பித்த வெடிப்பால் உங்களுடைய பாதங்களின் அழகு மிகமிக மோசமான நிலையில் உள்ளதா? உடனே இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க! நிச்சயமா அடுத்த நாளே நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

foot
- Advertisement -

பாதங்களில் வெடிப்பு வருவதற்கு முதல் காரணம் நம்முடைய பாதங்கள் ஈரப்பதம் இல்லாமல், வறட்சியாக இருப்பதுதான். பாதங்களை அழுக்குடனும், வறட்சித் தன்மையோடு எப்போதுமே வைத்திருக்கக் கூடாது. பாதங்கள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருந்தால், வெடிப்பு வருவது தவிர்க்கப்படும். பாதங்களை வெடிப்பு வராமல் பாதுகாப்பது எப்படி, வந்த வெடிப்பை சுலபமாக நீக்குவது எப்படி, என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

foot-wash

பெரும்பாலானவர்களுக்கு வெடிப்பு என்பது பொதுவாக குளிர் காலத்தில் தான் வரும். ஏனென்றால் குளிர் காலத்தில் தான் நம்முடைய உடம்பு வறட்சி தன்மையோடு இருக்கும். குளிர்காலத்தில் உங்களுடைய பாதங்களை தினம்தோறும் நன்றாக சுத்தம் செய்துவிட்டு, அதன் பின்பு அந்த குதிகால்களில் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை எப்போதும் தடவிக் கொண்டே இருக்க வேண்டும். வெடிப்பு இருந்தாலும் சரி, வெடிப்பு இல்லை என்றாலும் சரி ஏதாவது ஒரு எண்ணெயை இரவு தூங்கும் போது பாதங்களில் தடவி வைத்துவிடுங்கள்.

- Advertisement -

பாத வெடிப்பு இருந்தாலும் பாத வெடிப்பு இல்லை என்றாலும், குளித்து முடித்த பின்பு நம்முடைய பாதங்கள் தண்ணீரில் ஊறி இருக்கும் அல்லவா. அப்போது ஒரு ஸ்கிரப்பர் கொண்டு பாதங்களை நன்றாக தேய்த்து ஒரு முறை கழுவி விட்டு தான் நம்முடைய குளியளை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இதை உங்களுடைய நிரந்தர பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். பாதங்களை அழகாக வைத்துக் கொள்ள இதுவும் ஒரு ட்ரிக்ஸ் தான்.

foot1

அடுத்தபடியாக வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் கல் உப்பைப் போட்டு அதில் உங்களுடைய பாதங்களை பத்து நிமிடங்கள் வரை நன்றாக ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு ஸ்க்ரப்பர் அல்லது தேங்காய் நார் கொண்டு பாதங்களை தேய்த்து கழுவிவிட்டால் பாதங்கள் எப்போதும் மென்மையாக அழுக்கு படியாமல் சுத்தமாக இருக்கும்.

- Advertisement -

அதிகமாக பித்தவெடிப்பு இருப்பவர்கள் இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் கோதுமை மாவு, 1 ஸ்பூன் அரிசி மாவு, இரண்டு மாவையும் எடுத்து முதலில் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த மாவுடன் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 ஸ்பூன் தேன் இந்த இரண்டு பொருட்களை சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர் விட்டு பேஸ்ட் போல கலந்து, உங்களுடைய பாத வெடிப்பில் தடவி விட வேண்டும்.

foot2

இந்த பேஸ்ட் ஒரு நாள் இரவு முழுவதும் உங்கள் பாதங்களிலேயை இருக்கவேண்டும். பேஸ்டை தடவி விட்டு அதன் மேல் ஒரு கவர் அல்லது துணியை போட்டு கட்டி கொள்ளுங்கள். அதன் பின்பு மறுநாள் காலையில் எழுந்து உங்களுடைய இரண்டு கால்களையும் சுத்தமாக கழுவிவிட வேண்டும்.

- Advertisement -

double-boiling

அடுத்தபடியாக சிறிதளவு மெழுகை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். (மெழுகுவர்த்தியில் இருந்து மெழுகை வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.) கிண்ணத்தில் இருக்கும் மெழுகை, சுடுதண்ணீரில் மேலே வைத்தால் மெழுகு கரைந்து விடும். உருகிய மெழுகுடன் விளக்கெண்ணெய் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை உங்களுடைய பாத வெடிப்புகளில் அப்படியே தடவி இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்து அப்படியே விட்டு விடுங்கள்.

wax

இப்படி மட்டும் செய்து பாருங்கள். உடனடியாக உங்களுடைய பாதங்களில் இருக்கும் பித்த வெடிப்பில் உடனடியாக வித்தியாசம் தெரியும். வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படி உங்களுடைய பாதங்களுக்கு நீங்கள் செய்து கொள்ளலாம். பாதவெடிப்பு மீண்டும் மீண்டும் வராமல் தடுக்கப்படும். சாதாரண மெழுகுக்கு பதிலாக தேன்மெழுகு கிடைத்தால் அதை இந்த ரெமிடிஸ் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

foot3

சிலபேர் பாதவெடிப்பு நீங்குவதற்கு நிறைய குறிப்பை பின்பற்றுவார்கள். வெடிப்புகளும் மறையும். ஆனால் மீண்டும் வரத்தொடங்கும். இதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் டைல்ஸ் கூட ஒரு காரணமாக இருக்கலாம். சில பேர் வீட்டு தரையில் ஒட்டப்பட்டிருக்கும் டைல்ஸில் நடந்து கொண்டே இருந்தாலும் பாத வெடிப்பு வரத்தொடங்கும். இப்படிப்பட்டவர்கள் வீட்டிற்கு உள்ளேயும் காலணியை அணிந்து பாருங்கள். வித்தியாசம் தெரிகிறதா என்று.

- Advertisement -