உங்க வீட்டு பாவப்பட்ட ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய ஒரு ஈஸியான ஐடியா! இதை தெரிஞ்சுகிட்டா கை வலிக்காமல் ஃபிரிட்ஜை புதுசு போல மாத்தலாம்.

fridge
- Advertisement -

என்னங்க ஃபிரிட்ஜை போய் பாவப்பட்ட ஃபிரிட்ஜ்ன்னு சொல்றீங்க. அப்படின்னு யோசிக்கிறீங்களா. ஆமாங்க நம்ம வீட்டில் மாவு, காய்கறிகள், மிச்சம் மீதி மீந்த குழம்பு, சட்னி, எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் பிரிட்ஜ் தானே. அது மட்டும் இல்லாமல் பிரிட்ஜ்குள் நம் வீட்டுப் பிள்ளைகள் கூல்ட்ரிங்க்ஸ் கொட்டி, இன்னும் சில பொருட்களைக் கொட்டி அதை அழுக்காக்கி வச்சிருப்பாங்க. சில பேர் வீட்டு ஃபிரிட்ஜை பார்க்கும்போது ரொம்ப ரொம்ப மோசமாக இருக்கும். பழைய பழைய காய்ந்துபோன கறைகள் எல்லாம் அப்படியே இருக்கும். நம் வீட்டு பிரிட்ஜை நம்மாலே இரண்டு நிமிடத்திற்கு மேல் கண் கொண்டு பார்க்க முடியாது. அப்படி என்றால் அது பாவப்பட்டது தானே. அந்த அளவுக்கு மோசமாக இருக்கும் ஃப்ரிட்ஜை கூட சுலபமாக சுத்தம் செய்ய ஒரு வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக இந்த பதிவில்.

ரொம்பவும் அழுக்கான பிரிட்ஜை சுலபமாக சுத்தம் செய்ய ஐடியா:
இதற்கு முதலில் நாம் ஒரு லிக்விடை தயார் செய்து கொள்ளுவோம். ஒரு சின்ன கப்பில் பேக்கிங் சோடா 1 ஸ்பூன், வெள்ளை நிறத்தில் இருக்கும் பேஸ்ட் 1 ஸ்பூன், போட்டு இதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் கட்டிபிடிக்காமல் இருக்கும். பிறகு ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி இதை லிக்விட் பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊத்திக்கோங்க. அப்படி இல்லை என்றால் வாட்டர் கேனில் ஊற்றி, மூடியில் சின்ன சின்ன ஓட்டை போட்டு தனியா வச்சுக்கோங்க.

- Advertisement -

இப்ப உங்க பிரிட்ஜுக்கு வாங்க. ஃபிரிட்ஜ்க்கு உள்ளே இருக்கும் பொருட்களை எல்லாம் வெளியே எடுத்து விடுங்கள். அந்த ட்ரே கண்ணாடி அதையெல்லாம் கழட்ட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அது அப்படியே இருக்கட்டும். பிரிட்ஜுக்கு உள்ளே இருக்கும் தூசிகளை எல்லாம் மட்டும் ஒரு நாரை வைத்து துடைத்து கீழே தள்ளி விடுங்கள்.

பிறகு பிரிட்ஜ் முழுவதும் நாம் பேக்கிங் சோடாவை தூவி விட வேண்டும். ஒரு டீ வடிகட்டிக்கு உள்ளே பேக்கிங் சோடாவை போட்டு, பிரிட்ஜுக்கு உள்ளே அப்படியே சலித்து விட்டால், பேக்கிங் சோடா பரவலாக பிரிட்ஜுக்கு உள்ளே விழுந்து விடும். பிறகு வாட்டர் பாட்டிலில் தயார் செய்து வைத்திருக்கும் லிக்விடை பிரிட்ஜுக்கு உள்ளே முழுவதும் ஸ்பிரே செய்து விடுங்கள். ஒரு இரண்டு நிமிடம் ஊறட்டும். பிறகு காய்ந்த காட்டன் துணியை வைத்து ஃப்ரிட்ஜ் முழுவதையும் அப்படியே துடைத்து எடுத்தால் போதும். பிரிட்ஜுக்கு உள்ளே காய்ந்து போன கறைகள் படிந்து இருந்தாலும் சரி, அதெல்லாம் சுலபமாக நீங்கி இந்த துணியோடு வந்துவிடும்.

- Advertisement -

இறுதியாக ஒரு ஸ்கேல் அல்லது சீப்பில் ஈரத் துணியை நனைத்து அந்த கண்ணாடி இடுக்குகளில் எல்லாம் விட்டு துடைக்க வேண்டும். டோரில் ரப்பர் இருக்கும் அல்லவா, அந்த இடத்தில் எல்லாம் இந்த துணி சுற்றி வைத்திருக்கும் ஸ்கேலை வைத்து துடைத்தால், இடுக்குகளுக்கு உள்ளே இருக்கும் அழுக்கு சுத்தமாக நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. (உங்க பிள்ளைகள் நோட்டில் கோடு போட பயன்படுத்தும் பழைய ஸ்கேல் இருக்கும் அல்லவா. அதை இந்த குறிப்புக்கு பயன்படுத்தலாம்). இறுதியாக ஒரு ஈரத் துணியை போட்டு ஃப்ரிட்ஜை துடைத்து எடுத்து பாருங்கள். உங்களுக்கே ஃப்ரிட்ஜில் நல்ல வித்தியாசம் தெரியும்.

இதையும் படிக்கலாமே: உங்க வீடு, தோட்டம் என ஒரு இடத்தையும் மிச்சம் வைக்காம நாசப்படுத்துற இந்த எளிய சுலபமா ஒழிக்க இதில் ஒரு உருண்டையை மட்டும் போடுங்க போதும்.

ஆப்ப சோடா நல்ல ஒரு கிளீனிங் ஏஜென்ட். பிரிட்ஜ்க்கு உள்ளே இருக்கும் கண்ணுக்கு தெரியாத கிருமிகளை எல்லாம் கூட அழித்து உங்களுடைய பிரிட்ஜை சுத்தம் செய்து கொடுத்து விடும். பிரிட்ஜில் துர்நாற்றம் வீசாமலும் இருக்கும். பிறகு உங்களுடைய பிரிட்ஜில் பொருட்களை எல்லாம் எடுத்து மீண்டும் அடுக்கி வச்சுக்கோங்க. மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது ஃப்ரிட்ஜை இப்படி சுத்தம் செய்வது ரொம்பவும் நல்லது.

- Advertisement -