நீங்கள் நினைத்தது நிறைவேற, அதிக செல்வ சேமிப்பு உண்டாக ஸ்தோத்திரம் இதோ

vinayagar
- Advertisement -

விலங்குகளில் யானை அதீத சக்தி வாய்ந்ததாகும். மனிதர்களைப் போலவே யானைக்கும் மிகச் சிறந்த ஞாபக சக்தி இருக்கிறது. இந்த யானைக்கு சில தெய்வீக ஆற்றல் இருப்பதை நமது நாட்டின் பண்டைய யோகிகள் அறிந்தனர். எனவே தான் நமது மதத்தில் எந்த ஒரு செயல் தொடங்குவதற்கு முன்பும் யானை முகம் கொண்ட விநாயகப் பெருமானை வழிபடும் வழக்கத்தை உண்டாக்கினர் நமது முன்னோர்கள். அந்த விநாயகப் பெருமானை வழிபட்டு செய்யப்படும் எந்த ஒரு காரியமும் சிறப்பான வெற்றிகளையும், விரும்பிய பலன்களும் தரவல்லதாக இருக்கிறது. அப்படியான விநாயகப் பெருமானை வழிபடுவதற்குரிய கணேச ஸ்தோத்திரம் இது .இந்த கணேச ஸ்தோத்திரம் துதிப்பதால் நமக்கு உண்டாகும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கணேச ஸ்தோத்திரம்

வினாயகோ விக்னராஜோ கௌரீபுத்ரோ கணேஸ்வர
ஸ்கம்தாக்ரஜோவ்யயஃ பூதோ தக்ஷோ‌உத்யக்ஷோ த்விஜப்ரிய
அக்னிகர்வச்சிதிம்த்ரஸ்ரீப்ரதோ வாணீப்ரதோ‌உவ்யய
ஸர்வஸித்திப்ரதஸ்ஸர்வதனயஃ ஸர்வரீப்ரிய

- Advertisement -

ஸர்வாத்மகஃ ஸ்றுஷ்டிகர்தா தேவோனேகார்சிதஸ்ஸிவ
ஸுத்தோ புத்திப்ரியஸ்ஸாம்தோ ப்ரஹ்மசாரீ கஜானன
த்வைமாத்ரேயோ முனிஸ்துத்யோ பக்தவிக்னவினாஸன
ஏகதம்தஸ்சதுர்பாஹுஸ்சதுரஸ்ஸக்திஸம்யுத

Vinayagar

லம்போதரஸ்ஸூர்பகர்ணோ ஹரர்ப்ரஹ்ம விதுத்தம
காலோ க்ரஹபதிஃ காமீ ஸோமஸூர்யாக்னிலோசன
பாஸாம்குஸதரஸ்சம்டோ குணாதீதோ னிரம்ஜன
அகல்மஷஸ்ஸ்வயம்ஸித்தஸ்ஸித்தார்சிதபதாம்புஜ

- Advertisement -

பீஜபூரபலாஸக்தோ வரதஸ்ஸாஸ்வதஃ க்றுதீ
த்விஜப்ரியோ வீதபயோ கதீ சக்ரீக்ஷுசாபத்றுத்
ஸ்ரீதோஜ உத்பலகரஃ ஸ்ரீபதிஃ ஸ்துதிஹர்ஷித
குலாத்ரிபேத்தா ஜடிலஃ கலிகல்மஷனாஸன

vinayagar

சம்த்ரசூடாமணிஃ காம்தஃ பாபஹாரீ ஸமாஹித
அஸ்ரிதஸ்ரீகரஸ்ஸௌம்யோ பக்தவாம்சிததாயக
ஸாம்தஃ கைவல்யஸுகதஸ்ஸச்சிதானம்தவிக்ரஹ
ஜ்ஞானீ தயாயுதோ தாம்தோ ப்ரஹ்மத்வேஷவிவர்ஜித

