10 வருடம் ஆனாலும் உங்க பழைய வெள்ளி பொருட்கள் எல்லாம் புதுசு போல மின்ன, இந்த ஒரு பொருள் உங்க கையில் இருந்தா போதும் இந்த மேஜிக் நடக்கும்.

silver-cleaning
- Advertisement -

வெள்ளிப் பொருட்கள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தது தான். அதைப் பார்க்கும் போது நல்ல அழகாக மின்னும். அதனால் தான் அதை ஆசையாக வாங்கவும் செய்வார்கள். ஆசையாக வாங்கும் இந்த வெள்ளியை பெரும்பாலும் அப்படியே வைத்து விடுவார்கள். காரணம் அதை பயன்படுத்தி பராமரிப்பது கொஞ்சம் கடினம். வாங்கும் போது மட்டுமே அந்த பளபளப்புடன் பார்க்க முடியும் பயன்படுத்த ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலே கருத்து போய் விடும். அது காலில் அணியும் கொலுசாக இருந்தாலும் சரி, நம் வீட்டில் பூஜைக்கு பயன்படுத்தும் பூஜை பொருட்களாக இருந்தாலும், மற்ற பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதன் நிலைமை எல்லாம் இப்படித் தான் ஆகும். இந்த பதிவில் வெள்ளி பொருட்களை சுலபமாக சுத்தம் செய்வதுடன் பத்து வருடமானாலும் வெள்ளி அப்படியே பளிச்சென்று வைத்து இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் வெள்ளி பூஜை பொருட்களை எப்படி சுத்தம் செய்வது என்று பார்த்து விடலாம். அதற்கு தேவையான ஒரு பொருள் இது அனைவரும் தெரிந்தது தான். ஆனால் பெரும்பாலும் அதை பயன்படுத்துவதில்லை. அது செம்மண் தூள் தான். இது இப்போது கோலமாவு விற்கும் கடைகளில் கூட விற்க தொடங்கி விட்டார்கள் இந்த மாவு கிடைத்தோல் கிடைத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். இதற்கு பதிலாக கோலமாவு பயன்படுத்தலாம் ஆனால் செம்மண் தூளை பயன்படுத்தும் போது இன்னும் நல்ல பளப்பளப்பு கிடைக்கும்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் செம்மண் தூளை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இப்போது நாம் சேர்க்கும் இந்த பொருள் தான் வெள்ளியை சுலபமாக சுத்தம் செய்ய நமக்கு பயன்படப் போவது. அது வேறொன்றும் இல்லை சத்து டானிக். நீங்கள் இதற்கென்று கடையில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வீட்டில் பழைய எக்ஸ்பயரி ஆன டானிக் இருந்தால் கூட, அதில் கொஞ்சம் எடுத்து இந்த செம்மண் கலவையுடன் கலந்த பிறகு கொஞ்சமாக விம் லிக்விட் சேர்த்து கொள்ளுங்கள். இது எண்ணெய் கறை இருக்கும் பொருள்களை தேய்க்கும் போது மட்டும் பயன்படுத்துங்கள் எண்ணை கறை இல்லாத பொருட்கள் அதாவது கொலுசு போன்றவை பயன்படுத்தும் போது இந்த லிக்விட் கூட தேவை இல்லை. இவையெல்லாம் கலந்த பிறகு தேங்காய் நார் தொட்டு பூஜை பொருட்களை தேய்த்து நல்ல தண்ணீரில் அலசி எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் விளக்குகள் புதிதாக வாங்கிய வெள்ளியைப் போல் மின்னத் தொடங்கி விடும். வெள்ளி பொருட்களை தேய்த்த பிறகு சுத்தமான துணி வைத்து ஈரமில்லாமல் துடைத்து நன்றாக வெயிலில் காய வைத்த பிறகு எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நீங்கள் ஒரு முறை பயன்படுத்திய பிறகு வெள்ளி பொருளை எடுத்து வைத்து கொஞ்ச நாள் கழித்து எடுத்து பார்த்தால் அந்த பொருள் வெள்ளி என்று சொன்னால் கூட நம்பாத அளவிற்கு கருத்து போய் தான் இருக்கும். வெள்ளிப் பொருட்கள் எத்தனை நாள் ஆனாலும் கருத்து போகாமல் புதுசு போலவே எத்தனை வருடம் ஆனாலும் கருக்காமல் அப்படியே இருக்க செம்மண், சத்து டானிக் கொண்டு தேய்த்து காயவைத்து பிறகு அதில் கொஞ்சம் கற்பூரம் விபூதி இரண்டையும் ஒன்றாக கலந்து பவுடராக்கி அதை இந்த வெள்ளிப் பொருட்களின் மீது தேய்த்து அதன் பிறகு ஒரு பேப்பரில் சுற்றி எடுத்து வைத்து விடுங்கள்.

இந்த முறையில் வெள்ளி பொருட்களை பராமரித்தால், நீங்கள் பத்து வருடம் கழித்து எடுத்துப் பார்த்தால் கூட வெள்ளி புதுசு போலவே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வாஷிங் மெஷினை ஒரு முறை இப்படி சுத்தம் செய்து விட்டால், புதிய வாஷிங் மெஷின் வாங்க வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு வராது. உப்பு தண்ணீர் படிந்து, ட்ரம் சுத்துவதில் பிரச்சனை இருந்தாலும் அதை சரி செய்ய இதோ ஒரு சூப்பர் ஐடியா.

வெள்ளியை சுத்தம் செய்யவும் பத்திரமாக பராமரிக்கவும் இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இனியும் நீங்கள் வீட்டில் பயன் படுத்தும் வெள்ளி பொருட்களை இது போல பயன்படுத்துங்கள்.

- Advertisement -