காரசாரமான பூண்டு சட்னியை இப்படி அரைத்தால், 1 வாரம் ஆனாலும் கெட்டுப்போகாது.

poondu-chutney
- Advertisement -

காரசாரமான பூண்டு சட்னி எப்படி அரைப்பது என்பதை பற்றிதான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த சட்னி உடலுக்கு ஆரோக்கியம் தரும் சட்னியும் கூட. இந்த சட்னியை, இந்த முறைப்படி அரைத்தால் ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். காரசாரமான நாவிற்கு சுவை தரப்போகும் பூண்டு சட்னியை எப்படி செய்ய வேணும்னு தெரிஞ்சுக்க உங்களுக்கும் ஆசை இருக்கா. வாங்க பார்க்கலாம்.

red-chilli

100 கிராம் அளவு பூண்டை தோல் உரித்து, சுத்தம் செய்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். வரமிளகாய் 10 லிருந்து 12 உங்கள் காரத்திற்கு ஏற்ப, நெல்லிக்காய் அளவு புளி, தேவையான அளவு உப்பு, இது மட்டும் இருந்தால் போதும் சூப்பரான பூண்டு சட்னி அரைக்க.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். கட்டாயம் நல்லெண்ணெய் தான் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் தயாராக இருக்கும் வரமிளகாய் போட்டு, சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மிளகாய் கருகி விடக்கூடாது.

garlic

மிளகாய் சிவந்ததும் எண்ணெயிலிருந்து மிளகாயை மட்டும் எடுத்து மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும். அதே எண்ணெயில் தோல் உரித்து வைத்திருக்கும் பூண்டை போட்டு, பூண்டு சிவக்கும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பூண்டின் பச்சை வாடை நீங்கி பூண்டு பொன்னிறம் வரும் வரை வதக்குங்கள். (பூண்டினை எண்ணெயில் சேர்த்து பாதி அளவு வதங்கியவுடன் புளி துண்டையும் பூண்டோடு எண்ணெயில் சேர்த்து விட வேண்டும்).

- Advertisement -

வதங்கிய பூண்டையும் புளியையும் எண்ணெயிலிருந்து வடித்து எடுத்து மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு மைய அரைத்துக் கொள்ளுங்கள். சூடு ஆறிய பின்பு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த சட்னியை நாம் தண்ணீர் ஊற்றி அரைக்கக் கூடாது. பூண்டையும் வர மிளகாயையும் வருப்பதற்காக நல்லெண்ணையை பயன்படுத்தலாம் அல்லவா, அந்த எண்ணெயை ஊற்றி தான் சட்னி அரைக்க வேண்டும். அரைத்த சட்னியை ஒரு பௌலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

garlic-fry1

நீங்கள் வதக்குவதற்காக பயன்படுத்திய 4 டேபிள்ஸ்பூன் எண்ணெயையும் இந்த சட்னியோடு ஊற்றி விட வேண்டும். அதன் பின்பு 1/2 ஸ்பூன் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாய் தாளித்து சட்னியின் மேல் கொட்டி கலந்து, இட்லி, தோசை, சுட சுட சாதம் எதற்கு வேண்டுமென்றாலும் இந்த சட்னியை சாப்பிடலாம்.

tomato-chutney1

தண்ணீர் சேர்க்காமல் அரைத்த இந்த பூண்டு சட்னி ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே கெட்டுப் போகாமல் இருக்கும். இதேபோன்று இந்த பூண்டு சட்னியை தக்காளி சேர்த்தும் செய்யலாம். மேலே சொன்ன அளவுகளோடு ஒரு பெரிய தக்காளியையும் சேர்த்து கொள்ளவேண்டும்.

poondu-chutney1

அதாவது தக்காளியை பூண்டு வதக்கிய எண்ணெயிலேயே பச்சை வாடை போக வதக்கி, வதக்கிய தக்காளியை, பூண்டுடன் சேர்த்து அரைத்தால் இந்த சட்னியில் சுவை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். தக்காளி சேர்த்து அரைத்தால் இது ‘பூண்டு தக்காளி சட்னி’. உங்களுக்கு எப்படி செய்தால் பிடிக்குமோ அந்த முறையில் அரைத்துக் கொள்ளுங்கள். தக்காளி சேர்த்துக் கொண்டாலும் சரி, தக்காளி சேர்க்க வில்லை என்றாலும் சரி, தக்காளி சேர்த்தால் சட்னியை வெளியில் வைக்கக்கூடாது. ஃப்ரிட்ஜில் தான் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -