வெள்ளை முடியை கருப்பாக மாற்ற வெறும் பூண்டு தோல் இருந்தால் போதும். புதிய முடிகளை கூட கருகருன்னு வளர்க்கலாம்.

hair4
- Advertisement -

வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவதற்கு இயற்கையான முறையில் ஒரு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். அதுவும் செலவே இல்லாமல் குப்பையில் தூக்கி போடக்கூடிய பூண்டு தோலை வைத்து. இந்த ஹேர் டை நரை முடியை கருப்பாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் புதிய முடிகளை கருப்பாக ஊட்டச்சத்துடன் வளர்க்கவும் வழி வகுக்கும். நிரந்தரமாக முடியை கருப்பாக மாற்றி அடர்த்தியாக வளரச் செய்யக்கூடிய குறிப்பை ஒருமுறை பயன்படுத்தும் போதே முழு பலனையும் எதிர்பார்க்கக் கூடாது. மூன்று மாதங்கள் தொடர்ந்து இந்த குறிப்பை பயன்படுத்தி வந்தால் நிச்சயமாக நல்ல பலன் தெரியும்.

முதலில் சமையலுக்கு பூண்டை பயன்படுத்தும்போது தோலை உறுப்பீங்க அல்லவா. அந்த பூண்டு தோலை சேகரித்து வாருங்கள். பூண்டுக்கு மேலே இருக்கக்கூடிய தோல், பூண்டுக்கு உள்ளே இருக்கக்கூடிய தோல் எல்லா தோலையும் இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டு கைப்பிடி அளவு பூண்டு தோல் எடுத்து ஒரு கடாயில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். பூண்டு தோல் கருப்பாக மாறும் வரை கைவிடாமல் வறுத்து விடுங்கள். இரும்பு கடாயில் வறுத்தால் மேலும் சிறப்பு.

- Advertisement -

வறுத்த இந்த பூண்டு தோலை நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கருப்பு நிறத்தில் நமக்கு ஒரு பொடி கிடைத்திருக்கும் அல்லவா. இதுதான் ஹேர் டை பவுடர். இதை எப்படி பயன்படுத்துவது. இந்த ஹேர் டையோடு தேவையான அளவு ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலந்தால் பேஸ்ட் போல கருப்பான ஹேர் டை நமக்கு கிடைத்து விடும். தயார் செய்த ஹேர் டை பேக்கை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, ஒரு மூடி போட்டு மூடி ஐந்து நாட்கள் அப்படியே ஊற விடுங்கள். (ஆலிவ் ஆயில் உங்கள் வீட்டில் இல்லை என்றால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தியும் இந்த ஹேர் டை கலக்கலாம்.)

அவ்வளவு தான். ஐந்து நாட்கள் கழித்து நமக்குத் தேவையான ஹேர் டை தயாராகிவிட்டது. இந்த ஹேர் டை யை எடுத்து நரைமுடி உள்ள இடத்தில் தடவி அப்படியே காய விடுங்கள். ஒரு நாள் முழுக்க காய்ந்தாலும் தப்பு கிடையாது. தலைவலி வராது. தலைபாரம் வராது. பக்க விளைவுகள் ஏற்படாது. மறுநாள் இந்த ஹேர் டை போட்ட உங்களுடைய தலையை வெறும் தண்ணீரில் ஊற்றி அலசி விட்டால் வெள்ளை நிற முடி, கருப்பு நிறம் நன்றாக படிந்திருக்கும்.

- Advertisement -

இதில் நாம் ஆலிவ் எண்ணெய் சேர்த்து இருக்கின்றோம் என்பதால் உங்களுடைய புதிய முடி வளர்ச்சியின் தூண்டுதலும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட இந்த ஹேர் டையை நீங்கள் பயன்படுத்தலாம். ஹேர்டை சீக்கிரத்தில் கெட்டுப் போகாது. ஏனென்றால் அதில் நாம் தண்ணீர் ஊற்றவில்லை. எண்ணெய் தான் ஊற்றி இருக்கின்றோம். (ஐந்து நாள் ஊற வைக்காமலும் இந்த ஹேர் டை பயன்படுத்தலாம். ஆனால் ஊறினால் இந்த பேக் கொஞ்சம் தல தலவென அப்ளை செய்வதற்கு ஈசியாக இருக்கும்.)

உங்களுக்கு மொத்தமாக இப்படி டை செய்ய பிடிக்கவில்லை என்றால், அரைத்த பூண்டு தோல் பவுடரை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டு தேவையான போது, தேவையான பூண்டு தோல் பொடியை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் ஊற்றி கலந்து அப்படியே கூட டையாக பயன்படுத்திக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். உங்களுக்கு இந்த சுலபமான குறிப்பு பிடிச்சிருந்தா குப்பையில் தூக்கி போடாமல் பூண்டு தோலை சேகரித்து வைத்து ஒரே ஒரு முறை இந்த ஹேர் டை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுடைய நரை முடி சுலபமாக கருப்பாக மாறும்.

- Advertisement -