பூண்டு தோல் உரிக்க தினமும் கஷ்டமா இருக்கா? தேங்காய் அடிக்கடி பூஞ்சை பிடிக்கிறதா? இந்த டிப்ஸ் எல்லாம் தெரிஞ்சா உங்கள் சமையல் வேலை சுலபம் ஆகிடும்.

poondu
- Advertisement -

தமிழகத்தின் பெரும்பாலான இல்லங்களில் பூண்டு, தேங்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்துவோம். இதில் பூண்டு தோலை தினமும் உருப்பது என்பது பலருக்கும் பெரும் வேலையாக இருக்கும். அதே சமயம் சட்னி செய்ய வேண்டும் என்று பிரிட்ஜ்யை திறந்து பார்த்தால் தேங்காய் பூஞ்சை பிடித்திருக்கும். உருளை கிழங்கில் சில நாட்களிலேயே முளை விட்டிருக்கும். இப்படி இந்த மூன்று பிரச்சனைகளுக்கும் சுலபமான தீர்வைத்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.

பொதுவாக நம் அனைவரின் வீடுகளிலும் சமைக்கும் உணவு பதார்த்தங்களில் பூண்டு பயன்படுத்துவோம். அந்த பூண்டு பற்களின் தோலை உரிப்பது என்பது தான் அனைவருக்குமே அலுப்பு தட்டும் வேலையாக இருக்கும். காரணம் கை விரல்களில் நகங்கள் சற்று நீளமாக வளர்த்திருப்பவர்களால் சுலபமாக பூண்டு தோலை உரித்து விட முடியும். அதே நேரம் நகங்கள் பெரிதாக இல்லாதவர்கள் பூண்டு தோலை உரிக்க கொஞ்சம் சிரமப்படுவார்கள். இப்படி பூண்டு தோலை சுலபமாக உரிக்க முடியாதவர்கள், உங்கள் வீட்டில் இருக்கின்ற ஒரு சேஃப்டி பின்னை எடுத்துக்கொண்டு, அந்த பின்னோட கூர்மையான பகுதியை தோலுடன் இருக்கின்ற பூண்டுப்பல்லின் மேற்பகுதியில் குத்தி, அந்த பூண்டு தோலை பக்கவாட்டில் இழுத்தால் பூண்டு பற்களின் தோல் தனியாக வந்து விடும். இதே போல மற்ற பூண்டு பற்களில் இருக்கின்ற பூண்டு தோல்களை சுலபமாக இந்த முறையில் உரித்து விடலாம். இந்த முறையில் பூண்டு தோல் உரிப்பதால், வெறும் கைகளால் பூண்டு தோல்களை உரிப்பதை விட மிக வேகமாக தோல்களை உரித்து விடலாம்.

- Advertisement -

பொதுவா எல்லோரும் விரும்பி சாப்பிடுகிற ஒரு காய்கறி வகையாக உருளைக்கிழங்கு இருக்கின்றது. உருளைக்கிழங்குகளை மழை, குளிர் காலங்களில் வீட்டில் வைக்கும் போது, காற்றில் இருக்கின்ற ஈரப்பதம் காரணமாக உருளைக்கிழங்குகள் முளை விடக்கூடும். அப்படி முளைவிட்ட உருளைக்கிழங்குகளை எக்காரணம் கொண்டும் சமைத்து சாப்பிடக்கூடாது. இந்த முளை விட்ட உருளைக்கிழங்களை சாப்பிட்டால் நம்முடைய உடலுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படும். உருளைக் கிழங்குகள் முளை விடுவதை தடுக்க நம் வீட்டில் முழு பூண்டுகளை தனித்தனி பல்லாக உதிர்த்து, ஒரு கூடையில் வைத்திருப்போம் அல்லவா! அந்த கூடையில் புதிதாக வாங்கிய உருளைக்கிழங்குகளை போட்டு வைத்து, அவ்வப்போது பயன்படுத்துவதால் உருளைக்கிழங்குகள் முளை விடுவதை தடுக்க முடியும்.

பொதுவாக நம் எல்லோர் வீடுகளிலும் சமையலுக்குப் பயன்படுகின்றன தேங்காயை உடைக்கும் போது ஒரு பாதியை உடைத்துவிட்டு, மறுபாதியை குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாப்போம். என்னதான் குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாத்தாலும் அந்த தேங்காயில் இருக்கும் ஈரப்பதம் காரணமாக, அதில் பூஞ்சைகள் பிடிக்க ஆரம்பிக்கும். இப்படி குளிர்சாதன பெட்டியில் இருக்கும் தேங்காயில் பூஞ்சைகள் பிடிக்காமல் இருக்க, அந்த தேங்காய்குள்ளே சிறிதளவு சமையல் உப்பு போட்டு, அந்த தேங்காய் முழுவதும் நன்றாக தேய்த்து விட்டு, அதன் பிறகு குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு அந்த தேங்காய் கெடாமல் இருக்கும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு கூட அந்த தேங்காய்க்குள் விட்டு, முழுவதும் தேய்த்து பிரிட்ஜ் குள் வைப்பதால் நீண்ட நாட்களுக்கு தேங்காய் கெடாமல் இருக்கும்.

வீடுகளில் குளிர்சாதன பெட்டி இல்லாதவர்கள் மேற்சொன்ன முறையில் பாதி தேங்காயில் உப்பு அல்லது எலுமிச்சை சாறு போன்றவற்றை போட்டு நன்கு தேய்த்து விட்ட பிறகு, ஒரு கிண்ணத்தில் அந்தப் பாதி தேங்காய் மூழ்குகின்ற அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் அந்த தேங்காயை வைத்து விட வேண்டும். இப்படி செய்வதால் அந்தப் பாதி தேங்காய் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். எனினும் தேங்காய் வைத்திருக்கின்ற கிண்ணத்தில் இருக்கும் தண்ணீரை தினந்தோறும் மாற்ற வேண்டும். அப்படி மாற்றாத பட்சத்தில் தண்ணீரில் இருக்கும் பாதி தேங்காயில் பூஞ்சைகள் பிடிக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -