வாழ்வில் சகல நன்மைகளையும் அடைய வழி செய்யும் குரு காயத்ரி மந்திரம்

guru bagavan

“குரு பார்த்ததால் கோடி நன்மை” என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் குரு பார்வை இருந்தாலே போதும் நாம் நம்முடைய வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்றுவிடலாம். ஆனால் இதற்க்கு நேர்மாறாக ஒருவரது ஜாதகத்தில் குரு தோஷம் இருந்தால் பல விதமான இன்னல்கள் நேரும். குரு தோஷம் நீங்கி சகல செல்வங்களையும் பெற உதவும் குரு காயத்ரி மந்திரம் இதோ.

guru

குரு காயத்ரி மந்திரம்:
ஓம் விரு‌ஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருஹ் ப்ரசோதயாத்

பொது பொருள்:
இடப்பக்கத்தில் கொடியை வைத்திருக்கும் குரு பகவானே, எப்போதும் உங்கள் அருட்கரங்களால் அருள்மழை பொழியும் ப்ரகஸ்பதியே, என் வாழ்வில் உள்ள தீமைகளை அகற்றி நன்மைகளை அளித்திட வேண்டுகிறேன்.

இதையும் படிக்கலாமே:
சகல செல்வங்களையும் பெற உதவும் லக்ஷ்மி காயத்ரி மந்திரம்

மேலே உள்ள மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் குரு தோஷம் விலகும், தீமைகள் விலகும், அரசு பணிக்கு முயற்சி செய்வோருக்கு பணி கிடைக்கும். அதோடு குருவால் சகல நன்மைகளும் ஏற்படும்.

Guru Gayatri  Mantra in English:

Om vrishabadhwajaaya vidmahae
kruni hastaaya dheemahi
tanno guru: prachodayaat

English overview:
Here we have Guru Bhagavan mantra in Tamil or Guru Gayatri mantra in Tamil. By chanting this mantra especially on Thursday one can get away from guru dhosa. Those who are trying for a government job can chant this mantra to get the job quickly.