வழுக்கை தலையில் கூட முடியை வளர வைக்கும் ஒரே 1 பல் பூண்டு. முடி வளர்ச்சியை தடைப்படுத்தும் அத்தனை காரணங்களையும் உடைக்கும் சக்தி இதற்கு உண்டு.

hair4
- Advertisement -

முடி வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் எந்த ஒரு காரணமாக இருந்தாலும் அதை சரி செய்யக்கூடிய சக்தி இந்த ஒரு பல் பூண்டுக்கு உண்டு. சில பேருக்கு தலையில் முடி நிறைய விழும். ஆனால் முடிகள் உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர்ச்சியானது தடைபடும். அதனால் தான் சொட்டை ஏற்படுகின்றது. அதாவது வழுக்கை. அப்படிப்பட்ட வழுக்கை விழுந்த, முடியே வளராத இடத்தில் கூட பின் சொல்லக்கூடிய இந்த குறிப்பை பின்பற்றி வந்தால், 3 மாதத்தில் முடி வளர்ச்சியை நிச்சயமாக கண்கூடாக பார்க்க முடியும். இந்த குறிப்பை பின்பற்றுவதன் மூலம் எந்த ஒரு பக்க விளைவும் நிச்சயம் ஏற்படாது. சளி பிடிக்கும் தொந்தரவு, அல்லது சைனஸ் பிரச்சனையோ தலை பாரமோ வராது.

இந்த குறிப்புக்கு உங்களுக்கு தேவையான பொருள் பூண்டு பல். ஒன்று அல்லது இரண்டு தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் தோலை உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பூண்டின் முனையில் ஒரு சிறிய பாகத்தை வெட்டி எடுத்தால் அதன் நடுவே ஈரத்தன்மை இருக்கும் அல்லவா. அந்த ஈரத்தன்மையை அப்படியே உங்களுடைய தலையில் வைத்து தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதாவது எந்த இடத்தில் எல்லாம் முடி வளர்ச்சி உங்களுக்கு தேவைப்படுகிறதோ, அந்த இடத்தில் எல்லாம் இந்த வெட்டிய பூண்டை வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.

- Advertisement -

பூண்டை வெட்டப்பட்ட அந்த பகுதி உங்களுடைய ஸ்கேல்பில் பட வேண்டும். அவ்வளவு தான். பூண்டை தலையில் வைத்து ஒரு நிமிடம் வரை மசாஜ் செய்த, பின்பு வெட்டப்பட்ட இடத்தில் இருக்கும் சாறு போயிருக்கும். மீண்டும் அந்த பூண்டை லேசாக வெட்டி எடுத்தால் மீண்டும் அந்த இடத்தில் இருந்து லேசாக ஈரப்பதம் வரும். அதை உங்களுடைய தலையில் மீண்டும் மசாஜ் செய்ய தொடங்குங்கள். இப்படி ஸ்கேல்ப் முழுவதும் 1 பூண்டை வைத்து மசாஜ் செய்து விட்டு, ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள்.

அதன் பின்பு தேங்காய் எண்ணெயோ அல்லது விளக்கு எண்ணெயோ நல்லெண்ணெயோ உங்களுக்கு எந்த எண்ணெய் ரொம்பவும் பிடிக்குமோ அந்த எண்ணெயை வைத்து முடியை நன்றாக மசாஜ் செய்து மீண்டும், ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்பு மைல்டான ஷாம்பை போட்டு உங்களுடைய தலைமுடியை அலசிக் கொள்ளலாம்.

- Advertisement -

வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் கூட மேல் சொன்ன இந்த பூண்டு குறிப்பை நீங்கள் பின்பற்றி பார்க்கலாம். இரண்டு வாரத்தில் இருந்து மூன்று வாரத்திற்குள் நிச்சயமாக முடி வளராத வழுக்கையான இடத்தில் சின்ன சின்ன முடி வளர்வதை உங்களால் கண்கூடாக பார்க்க முடியும்.

தேவை என்றால் உங்களுக்கு முன்னேற்றியில் வழுக்கை இருக்கும். அப்படி இல்லை என்றால் தலையின் நடுப்பகுதியில் வழுக்க இருக்கும் அல்லவா. அந்த இடத்தில் மட்டும் இந்த பூண்டு பற்களை வைத்து தேய்த்து டெஸ்ட் கூட பண்ணி பாத்துக்கோங்க.

பிறகு உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் ஸ்கேல்ப் முழுவதும் இந்த பூண்டை வைத்து தேய்த்து மசாஜ் செய்து முடி வளர்ச்சியை நம்பிக்கையோடு பெறலாம். அது உங்களுடைய விருப்பம் தான். (ஒரு பூண்டை உங்கள் கையில் எடுக்குறீங்க. தோல் உறிக்கிறீங்க. அதனுடைய முனையை லேசாக வெட்டிவிட்டு, கையில் இருக்கும் பூண்டை அப்படியே கொண்டு போய் வழுக்கை உள்ள இடத்தில் வைத்து, பூண்டு சாறு வழுக்கையில் படும்படி வட்ட வடிவில் 2 நிமிடம் தேய்த்து மசாஜ் செய்யணும். அவ்வளவு தான்.) அழகான முடி தேவை என்பவர்கள் நம்பிக்கையுடன் தைரியத்துடன் இந்த குறிப்பை பின்பற்றலாம்.

- Advertisement -