- Advertisement -

ப்ரமத்ததைத்யபயதஃ ஸ்ரீகம்டோ விபுதேஸ்வர
ரமார்சிதோவிதிர்னாகராஜயஜ்ஞோபவீதவான்
ஸ்தூலகம்டஃ ஸ்வயம்கர்தா ஸாமகோஷப்ரியஃ பர
ஸ்தூலதும்டோ‌உக்ரணீர்தீரோ வாகீஸஸ்ஸித்திதாயக

vinayagar

தூர்வாபில்வப்ரியோ‌உவ்யக்தமூர்திரத்புதமூர்திமான்
ஸைலேம்த்ரதனுஜோத்ஸம்ககேலனோத்ஸுகமானஸ
ஸ்வலாவண்யஸுதாஸாரோ ஜிதமன்மதவிக்ரஹ
ஸமஸ்தஜகதாதாரோ மாயீ மூஷகவாஹன

ஹ்றுஷ்டஸ்துஷ்டஃ ப்ரஸன்னாத்மா ஸர்வஸித்திப்ரதாயக
அஷ்டோத்தரஸதேனைவம் னாம்னாம் விக்னேஸ்வரம் விபும்
துஷ்டாவ ஸம்கரஃ புத்ரம் த்ரிபுரம் ஹம்துமுத்யத
யஃ பூஜயேதனேனைவ பக்த்யா ஸித்திவினாயகம்

தூர்வாதளைர்பில்வபத்ரைஃ புஷ்பைர்வா சம்தனாக்ஷதை
ஸர்வான்காமானவாப்னோதி ஸர்வவிக்னைஃ ப்ரமுச்யதே

vinayagi

கணேசன் என்கிற ஒரு பெயரைக் கொண்ட கணபதியாகிய விநாயகப் பெருமானுக்குரிய சக்திவாய்ந்த ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் 3 அல்லது 9 முறை நல்லது புதன் கிழமைகள் மற்றும் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி தினங்களில் விநாயகர் கோவிலுக்கு சென்று, விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி, நெய் தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, இந்த ஸ்தோத்திரத்தை துதிப்பதால் நீங்கள் விரும்பிய அனைத்தும் விரைவில் நிறைவேறும். காரியத்தடை, தாமதம் போன்றவை நீங்கும். தீய எண்ணம் கொண்ட மனிதர்களின் சகவாசம் முற்றிலும் விலகும். பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழில் வியாபாரங்களில் நஷ்ட நிலை நீங்கி, லாபங்கள் பெருகும். வீண் செலவுகள் ஏற்படுவது குறையும். செல்வ சேமிப்பு அதிகரிக்கும். நீண்ட காலம் திருமணமாகாமல் தாமதம் ஆனவர்களுக்கு விரைவில் நல்ல வரன் கிடைத்து திருமணம் முடியும். கல்வி, போட்டித்தேர்வுகள் போன்றவற்றில் வெற்றிகளை பெற முடியும்.

vinayagar

பிரபஞ்சம் மற்றும் அண்ட சராசரங்கள் முழுவதும் ஒரு விதமான சக்திமிக்க ஒலி அதிர்வுகள் நிறைந்திருக்கிறது. அது ஓம் எனும் பிரணவ மந்திர ஒலியாகும். இந்த ஓம் எனும் பிரவணத்தின் முழு உருவமாக இருப்பவர் தான் சிவபெருமானின் மூத்த தவ புதல்வனான விநாயக பெருமான். இவருக்கு “கணபதி, ஆனைமுகன்” என வேறுபல பெயர்களும் உண்டு. தன்னை பணிவுடன் வணங்குபவர் எவராக இருப்பினும் அவர்களுக்கு அனைத்தையும் வழங்குபவர் விநாயக பெருமான்.

இதையும் படிக்கலாமே:
குரு காயத்திரி மந்திர பலன்கள்

இது போன்ற மேலும் பல மந்திரங்கள் மற்றும் ஆன்மீக தகவலைகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ganesha stotram in Tamil. It is also called as Ganesh mantras in Tamil or Vinayagar sthothiram in Tamil or Ganapathi manthirangal in Tamil or Pillaiyar valipadu manthiram in Tamil.

- Advertisement -