பல வித நன்மைகளை தரும் கணபதி மந்திரம்

Vinayagar-1

உயர்ந்த பதவிகளும், பொறுப்புகளும் அனைவருக்குமே கிடைக்க கூடிய வாய்ப்புகள் அல்ல. பல வருட உழைப்பு மற்றும் அர்பணிப்பிற்கு கிடைக்க கூடிய பரிசாகும். இத்தகைய பதவிகள், பொறுப்புகள் கிடைத்தாலும் இதில் வெற்றி பெறுவதற்கு நம்மிடம் சிறந்த ஆளுமை மற்றும் சரியான முடிவுகளை எடுக்கும் திறன்களும் வேண்டும். தலைமை பொறுப்பு பெற்ற பலரும் இவ்விடயங்களில் சற்று திணறி தான் போகின்றனர். இப்படிப்பட்டவர்கள் நல்லறிவு மற்றும் குணங்களோடு தலைமை பதவியை பெற ஜபிக்க வேண்டிய விநாயகர் மந்திரம் இதோ.

Vinayagar

கணபதி மந்திரம்

ஓம் கணத்தியாக்கஷாய நமஹ்

விநாயகரை போற்றும் இம்மந்திரத்தை வாரத்தின் எல்லா நாட்களிலும் காலையில் உரு ஜெபிபிப்பது சிறப்பு. அதிலும் மாதத்தில் வரும் சதுர்த்தி தினங்களில் உரு ஜெபித்து வழிபடுவது மந்திரத்தின் சக்தியை மேலும் பெருக்கும். காலையில் எழுந்து குளித்து முடிந்தபின்பு விநாயகர் படத்திற்கு விளக்கேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து வழிபட உங்களுக்கு பணியிடங்களிலோ அல்லது ஏதேனும் குழுக்கள், கட்சி போன்றவற்றில் உயர்பதவிகளை பெற்றுத்தரும். மேலும் உங்கள் ஆளுமை திறனும் வளரும்.

Vinayagar

ஒரு மனிதன் எங்கும், எதிலும் வாழ்நாள் எல்லாம் உழைத்தாலும் அந்த உழைப்பில் பெற்ற அனுபவத்தின் காரணமாக அப்பணியிடத்திலோ அல்லது குழுவிலோ தலைமை பொறுப்பை ஏற்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஆனால் பெரும்பாலான மனிதர்களுக்கு அந்த தலைமை பொறுப்பை ஏற்கும் தகுதியிருந்தும் அதற்குரிய ஆளுமை திறன் இல்லாததால் அது அவர்களுக்கு கிடைக்காமல் போகிறது. விநாயகரை போற்றும் இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வர மேற்கூறிய பலன்கள் அனைத்தும் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
தோஷம் போக்கும் நவகிரக ஸ்தோத்திரம்

English Overview:
Here we have Ganapati mantra in Tamil. This is also called as Ganapati manthiram or Ganapathi manthiram in Tamil.