உங்க முடி ரொம்ப ரொம்ப ட்ரையா, பார்க்கும்போதே முள்ளு முள்ளா தூக்கிக்கிட்டு, ரொம்ப மோசமா இருக்குதா? டிரையான முடியை, அழகாக செட் செய்ய இதோ ஒரு சூப்பர் ஐடியா.

hair19
- Advertisement -

ஆங்கிலத்தில் இதை frizzy hair என்று சொல்லுவார்கள். இப்படி வறண்டு போன முடியை செட் செய்து கோனிடைல் போடுவதோ, லூஸ் ஹேர் விடுவதும் முடியாத காரியம். பார்ப்பதற்கே ரொம்பவும் அசிங்கமாக இருக்கும். வறட்சி அடைந்த உங்களுடைய முடியை, அழகாக செட் செய்ய ஒரு ஐடியா. உங்களுடைய முடியும் சில்கியா, ஷைனிங்கா மாற குறைந்த செலவில் ஒரு குறிப்பு. இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் தேங்காய். ஒரு தேங்காய் வாங்க கூடிய அளவுக்கு நீங்கள் செலவு செய்தால் போதும். முடியை அழகாக மாற்றலாம்.

ட்ரையாக இருக்கும் முடி சில்க்கியாக மாற சூப்பர் ஐடியா:
ட்ரையாக இருக்கக்கூடிய முடியில் முதலில் நீங்கள் எண்ணெய் வைக்க வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன், விளக்கெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த எண்ணெயை தலை முழுவதும் வைத்து மசாஜ் செய்து அப்படியே விட்டு விடுங்கள். 1 மணி நேரம் இந்த எண்ணெய் தலையில் ஊறட்டும்.

- Advertisement -

உங்கள் முடியின் அளவுக்கு ஏற்ப தேங்காய் பால் எடுக்க வேண்டும். தேங்காயை துருவி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து திப்பியை வடிகட்டி, தேங்காய் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு வாட்டர் கேனில் ஊற்றிக் கொள்ளவும். வாட்டர் கேன் மூடியை போட்டு அதன் மேலே சின்ன சின்ன ஓட்டைகளை போட்டுக் கொள்ளவும். இப்போது இது ஒரு ஸ்ப்ரே பாட்டில் போல இருக்கிறது அல்லவா. இதை உங்களுடைய தலையில் ஸ்பிரே செய்யவும்.

ஸ்கேல்பில் முடியை பாகம் பாகங்களாக பிரித்து, இந்த தேங்காய் பாலை ஸ்பிரே செய்து விடுங்கள். பிறகு நுனி முடி வரை இந்த தேங்காய் பாலை அப்ளை செய்யுங்கள். முடியின் எல்லா பாகங்களிலும் தேங்காய்ப்பால் பட்டிருக்க வேண்டும். அப்படியே முடியை கொண்டை கட்டிக்கொண்டு 30 நிமிடங்கள் விட்டு விடுங்கள். பிறகு மைல்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து தலையை காய வைத்த பின்பு  சிக்கு எடுத்துப்பாருங்கள். உங்களுடைய தலை முடியின் அழகை பார்க்க இரண்டு கண்கள் போதாது.

- Advertisement -

பொதுவாகவே இப்படி முடியை செட் செய்வதற்கு கண்டிஷனர்தான் நாம் பயன்படுத்துவோம். கண்டிஷனர் பயன்படுத்தினாலும் தவறு கிடையாது. ஆனால் அந்த கண்டிஷனர் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே உங்களுடைய முடியை சில்க்கியாக வைத்திருக்கும். அதுவும் நிரந்தரமாக அல்ல. ஆனால் இந்த தேங்காய் பால் ரெமெடியை முயற்சி செய்தால் நிரந்தரமாக உங்களுடைய முடி சில்க்கியாகவும் சைனிங் ஆகவும் மாறிவிடும்.

இதையும் படிக்கலாமே: குதிரைவால் மாதிரி இருந்த முடி எலிவால் மாதிரி ஆகிவிட்டதா? இனி கவலையை விடுங்க உங்க வீட்டில் வெந்தயமும், கருவேப்பிலையும் இருந்தா இப்படி செய்யுங்க போதும்!

இதே மாதிரி வாரத்தில் ஒரு நாள் தேங்காய் பாலை தலையில் தொடர்ந்து அப்ளை செய்து வர உங்களுடைய முடியின் தன்மை ட்ரை ஹேறிலிருந்து, பர்மனென்ட் ஆக சில்கி ஹேர் ஆக மாறிவிடும். குறிப்பாக முடியில் இருக்கக்கூடிய வெடிப்புகளை கூட இது சரி செய்யும் என்றால் பாருங்களேன். தலைமுடி உதிர்வும் குறையும். வேர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும். இதோடு சேர்த்து அழகான முடியும் உங்களுக்கு கிடைக்கப் போகிறது இந்த எளிமையான அழகு குறிப்பு பிடித்திருந்தால் முயற்சி செய்து பார்க்கவும்.

- Advertisement -