இந்த இட்லி பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் கருமையான முடியும், அழகான சருமமும் கிடைக்கும். அழகுக்கு அழகு சேர்க்கும் ஆளி விதை இட்லி பொடி.

flax-seed
- Advertisement -

அழகுக்கு கூடுதல் அழகு சேர்க்க இந்த ஆளி விதையை நம்முடைய உணவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். சில அழகுக் குறிப்புகளும் இந்த ஆளி விதையை பயன்படுத்துவார்கள். ஆளி விதையில் சுலபமாக இட்லி பொடி எப்படி அரைப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ஆளி விதை வெறும் அழகுக்காக மட்டுமல்ல நம்முடைய உடம்பில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதயத்தை சீராக இயங்க வைக்கவும் உதவி புரிகின்றது.

ஆங்கிலத்தில் இதை Flax seeds என்று சொல்லுவார்கள். ஆரோக்கியமான இந்த ரெசிபியை யாரும் மிஸ் பண்ணாதிங்க. ஆளி விதை இப்போது நிறைய டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடலைப்பருப்பு – 1/4 கப், உளுத்தம்பருப்பு – 1/4 கப் போட்டு இரண்டையும் எண்ணெய் எதுவும் ஊற்றாமல் பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் மாற்றிக்கொள்ள வேண்டும். அதன் பின்பு அதே கடாயில் 1 கப் – ஆளி விதையை போட்டு வறுக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும். கருகாமல் வறுக்கும்போது ஆளி விதை படபடவென பொரிந்து வரும் போது இதையும் தட்டில் கொட்டி கொள்ளுங்கள்.

அடுத்து அதே கடாயில் வரமிளகாய் – 10, பூண்டு பல் – 10, சீரகம் – 1 ஸ்பூன், சிறிய எலுமிச்சை அளவு – புளி, இந்த பொருட்களை எல்லாம் போட்டு வறுக்க வேண்டும். புளியை சிறிய சிறிய துண்டுகளாக பிரித்து போட்டுக் கொள்ளுங்கள். வருத்த இந்த பொருட்களையும் தட்டில் மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது வறுபட்ட பொருட்கள் எல்லாம் நன்றாக ஆறட்டும்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரில் வறுபட்ட பொருட்களை எல்லாம் போட்டு பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், வெல்லம் – 1 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு, போட்டு இந்த பொடியை நைசாகவும் அரைத்துக் கொள்ளலாம். கொஞ்சம் கொரகொரப்பாகவும் அரைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். இந்தப் பொடி புளிப்பு இனிப்பு காரம் சேர்ந்த சுவையில் நமக்கு கிடைக்கும். அப்போதுதான் இதனுடைய சுவை அசத்தலாக இருக்கும். வெள்ளத்தை மிஸ் பண்ணாம சேர்த்து அரைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வளவு தான். நமக்கு தேவையான பொடி தயார். சுடச்சுட சாதத்தில் நெய் விட்டு இந்த பொடி போட்டு பிசைந்தும் சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் இட்லி தோசைக்கு இந்த பொடியில் நல்லெண்ணெ விட்டு கலந்து தொட்டு சாப்பிட்டு கொள்ளலாம். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியத்திற்கு இந்த குறிப்பு பயனுள்ளதாக அமையும்.

- Advertisement -