தினமும் தோசைக்கு என்ன தொட்டுக்க செய்யறது? இனி யோசிச்சு தடுமாற வேண்டாம்! சூப்பர் பூண்டு தோசை. தொட்டுக்க எதுவுமே வேணாங்க!

garlic-dosa1
- Advertisement -

நம்ம வீட்ல காலையிலும், நைட்டும், தோசையை ஈசியா சுட்டு தந்துருவோம். அதுக்கு தொட்டுக்க செய்யறதுக்கு ஒரே பிரச்சனை! எப்ப பார்த்தாலும் தேங்காய் சட்னியா? சாம்பாரா? அப்படின்னு கட்டாயம் கேப்பாங்க? புது விதமா பூண்டை வைத்து, ஒரு சட்னி செஞ்சு, அதை தோசைக்கு மேலயே தடவி, மசாலா தோசை மாதிரி, பூண்டு தோசை செஞ்சு கொடுங்க! சூப்பரா இருக்கும். இந்தச் சட்னி அரைச்சு, ஃப்ரிட்ஜ்ல வச்சுக்கிட்டா 3 நாளைக்கு கூட கெட்டுப்போகாது. பிரிட்ஜில இருந்து எடுத்து தோசை மேலே தடவி, சுட்டு கொடுத்தெல்லாம்! சிம்பிள்! எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாமா?

garlic-poondu

பூண்டு தோசை செய்ய தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் 4 டேபிள் ஸ்பூன்,  முழு பூண்டு – 2 (எல்லாத் தோலயும் உரித்து தனித்தனியாக எடுத்து வைக்கவேண்டும்.) இஞ்சி – சிறிய துண்டு, வரமிளகாய் – 10, பெரிய வெங்காயம் – 1 (சிறிய வெங்காயம் ஆக இருந்தால் 10 பல்) பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

முதலில் ஒரு கடாயில் 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, உரித்து வைத்திருக்கும் பூண்டை சேர்த்துக் கொள்ளுங்கள். பூண்டு நன்றாக வதங்க வேண்டும். தேவைப்பட்டால் ஒரு பூண்டை இரண்டு துண்டுகளாக வெட்டி பொடிப்பொடியாக சேர்த்துக் கொண்டால், சீக்கிரமே வதங்கி விடும். பூண்டை பச்சை வாடை போகும் அளவு, வதக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நல்லெண்ணெயும் முடிந்தவரை கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த சட்னி கெட்டுப்போகாமல் இருக்க எண்ணெய் தான் பாதுகாப்பு.

garlic-dosa2

கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு போட்டு நன்றாக வதக்கிய பின்பு, பச்சை வாடை போன பின்புதான், சிறிய துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கிப் போட்டுக் கொள்ளவும். அதன் பின்பு வரமிளகாய் சேர்க்கவேண்டும். (வரமிளகாய்  காரத்திற்கு ஏற்ப பார்த்து சேர்த்துக் கொள்ளுங்கள்). அதன் பின் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம். வெங்காயம் இரண்டு நிமிடம் வதங்கிய பின்பு, நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து சிடசிடப்பு அடங்கும் வரை வதக்கவும்.

- Advertisement -

இறுதியாக கொத்தமல்லி தழை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கி விடுங்கள். கடாயில் இருக்கும் விழுதை நன்றாக ஆற வைத்த பின்பு, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும் அப்போதுதான், பூண்டுப் பல்லின் சுவை அருமையாக இருக்கும். இதை தண்ணீர் படாமல், காற்றுப் புகாமல், ஒரு சில்வர் டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

garlic-chutney

தோசைக்கல்லில் எப்பவும் போல் மெல்லிசான தோசையை சுட்டு, மேல் மாவு வெந்த பின், அதாவது தோசைக்கல்லில் தோசை ஊற்றி உடனேயே, தோசை மாவாக இருக்கும்போதே, மேலே இந்த பூண்டு சட்னியைதடவி விட்டீர்கள் என்றால், தோசை கொசகொசவென்று மாறிவிடும். ஆகவே, தோசையின் மேல் பகுதி வெந்ததும், நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும், பூண்டு சட்னி ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, தோசையின் மேல் போட்டு பரவலாகத் தடவி, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, ஒரு நிமிடம் கழித்து தோசை மொறுமொறுவென்று சிவந்ததும், சுருட்டி எடுத்தீர்கள் என்றால், பூண்டு மசாலா தோசை தயார். வாசனை அப்படியே வீட்டையே தூக்கிவிடும் அந்த அளவிற்கு வாசனை வரும். தொட்டுக்க எதுவுமே வேணாம். சூப்பரா தோசை வயிற்றுக்கு உள்ளே இறங்கி விடும்.

- Advertisement -

dosa-chutney

உங்கள் வீட்டு தோசைமாவு மொறுமொறுவென்று வரவில்லை  என்றால், இட்லி மாவில் இருந்து ஒரு தனி பாத்திரத்தில் மாவு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். கெட்டியாக இருக்கும் இட்லி மாவை, தண்ணீர் ஊற்றி கரைப்பார்கள் அல்லவா? அந்த அளவிற்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதில் கொஞ்சம் அரிசி மாவை கரைத்து, இந்த அரிசி மாவு கரைத்த தண்ணீரை ஊற்றி, தோசை மாவு கரைக்க வேண்டும். 1/2 ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து மாவை கரண்டியால் அடித்து, தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நல்லா இல்லாத தோசை மாவில் கூட சூப்பரா தோசை வரும்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்ல 2 உருளைக்கிழங்கு இருந்தா போதும்! 2 நிமிஷத்துல இந்த ஸ்நாக் செஞ்சி முடிச்சிடலாம்.

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Poondu dosai seivathu eppadi. Garlic dosa recipe. Garlic dosa recipe in Tamil. Poondu dosai in Tamil. Poondu dosai recipe in Tamil.

- Advertisement -