ஃப்ரிட்ஜை ஒருமுறை இப்படி சுத்தம் செய்தால் வருடக் கணக்கு ஆனாலும் ஃப்ரிட்ஜில் இருந்து கெட்டவாடை வீசவே வீசாது. பாட்டி காலத்தில் வாங்கிய ஃபிரிட்ஜ் கூட பார்ப்பதற்கு அப்படியே புத்தம் புதுசு போல ஜொலிக்கும்.

fridge
- Advertisement -

சில பேர் வீட்டில் ஃப்ரிட்ஜை என்னதான் சுத்தம் செய்து வைத்தாலும், அந்த ஃப்ரிட்ஜில் இருந்து ஒரு கெட்ட வாடை வீசிக் கொண்டே இருக்கும். ஃப்ரிட்ஜை திறந்தால் அந்த வாடையை தாங்கவே முடியாது. அப்படிப்பட்ட கெட்ட வாடையெல்லாம் பிரிட்ஜில் வீசக்கூடாது. எப்போதுமே ஃப்ரிட்ஜ் புதுசாக பளிச்சென இருக்க வேண்டும், வெள்ளையாக இருக்க வேண்டும் என்றால் பின் சொல்லக்கூடிய இந்த சுலபமான குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய பிரிட்ஜ் எப்போதும் புதுப்பொலிவோடு தான் இருக்கும். சுலபமான எளிய இந்த வீட்டுக்குறிப்பு பிடிச்சிருந்தா மட்டும் முயற்சி செய்து பாருங்கள்.

ஃப்ரிட்ஜை துர்நாற்றம் வீசாமல் சுத்தம் செய்ய எளிமையான குறிப்பு:
ஃப்ரிட்ஜ் சுத்தம் செய்வதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்பே பிரிட்ஜை ஆஃப் செய்து விட வேண்டும். பிரிட்ஜில் இருந்து ஃப்ளகை எடுத்து விடுங்கள். பிரிட்ஜிக்கு உள்ளே இருக்கும் எல்லா பொருட்களையும் எடுத்து வெளியே வைத்து விடுங்கள். பிரிட்ஜில் சில பொருட்களை எல்லாம் நம்மால் கழுட்ட முடியும். டோரில் உள்ள ஸ்டாண்ட், கண்ணாடி, ரப்பர் இப்படி எதையெல்லாம் கழட்ட முடியுமோ அதை எல்லாம் கழட்டி எடுத்து தனியாக சோப்பு போட்டு கழுவி, தண்ணீரை நன்றாக துடைத்து அப்படியே காய வைத்து விடுங்கள்.

- Advertisement -

ஃப்ரிட்ஜை ஆஃப் செய்து வைத்ததால் பிரிட்ஜுக்கு உள்ளே தண்ணீர் கசிந்து இருக்கும். அழுக்குகள் எல்லாம் அந்த தண்ணீரிலேயே நன்றாக ஊறிருக்கும். அப்போது பிரிட்ஜுக்கு உள்ளே வடிந்திருக்கும் எல்லா தண்ணீரையும் ஒரு துணியை வைத்து துடைத்து வெளியே தள்ளி விட வேண்டும். இப்போது தூசி தும்புகள் இல்லாமல் பிரிட்ஜ் சுத்தமாக இருக்கும். இப்போதுதான் ஃப்ரிட்ஜை துடைக்க ஆரம்பிக்க வேண்டும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் சோடா உப்பு 2 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு தேவையான அளவு ஊற்றி அதை கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை தொட்டு பிரிட்ஜை தேய்த்து துடைக்க வேண்டும். எலுமிச்சை பழத்தோலை உள்பக்கம் திருப்பிக் கொள்ளுங்கள். விளக்கு போட திருப்புவோம் அல்லவா. அதேபோல எலுமிச்சம் பழம் தோலை திருப்பி, இந்த சோடா உப்புகலவையில் தொட்டு, பிரிட்ஜ் முழுவதும் லேசாக தேய்த்து அப்படியே 10 நிமிடங்கள் ஊற வையுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு சாதாரண பச்சை நிற ஸ்பாஞ்ச் நாரை வைத்து, ஃப்ரிட்ஜை துடைத்தாலே உங்களுடைய பிரிட்ஜில் இருக்கும் கறைகள் எல்லாம் நீங்கி ஃப்ரிட்ஜ் வாசமாக மாறிவிடும். பின்பு காய்ந்த காட்டன் டவல் கொண்டு ஃப்ரிட்ஜை நன்றாக துடைத்து விட்டு, ஃப்ரிட்ஜை உடனடியாக மூடாமல் திறந்தபடி வைத்து நன்றாக ஆரவிட்டு அதன் பின்பு, கழட்டிய கண்ணாடி, ஸ்டான்ட் இவைகளை மாட்டி பிறகு உணவுப் பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள். இப்படி சோடா உப்பு எலுமிச்ச பழச்சாறும் சேர்ந்து பிரிட்ஜை சுத்தம் செய்யும் போது நீண்ட நாட்களுக்கு அதில் எந்த ஒரு துர்நாற்றமும் வீசாது.

இதையும் படிக்கலாமே: 10 வருடம் ஆனாலும் உங்க பழைய வெள்ளி பொருட்கள் எல்லாம் புதுசு போல மின்ன, இந்த ஒரு பொருள் உங்க கையில் இருந்தா போதும் இந்த மேஜிக் நடக்கும்.

உங்களுடைய வீட்டில் நீண்ட நேரம் பவர் கட் ஆகி இருந்தால், உங்களுடைய வீட்டு பிரிட்ஜில் தண்ணீர் கசிந்து கசிந்து வெஜிடபிள் டிரேவுக்கு அடியில் நிற்கும். கரண்ட் வந்தவுடன் ஞாபகமாக அந்த தண்ணீரை எல்லாம் வெளியே தள்ளிவிட வேண்டும். அனாவசியமாக ஃப்ரிட்ஜுக்குள் தண்ணீர் தேங்கி இருந்தாலும் துர்நாற்றம் வீசும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுடைய வீட்டு பிரிட்ஜை மேல் சொன்னபடி சுத்தம் செய்து பாருங்கள். நிச்சயமாக அதில் துர்நாற்றம் வீசாது.

- Advertisement -