மருதாணி இலையை தேடி இனி அலைய வேண்டிய அவசியமே இல்லை! பூண்டு தோலை வைத்து இன்ஸ்டன்ட் மருதாணி எப்படி செய்வது?

garlic-peel-maruthani
- Advertisement -

வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே இன்ஸ்டன்ட் மருதாணி தயாரித்து விடலாம். நான்கைந்து நாட்களுக்கு அழியாமல் மருதாணி போலவே இருக்கக் கூடிய இந்த இன்ஸ்டன்ட் மருதாணி ரொம்பவும் இயற்கையானது. எந்த கலப்படமும் இல்லாத பூண்டு தோல் கொண்டு செய்யப்படும் இந்த மருதாணி எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பகுதியின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

மருதாணி வைத்துக் கொள்ள யாருக்குத் தான் பிடிக்காது? குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மிகுந்த விருப்பம் கொண்ட இந்த மருதாணி, மருதாணி இலைகளைக் கொண்டு தயாரிக்கும் பொழுது எப்படி இருக்குமோ, அதே போல மருதாணி இலைகள் இல்லாமலேயே நாம் தயாரிக்க முடியும். உடனே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தயாரிக்க கூடிய வகையில் இருக்கிறது இந்த மருதாணி! மருதாணி வைத்துக் கொண்டால் பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்குமாம். லட்சுமி கடாட்சமும் நிறையுமாம். உடல் உஷ்ணம் தணிந்து மன உளைச்சலும் தீருமாம். இத்தகைய மகத்துவங்கள் நிறைந்த மருதாணியை அடிக்கடி இட்டுக் கொள்வது ரொம்பவே நல்லது.

- Advertisement -

மருதாணி இலைகள் கிடைக்காவிட்டால் செயற்கை கோன்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதில் கலப்பட பொருட்கள் இருப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. இதனால் கைகளில் அலர்ஜி போன்ற தொந்தரவுகள் ஏற்படுகிறது. இதிலிருந்து தப்பிக்க நம் வீட்டிலேயே இயற்கையான முறையில் மருதாணியை தயாரிக்கலாம். இன்ஸ்டன்ட் மருதாணி பூண்டு தோலை வைத்து பயன்படுத்த, தேவையான அளவிற்கு பூண்டு தோல்களை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

எவ்வளவு பூண்டு தோலை சேகரித்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுக்கு மருதாணி கிடைக்கும். தேவையில்லாத பாத்திரம் அல்லது மண்சட்டி ஒன்றை இதற்கென தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் வேறு ஒரு விஷயத்திற்கு இதை பயன்படுத்த முடியாது. இந்த மண் சட்டியில் நீங்கள் சேகரித்து வைத்துள்ள பூண்டு தோல்களை போட்டுக் கொள்ளுங்கள். இரண்டு கைப்பிடி நிறைய பூண்டு தோல் இருந்தால் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். கலந்துவிட்ட பின்பு நீங்கள் பயன்படுத்தும் சட்டிக்கு உள்ளே ஒரு வாய் அகன்ற சிறிய அளவிலான கிண்ணத்தை வைக்க வேண்டும். சட்டியை விட கிண்ணம் சிறியதாக இருக்க வேண்டும். பூண்டு தோல்களை எல்லாம் ஒதுக்கி விட்டு நடுவில் கிண்ணத்தை வையுங்கள்.

- Advertisement -

பிறகு சட்டியில் இருந்து புகை வெளியே வராத அளவிற்கு மேலே ஒரு நீர் நிரம்பிய பாத்திரத்தை வைக்க வேண்டும். பின் அடுப்பில் வைத்து எரிய விடுங்கள். உள்ளே இருக்கும் பூண்டு தோல் சர்க்கரை உடன் சேர்ந்து எரிந்து ஆவியாகி நீரை அந்த கிண்ணத்தில் சேகரித்து வைக்கும். சட்டியில் இருந்து லேசாக புகை வர ஆரம்பிக்கும். புகை வந்ததிலிருந்து ஒரு நிமிடம் மட்டும் அப்படியே காத்திருங்கள். ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து புகை எல்லாம் அடங்கி ஆறும் வரை மேலே இருக்கும் நீர் நிரம்பிய பாத்திரத்தை எடுக்கக் கூடாது. உள்ளே இருக்கும் புகையிலிருந்து உண்டாகிய ஆவி திரவமாகி கிண்ணத்தில் இறங்கி இருக்கும். இந்த தண்ணீர் தான் நாம் மருதாணி பயன்படுத்த தேவையான சொல்யூஷன் ஆகும்.

இதையும் படிக்கலாமே:
இனி நமக்கு முடியே வளராது என்று முடிவு கட்டி, எல்லா முயற்சிகளையும் கைவிட்டவர்கள் இதை செய்தால் நிச்சயம் காடு போல முடி கருகருன்னு வளர தொடங்கிடும்.

இதை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் நீங்கள் தேவைப்படும் பொழுதெல்லாம் மருதாணி வைத்துக் கொள்ளலாம். ரெண்டு டேபிள் ஸ்பூன் இந்த கலவையை எடுத்துக் கொண்டால் இதனுடன் தேவையான அளவிற்கு கோதுமை மாவு அல்லது மைதா மாவு சேர்த்து கலக்க வேண்டும். பிறகு இதை கைகளில் உங்கள் இஷ்டம் போல மருதாணி டிசைன் வைத்துக் கொள்ளலாம். குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது நீங்கள் கைகளில் வைத்திருந்தால் தான் நன்கு சிவக்கும். காய்ந்த பிறகு கைகளை கழுவி பாருங்கள், அவ்வளவு அருமையாக மருதாணி உங்கள் கைகளில் செக்க செவேல் என சிவந்து இருக்கும். சட்டியில் இருக்கக்கூடிய பூண்டு தொல்களை எல்லாம் ஒரு சிறிய கரண்டியால் சுரண்டி எடுத்து குப்பையில் போட்டு விடுங்கள். மீண்டும் சட்டி தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -