்தை வாங்கி அணிந்து கொள்வதற்கு இந்த பதிவானது உங்களுக்கு உபயோகம் உள்ளதாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

English Overview:
Here we have Finding original ruthratcham. Finding fake ruthratcha. How to find ruthratcham is original or not. Ruthratcham details in Tamil.