இந்த 1 பொருள் இல்லாமல் வெள்ளிக்கிழமை பூஜை செய்தால் எந்த பலனும் கிடைக்காது. வெள்ளிக்கிழமை பூஜையில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய அந்த பொருள் என்னவாக இருக்கும்.

poojai
- Advertisement -

தினமும் சுவாமிக்கு பூஜை செய்ய வேண்டும் என்ற பழக்கம் மாறி, அவசரமான இந்த வாழ்க்கையில், வாரத்தில் ஒரு நாளாவது சுவாமிக்கு பூஜை செய்ய நேரம் கிடைக்காதா, என்று யோசிக்கும் நிலைமை வந்துவிட்டது. காரணம் வீட்டில் இருக்கும் அனைவரும் பண தேவைக்காக வேலை செய்யக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். தவறு கிடையாது.

குடும்ப கஷ்டத்திற்கு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் உழைத்து பணம் சம்பாதிக்கலாம். ஆனால், அதேசமயம் நம் வீட்டு பூஜை அறையையும் கொஞ்சம் கவனிக்க வேண்டியது வீட்டுப் பெண்களின் கடமை. ஆகவே உங்களால் தினமும் பூஜை செய்ய முடியவில்லை என்றால் கூட பரவாயில்லை. வாரம் ஒரு நாள் வெள்ளிக்கிழமை பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கு ஏற்றி சுவாமி கும்பிடுவது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். இப்படி பூஜை செய்தாலே அன்று நமக்கு ஒரு மன நிம்மதி கிடைத்து விடும்.

- Advertisement -

இப்படி மன நிம்மதியை கொடுக்கும் வெள்ளிக்கிழமை பூஜையை முறையாக எப்படி செய்வது. எந்தெந்த பொருட்களை எல்லாம் வெள்ளிக்கிழமை அன்று பூஜையில் வைத்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

வெள்ளிக்கிழமை பூஜை செய்வது எப்படி?
அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை பெரும்பாலும் பூஜை என்றால் அதில் முக்கியத்துவம் கொடுக்கப்படக்கூடிய பொருள் வெற்றிலை பாக்கு பூ பழம். அதிலும் வாழைப்பழம் பூஜைக்கு சிறந்தது. பூவம் பழம், சில பேர் இதை மஞ்சள் வாழைப்பழம் என்று சொல்லுவார்கள். இந்த வாழைப்பழத்தை பூஜையில் வைத்தால் நல்லது. ஆனால் இன்று சுவாமிக்கு பூ கூட வாங்கிப் போடுகின்றோம். வெற்றிலை பாக்கு பழம் என்பதை நம்மில் நிறைய பேர் மறந்து விட்டோம். இந்த தாம்பூலம் வைக்காமல் வெள்ளிக்கிழமை பூஜை செய்வது என்பது அவ்வளவு சிறப்பான விஷயம் அல்ல.

- Advertisement -

வெற்றிலையில் மகாலட்சுமி வாசம் செய்வதாகவும், கொட்டைப்பாக்கை குலதெய்வமாகவும் பார்த்து தான் அந்த காலத்தில் வழிபாட்டை மேற்கொண்டு வந்தார்கள். ஆனால் இன்று வெற்றிலை பாக்கு வாங்கினால் அதை போடுவதற்கு, அதாவது தாம்பலம் தரிப்பதற்கு ஆளில்லை என்பதாலேயே வெற்றிலை பாக்கு வாங்கி வெள்ளிக்கிழமை பூஜையில் வைக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.

வெற்றிலை பாக்கு போடுவதற்கு உங்களுடைய வீட்டில் ஆள் இல்லை என்றாலும், அக்கம் பக்கம் வீட்டில் இருக்கும் பாட்டிகளுக்கு இதை கொடுக்கலாம். அப்படி யாருமே இதை சாப்பிடவில்லை என்றால் ஆடு மாடுகளுக்கு பச்சையாக இருக்கும் போதே சாப்பிட கொடுத்து விடலாம்.

- Advertisement -

எதற்குமே எங்களுக்கு வசதி இல்லை. வெற்றிலை பாக்கு வீட்டில் வாடி தான் போகிறது என்றால், பூஜையில் வைத்த அந்த வெற்றிலை பாக்கு பசுமையாக இருக்கும் போதே உங்கள் வீட்டில் தொட்டியில் வளர்க்கும் செடி கொடிகளுக்கு உரமாக எடுத்து போட்டு விடுங்கள். அந்த மண்ணிலேயே மக்கி அந்த வெற்றிலை செடிகளுக்கு உரமாக மாறிவிடும்.

இதையும் படிக்கலாமே: இனி வாழ வழியே இல்லை என கலங்கி நின்றவர்களை கூட, ராஜ வாழ்க்கை வாழ வைக்க இந்த கிராம்பு இருந்தா போதும். தீர்க்கவே முடியாத சிக்கலை கூட தீர்க்கும் சக்தி வாய்ந்த பரிகாரம்.

வெள்ளிக்கிழமை தோறும் கட்டாயமாக வெற்றிலை பாக்கு வாழைப்பழம் வைத்து பூஜை செய்யக்கூடிய வீட்டில் ஐஸ்வரியும் பெருகும். கூடவே இரண்டு டைமண்ட் கற்கண்டு இனிமையாக, நெய்வேதியமாக, வைக்கும் போது வீட்டில் இனிப்பான சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கும் என்ற ஒரு நம்பிக்கையும் இருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான வழிபாட்டை மேற்கொண்டு பலன் பெறலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவில் நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -