மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கும் அடிக்கப் போகுது ஜாக்பாட். கஜலட்சுமி யோகத்தால் பணமழை பொழிய போகும் அந்த 4 ராசிகள் என்னென்ன?

gajalakshmi
- Advertisement -

2023 மே மாதம் ஐந்தாம் தேதி புத்த பூர்ணிமா அன்று, இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம் வரப்போகின்றது. இந்த சந்திர கிரகத்திற்கு முன்பாக, கிரகங்களின் பெயர்ச்சியின் மூலம் கஜலட்சுமி ராஜ யோகத்தை ஒரு சில ராசிகள் பெற இருக்கின்றன. கஜலட்சுமி ராஜயோகத்தால், இந்த மே மாதம் அதிர்ஷ்டத்தை அள்ளி எடுக்க போகும் அந்த 4 ராசிகள் என்னென்ன, அந்த 4 ராசிக்காரர்களுக்கு எந்த வகையில் எல்லாம் நன்மை நடக்கப் போகின்றது என்பதை பற்றிய ஜோதிட ரீதியான சில தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

மிதுனம்:
இந்த கஜலட்சுமி ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு பண பற்றாக்குறை நீங்கும். செய்யும் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். கடன் தொல்லை படிப்படியாக குறையும். அதிக வட்டிக்கு கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் குவியும். சொத்து, நகை, விலை உயர்ந்த பொருட்கள் இவைகளை நீங்கள் இது நாள் வரை அடமானம் வைத்திருந்தால், இந்த மாதம் அதை மீட்டக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

- Advertisement -

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த கஜலட்சுமி ராஜயோகத்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகின்றது. புதியதாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் இந்த மாதம் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொழிலில், வேலையில் சில முக்கியமான முடிவுகளை எடுக்கலாமா, வேண்டாமா, என்று அலைபாயும் மனதோடு இருப்பவர்கள், ஒரு முடிவை நிலையாக எடுங்கள். அந்த முடிவு உங்களுக்கு லாபத்தை கொடுக்கும். பேங்க் பேலன்ஸ் உயரும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சில பேருக்கு இட மாற்றம் சந்தோஷத்தை கொடுக்கும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த கஜலட்சுமி ராஜயோகம் நினைத்த காரியத்தை எல்லாம் நினைத்தபடி நடத்திக் கொடுக்கப் போகின்றது. தடைபட்டு வந்த சுபகாரியங்கள் நடக்கும். பணம் இல்லை நகை வாங்க முடியவில்லை, பெண்ணுக்கு திருமணம் நடத்த முடியவில்லை என்பவர்கள் எல்லாம் இந்த மாதம் முயற்சிகளை மேற்கொண்டால், பணம் தாராளமாக உங்களுக்கு கிடைக்கும். நகைகளை வாங்கி குவிக்கலாம். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். சொன்ன வார்த்தையை சொன்ன நேரத்தில் நிறைவேற்றுவீர்கள். உங்கள் பேச்சை நாலு பேர் கேட்டு நடப்பாங்க. ஆரோக்கியத்தில் மேம்பாடு உண்டு.

- Advertisement -

மீனம்:
மீன ராசிக்காரர்கள் இதுநாள் வரை நஷ்டம் நஷ்டம் என்று வீண் விரைய செலவில் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பீர்கள். அந்த வீண் செலவுகளை எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சேமிப்பை உயர்த்தக்கூடிய நேரம் காலம் வந்துவிட்டது. கடன் பிரச்சனை நீங்கும். வட்டி அசல் எல்லாவற்றையும் திருப்பி கொடுத்து விடுவீர்கள். நிம்மதியா தூங்குவீங்க. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள். புதிய வேலை, புதிய தொழில் தொடங்க இந்த மாதம் ரொம்ப ரொம்ப நல்ல மாதமாக சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்ட தேவதை எப்போதும் உங்கள் வசமே இருக்க வேண்டும் என்றால், அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் இந்த பொருட்களை எல்லாம் உங்கள் கையால் பிறருக்கு தருவதோ வாங்குவதோ கூடாது.

மேலே சொன்ன இந்த ஜோதிடம் கணிப்பு எல்லாமே பொதுப்படையாக சொல்லப்பட்டுள்ளவை. இதைத் தாண்டி அவரவரின் சுய ஜாதகம் என்ற ஒன்று இருக்கிறது. அதன்படி சில பேருக்கு சில மாற்றங்கள் வாழ்வில் நிகழலாம். பொதுப்படையாக சொல்லப்பட்டுள்ள இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -