தேங்காய் நார் போல டிரையாக இருக்கும் முடியை கூட, ஒரே நிமிடத்தில் சாஃப்டாக சில்கியாக மாத்திடலாம். இந்த ஒரு பொருளை வைத்தே.

hair20
- Advertisement -

நிறைய பேருக்கு முடி தேங்காய் நார் போல ட்ரையாக இருக்கும். பார்ப்பதற்கே அழகாக இருக்காது. வறட்சியான வெடிப்புகள் விட்ட முடியை சரி செய்ய இரண்டு குறிப்புகளை இந்த பதிவின் மூலம் நாம் பார்க்கப் போகின்றோம். இந்த இரண்டு குறிப்புகளையும் தொடர்ந்து பின்பற்றி வந்தால் நிரந்தரமாகவே உங்களுடைய தலைமுடி சாஃப்ட் ஷைனியாக மாறிவிடும். குறிப்பை இரண்டு அல்லது மூன்று முறை பின்பற்றி பார்த்துவிட்டு இது நமக்கு செட் ஆகாது என்று விடாதீங்க. தொடர்ந்து 7 நாட்கள் ட்ரை பண்ணி பாருங்க. நம்ப முடியாத ரிசல்ட்டை காணலாம்.

flex-gel1

குறிப்பு 1:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பழுத்த வாழைப்பழம் 1 தோல் உரித்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி போட்டுக் கொள்ள வேண்டும். இதில் 2 டேபிள்ஸ்பூன் தயிர் ஊற்றி, பேஸ்ட் ஆக மொழு மொழு என்று அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு தனியாக கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். இது கொஞ்சம் திக்கான பேஸ்ட்டாக தான் இருக்கும். இன்னும் கொஞ்சம் தேவையான அளவு கட்டி தயிரை ஊற்றி, கூடவே 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி இதை நன்றாக கலக்க வேண்டும். நமக்கு தேவையான ஹேர் தயார்.

- Advertisement -

உங்களுடைய முடியில் இதை முழுவதுமாக அப்ளை செய்து விட்டு 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போடாமல் தலைக்கு குளித்து விடுங்கள். உங்களுடைய முடியில் வரும் சைனிங்கை நீங்களே பார்க்கலாம். இந்த குறிப்புக்கான ரிசல்ட் உடனடியாக தெரியும். ஆனால் நிரந்தரமாக இருக்காது. வாரத்தில் ஒரு நாள் இந்த பேக்கை பயன்படுத்தி வந்தால் முடியில் வெடிப்பு வறண்ட தன்மை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்விடும்.

flax-seed

குறிப்பு 2:
இதற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் flex seed. தமிழில் இதை ஆளி விதை என்று சொல்லுவார்கள். தலைமுடியை அழகாக பராமரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது கட்டாயம் தெரிந்திருக்கும். இதை வைத்து ஒரு குறிப்பு. ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் அளவு ஆளி விதைகளை போட்டு, 4 கப் அளவு தண்ணீரை ஊற்றி, இதை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்து வரும்போது இது கொழ கொழவென நமக்கு கிடைக்கும். ரொம்பவும் திக்காக வேண்டாம். கொஞ்சம் தளதள பதத்தில் வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு, இதை கை பொறுக்கும் சூடு வரும் வரை ஆற வைத்து, ஒரு மெலிசான துணியில் ஊற்றி வடிகட்டி, உங்கள் கையைக் கொண்டு நன்றாக பிழிந்து எடுத்தால் ஒரு ஜெல் நமக்கு கிடைத்திருக்கும். அதை பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். (நீங்கள் காய்ச்சிய ஆளி விதை விழுது விழுது ரொம்பவும் ஆறிவிட்டால் திக்காகிவிடும். ஜெல் பிழிந்து எடுக்க முடியாது. மறுபடியும் அடுப்பில் வைத்து சூடு செய்ற மாதிரி இருக்கும் பார்த்துக்கோங்க.)

- Advertisement -

இந்த ஜல்லை தினம்தோறும் தொடர்ந்து 7 நாட்கள் உங்களுடைய தலையில் அப்ளை செய்ய வேண்டும். முதலில் மயிர் கால்களில் படும்படி அப்ளை செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு முடியின் நுனி பாகம் வரை அப்ளை செய்து விட்டு, 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். குறிப்பாக 7 நாட்களும் தலைக்கு ஷாம்பு சீயக்காய் போட்டு குளிக்க கூடாது. வெறும் தண்ணீரில் தலையை அலசி விடுங்கள்.

flax-seed

இப்படி செய்யும்போது உங்களுடைய தலைமுடி லேசாக பிசுபிசுப்பாக இருக்கத்தான் செய்யும். ஏழாவது நாள் ரிசல்ட்டை பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். அந்த அளவிற்கு உங்களுடைய முடியில் இருக்கும் வறட்சித் தன்மை குறித்து இருக்கும். முடியின் இருக்கக்கூடிய வெடிப்புகள் குறைந்திருக்கும். ஏழு நாள் இந்த சேலஞ்ச் நீங்க ட்ரை பண்ணி பாருங்க. பிறகு இந்த டிப்ஸ் எவ்வளவு பயன் உள்ளது என்பது உங்களுக்கே புரியும்.

- Advertisement -