காய்ந்து போன ரோஜா செடியில் மீண்டும் புத்தம் புதிய துளிர்கள் வர இந்த விதை 1 போதுமே! ஒரே வாரத்தில் கிளை முழுவதும் இலைகள் பூத்துக் குலுங்கும்!

flax-seeds-rose-plant
- Advertisement -

இப்போது அடிக்கும் வெயிலுக்கு அனைத்து செடிகளும் வாடி வதங்கிப் போய் விடுகின்றன. அதிலும் குறிப்பாக நாம் ஆசை ஆசையாக வளர்க்கும் ரோஜா செடியில் இலைகள் முழுவதும் கருகுவதை பார்த்திருப்போம். கருகிப் போன இலைகளை முழுவதுமாக வெட்டி விடுங்கள். அதன் பிறகு விரைவாக துளிர்விட என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

rose2

காய்ந்து போன ரோஜா செடியில் மீண்டும் துளிர் வருவதற்கு ரோஜா செடியின் வேர் பகுதியை சுற்றிலும் இருக்கும் தேவையில்லாத கிளைகளை அகற்றி விட வேண்டும். குட்டி குட்டியாக வளர்ந்திருக்கும் எந்த வகையான செடிகள் ஆக இருந்தாலும் ரோஜா செடியை சுற்றிலும் அது இருக்கக் கூடாது. தேவையில்லாத செடிகளை பிடுங்கி எடுத்து விடுங்கள். மண்ணை எப்பொழுதும் தளர்வாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் மண் சுலபமாக ஆக்ஸிஜனை உட்கொண்டு செடியை நன்கு வளர செய்யும். செடியில் இருக்கும் காய்ந்து போன இலைகளை முழுவதுமாக நீக்கி மலர்களை மட்டும் விட்டு வைத்து விடுங்கள்.

- Advertisement -

ஆளி விதை சிறிதளவு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதனை மிக்ஸியில் நன்கு அரைத்து பவுடர் ஆக மாற்றி கொள்ளுங்கள். இந்த பவுடரை நேரடியாக நீங்கள் உங்களுடைய ரோஜா செடிகளுக்கு வேர் பகுதியை சுற்றிலும் மண்ணை நன்கு கிளறி விட்டு போட்டு விட வேண்டும். பின்னர் மீண்டும் மண் கலவையை நன்கு கிளறி விட்டு பூச்சிகள் வராமல் இருக்க பெருங்காயத்தூள் சிறிதளவு தூவி விட்டு பின்னர் தண்ணீர் தேவையான அளவிற்கு ஊற்றி விடுங்கள். இதில் கிடைக்கப்படும் நைட்ரஜன் சத்து செடிகளை விரைவாக ஒரே வாரத்தில் அனைத்து கிளைகளிலும் இலைகளை பூத்துக்குலுங்க செய்துவிடும்.

flax-seed

மேலும் ஆளி விதைகளை முந்தைய நாள் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் அதன் தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீருடன் சம அளவிற்கு சாதாரண தண்ணீர் சேர்த்து செடி கொடிகளுக்கு ஊற்றி வந்தால் வாடி வதங்கிய செடிகள் கூட மீண்டும் புத்தம் புதிதாக சிரித்தபடி மலரும் துவங்கிவிடும்.

- Advertisement -

ஆளி விதையில் இருக்கும் கொழகொழப்பு தனிமை செடி வகைகளுக்கு அற்புதமான வளர்ச்சியைக் கொடுக்கும். மீதம் வைத்திருக்கும் ஆளி விதைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பின்னர் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரையும் நீங்கள் ஆற வைத்து சாதாரண தண்ணீருடன் சமபங்கு அளவிற்கு சேர்த்து ரோஜா செடிகளில் ஊற்றி வந்தால் அதில் இருக்கும் சத்துக்கள் இலைகளை வேகமாக வளரச் செய்து ஒரே கிளையில் அதிகமாக பூக்க வைக்கும் ஆற்றல் உண்டாகும்.

ஆளி விதையில் இருக்கும் நைட்ரஜன் மற்றும் இதர சத்துக்கள் செடிகளுக்கு மட்டுமல்ல நம்முடைய உடலிற்கும் அதிகமாக பயன்தரக் கூடியவையாக உள்ளன. நீங்கள் வேக வைத்து வடிகட்டி எடுத்து வைத்திருக்கும் கொழகொழப்பு தன்மை உள்ள தண்ணீரை தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடி பேன், பொடுகு இன்றி ஆரோக்கியமாக இருக்கும். மேலும் வேகவைத்து ஆளி விதைகளை நீங்கள் உணவாக சமைத்து சாப்பிட்டு விடலாம், வீணாக்க தேவையில்லை. இப்படியாக ஆளி விதைகளை பயன்படுத்தி ரோஜா செடியை செழிப்பாக வளர செய்வதற்கு இந்த குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நம்புகிறோம்.

- Advertisement -