சொன்னா நம்ப மாட்டீங்க! உங்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் கால் பாத வெடிப்பு 1 இரவில் சரியாகிவிடும். இந்தப் பொருளை வைத்து கால்வெடிப்பை எப்படிங்க சரி செய்யறது?

நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு குறிப்பை தான், இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நிறைய பேருக்கு குதிகால் வெடிப்புகள் இருக்கும். அழகான செருப்புகளை அணிந்து கொள்ள வேண்டும் என்றால், நம்முடைய குதிகால்கள் அழகாக இருக்கவேண்டும். ஒருவருடைய முகம் மட்டும் ஒருவருக்கு முழுமையான அழகை கொடுத்துவிட முடியாது. உச்சந்தலை முதல் பாதம் வரை சீரான உடல் நிலையும், ஒருவித அழகு தான். சரி, இந்த குதிகால் வெடிப்பை போக்குவதற்கு வித்தியாசமான முறையில் ஒரு தீர்வை இன்று தெரிந்து கொள்வோமா?

foot1

உங்க வீட்ல வெள்ளை நிறத்தில் இருக்கிற ஒரு மெழுகுவர்த்தியை எடுத்துக்கோங்க. அந்த மெழுகை காய்கறி துருவல் இருக்கும் அல்லவா? அதில் சிறியதாக துருவிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு மெழுகு துருவல் இப்போது தனியாக கிடைத்திருக்கும். 2 ஸ்பூன் அளவு மெழுகு துருவல் கிடைத்தால் கூட போதும்.

இதை ஒரு அகலமான சிறிய கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். அதன் பின்பு இதற்கு கட்டாயம் தேவையான பொருள் ஆலிவ் ஆயில். வேறு எந்த எண்ணையையும் பயன்படுத்த வேண்டாம். ஆலிவ் ஆயிலிலிருந்து 4 ஸ்பூன் அளவு எடுத்து மெழிகில் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

candle

இத அப்படியே இருக்கட்டும். இப்போது ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீரை வைத்து, அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்துக் கொள்ளுங்கள். டபுள் பாய்லிங் என்று சொல்லப்படும் முறையில் இப்போது சிறிய கிண்ணத்தில் இருக்கும் மெழுகு துருவலையும் எண்ணெயையும், நாம் காய்ச்ச போகின்றோம்.

- Advertisement -

அகலமாக இருக்கும் கிண்ணத்தில் சுடு தண்ணி ஊற்றி, சிறிய கிண்ணத்தில் இருக்கும் மெழுகும் ஆலிவ் ஆயிலும் இருக்கும் கலவையை, சுடு தண்ணீருக்கு உள்ளே வைத்து சூடு படுத்துங்கள். அப்போது அந்த சுடு தண்ணீரின் சூட்டில், மெழுகு உருகி அந்த எண்ணெயோடு சேர்ந்து, ஒரு விதமான ஜெல் நமக்கு கிடைக்கும். (மொத்தமாக இரண்டு நிமிடங்களில் டபுள் பாயிண்ட் பண்ணும்போது மெழுகு உருகி விடும்). இந்த மெழுகு அப்படி ஒன்றும் கொதிக்க கொதிக்க சுடசுட இருக்காது. கை பொறுக்கும் அளவில் தான் இருக்கும்.

double-boiling

இப்போது இந்த மெழுகு உருகி ஆலிவ் ஆயிலில் கரைந்திருக்கும் ஜெல்லை, உங்களது கைகளால் தொட்டு, உங்களது குதிகால் வெடிப்பில் இருக்கும் பாதங்களில் மென்மையாக மசாஜ் செய்து கொடுங்கள். 5லிருந்து7 நிமிடங்கள் மசாஜ் செய்து, அப்படியே விட்டு விடுங்கள் அது காய்ந்துவிடும். இரவு நேரத்தில் இப்படி செய்யுங்கள். மறுநாள் காலை எழுந்து காலை சுத்தமாக கழுவி விடுங்கள். உங்களது குதிகால் வெடிப்பு எப்படி காணாமல் போனது என்பதை உங்களுக்கு தெரியாது. ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
ஒரு சொட்டு தண்ணீர் கூட வேண்டாம். உங்கள் வீட்டு சிங்கையும், உங்கள் வீட்டு வாஷ்பேஷனையும் சுத்தம் செய்ய இப்படி ஒரு சூப்பர் டிப்ஸை யாரும் பார்த்திருக்க மாட்டீங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.