புல்வாமா தாக்குதல் : சேவாக்கை தொடர்ந்து கல்விக்காக இதனை நிச்சயம் அளிப்பேன் என்று முழுச்செலவினையும் ஏற்றுக்கொண்ட – கம்பீர்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலைப்படை தீவிரவாதிகள் மூலம் பயங்கரமான கோர சம்பவம் புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்டது. இந்த தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவத்தின் வீரர்கள் 44 பேர் உடல்சிதறி தங்களது இன்னுயிரை தாரைவார்த்தனர்.

pulwama

நாடு முழுவதும் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீர். சேவாக் போன்று கல்வி சம்மந்தப்பட்ட உதவியினை வழங்க முன்வந்துள்ளதாக கூறியுள்ளார்.

அதன்படி கம்பீர் கூறியதாவது : சேவாக் அனைவரது குடும்ப குழந்தைகளுக்கும் இலவச கல்வியினை வழங்குவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். எனவே, நானும் என்னால் முடிந்த உதவியினை செய்ய போகிறேன். அதனால் அந்த குழந்தைகளின் இதர கல்விச்செலவுகள் அனைத்தும் நான் ஏற்கிறேன் என்று கூறியுள்ளார்.

gambhir

இவரின் இந்த செயலும் இணையதள வாசிகள் இடையே பாராட்டினை பெற்றுள்ளது. மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதால் ஆறுதல் அடைந்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

புல்வாமா தாக்குதல் : பி.சி.சி.ஐ நிதியுதவி. இத்தனை கோடியா. உங்களுக்கு நிச்சயம் நல்ல இதயம் உள்ளது. ரசிகர்கள் மகிழ்ச்சி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்