வெள்ளிக்கிழமையில் உப்பை எங்கு வைக்க வேண்டும்? உப்பு பாத்திரம் அடியில் இதை மட்டும் வைத்து பாருங்கள், வீட்டில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் நீங்கி அதிசயம் நடக்கும்.

amman-salt

ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்க வேண்டும் என்றால் அந்த வீட்டில் வசிக்கும் நபர்கள் அத்துணை பேரும் மகாலட்சுமிக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும். மகாலட்சுமியை அவமதித்தால் பிறகு உங்கள் குடும்பத்தில் பணவரவு தடைபடும். நிச்சயம் குடும்பத்தில் கஷ்டமான நிலை உருவாகும். செல்வதிற்கு அதிபதியாக லக்ஷ்மி தேவி இருக்கின்றார். நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்து வைத்துள்ள சில சாஸ்திர, சம்பிரதாயங்களை நம் பெற்றோர்கள் என்ன? ஏது? என்று கூட கேட்காமல் அப்படியே பின்பற்றி வந்தனர். ஆனால் அவர்களுக்கு அடுத்து இருக்கும் நாம் அதனை மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விடுகிறோம், அல்லது அலட்சியப் படுத்துகிறோம். நாம் அதை பின்பற்ற வில்லை என்றாலும், நம்முடைய சந்ததியினருக்கும் அதை சொல்லிக் கொடுப்பதற்கு தவறி வருகிறோம்.

dhanalakshmi

இது ஒரு குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். எப்போதும் நிம்மதி இல்லாத நிலை உங்கள் சந்ததியினருக்கு வர வேண்டுமா? அப்படி நாம் எதை சொல்லிக் கொடுக்க தவறுகிறோம்? நம் சந்ததியினர் நலமுடன், வளமுடன் வாழ நாம் அவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும்? ஏன் சொல்லிக் கொடுக்க வேண்டும்? நமது முன்னோர்கள் அதை கண்மூடித்தனமாக நம்பினாலும், நாம் அதில் இருக்கும் நல்லவைகளை மட்டும் எடுத்துக்கொண்டு நமக்கு இருக்கும் அறிவை நம் பிள்ளைகளுக்கும் புகட்ட வேண்டும். குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் நிறைவதற்கு லக்ஷ்மியை மனம் குளிர செய்ய வேண்டும்.

தினமும் வீட்டில் விளக்கேற்ற பழக சொல்லிக் கொடுங்கள். தினமும் விளக்கு ஏற்றுவதால் குடும்பத்தில் அமைதி நிலைத்திருக்கும். விளக்கு ஏற்றிய பிறகு செய்யக் கூடாத சில விஷயங்கள் வழக்கத்தில் உண்டு. அதை முறையாக பின்பற்றுங்கள். விளக்கு ஏற்றிய பிறகு தலை வாரக்கூடாது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே!

thayir-kadaithal

அதேபோல் முகம் கழுவக் கூடாது, அரிசி களைவது, தயிர் சிலுப்புவது, காய்கறி நறுக்குவது, வீட்டை பெருக்குவது, நகம் கடிப்பது போன்ற செயல்களை நிச்சயம் செய்யக்கூடாது. இதை நீங்களும் உங்கள் சந்ததியினரும் பின்பற்றி வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் குடும்பம் முன்னேற்ற பாதையில் செல்லும் என்பதை நினைவில் கொள்ள மறக்காதீர்கள்.

- Advertisement -

தினமும் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றாலும் வெள்ளி, செவ்வாய் போன்ற கிழமைகளில் கட்டாயம் விளக்கேற்றுவது நல்லது. வெள்ளிக்கிழமை விளக்கேற்றும் பொழுது ஒரு பாத்திரத்தை பூஜை அறையில் வையுங்கள். அதற்கு அடியில் உங்களிடம் இருக்கும் பழைய செப்பு காசு ஒன்றை வையுங்கள். உங்களிடம் இல்லையென்றால் உங்கள் வீட்டு பெரியவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் வைத்திருக்க வாய்ப்புகள் உண்டு. வெள்ளிக்கிழமை அன்று இதுபோல் செய்து, அன்றைய தினத்தில் கடைக்கு சென்று உப்பு வாங்கி வந்து அந்த பாத்திரத்தில் கொட்டுங்கள்.

salt1

அதன்பிறகு விளக்கேற்றி வழிபாடுகள் செய்யுங்கள். இது போல ஒவ்வொரு வெள்ளி அன்றும் நீங்கள் செய்வதால், உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிலைத்து நிற்கும். நீங்கள் தொடங்கும் எந்த காரியமும் தடையின்றி வெற்றி பெறும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கிவிடும். இரண்டு வாரம் செய்து பாருங்கள் உங்களுக்கே உங்கள் வீட்டில் நடக்கும் அதிசயத்தை கண்டு வியக்க நேரலாம். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த ஒரு பொருள் தான் மகாலட்சுமியின் அம்சமாக விளங்கும் கல் உப்பு.

இதையும் படிக்கலாமே
கண்ணுக்குத் தெரியாத தோஷத்தை கூட நிவர்த்தி செய்யும் பரிகாரம்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Crystal salt pariharam for mahalakshmi in Tamil. Crystal salt palangal in Tamil. Crystal salt pariharam in Tamil. Crystal salt in Tamil. Crystal salt benefits.