மழைக்கு சுட சுட சாதம் வெச்சு இந்த பூண்டு தொக்கு போட்டு சாப்பிட்டு பாருங்க, டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும். வெங்காயம் தக்காளி எதுவும் சேர்க்காமல் செய்யும் இந்த தொக்கு ஒரு மாதம் ஆனாலும் கெடாது.

- Advertisement -

பூண்டு உடம்புக்கு எவ்வளவு நல்லது என்று அனைவருக்கும் தெரிந்தது தான். பல நோய்களுக்கு பூண்டு ஒரு நல்ல மருந்து. அதுவும் இந்த மழை காலங்களில் ஏற்படும் தொல்லைகளுக்கு இந்த பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அப்படி ஒரு பூண்டு தொக்கு வெங்காயம், தக்காளி போன்ற பொருட்கள் எதையுமே சேர்க்காமல் மிக மிக எளிமையாக வீட்டில் இருக்கும் ஒன்று, இரண்டு பொருள்களை வைத்து அருமையாக செய்யக் கூடிய ஒரு ரெசிபி தான் இந்த பூண்டு தொக்கு. இது எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள்: தனியா- 2 ஸ்பூன், பூண்டு -20 பல், சீரகம் – 1 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், காஷ்மீர் மிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் – டீஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன், வெல்லம் -1 டீஸ்பூன், தயிர் – 2 டீஸ்பூன்.

- Advertisement -

இந்த குழம்பு செய்வதற்கு முதலில் தனியாவை இடி உரலில் சேர்த்து நல்ல கொரகொரப்பாக இடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை மிக்ஸியில் சேர்த்து அரைக்கலாம் ஆனால் கையில் இடித்து செய்யும் போது அதன் சுவை சற்று தூக்கலாகவே இருக்கும். அதன் பிறகு அதே இடி உரலில் பூண்டையும் சேர்த்து நன்றாக இடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் இடித்து வைத்த தனியாக சேர்த்து கொள்ளுங்கள். தனியா பொரிந்தவுடன் சீரகம் சேர்த்து அதுவும் பொரிந்த பிறகு பூண்டு சேர்த்து நன்றாக பச்சை வாடை போகும் வரை எண்ணெயில் வதக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து விட்டு காஷ்மீரி மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெயில் லேசாக வதக்கிய பிறகு அரைக் கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கொள்ளுங்கள்.

இப்போது இரண்டு ஸ்பூன் தயிரை மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல கிரீம் பதத்திற்கு அரைத்து இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் கட்டி கட்டியாக இருந்தால் குழம்பில் சேர்க்கும் போது நன்றாக இருக்காது. இப்படி அரைத்து சேர்க்கும் போது குழம்புக்கு தேவையான புளிப்பு கிடைப்பதுடன், ஒரு வித்தியாசமான சுவையில் இந்த தொக்கு கெட்டியாக சூப்பராக இருக்கும். குழம்பு கொதித்த பிறகு கடைசியாக வெல்லம் தூவி அதுவும் நன்றாக கரைந்து ஒரு கொதி வந்த பிறகு இறக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: மிட்டாய் பிடிக்காது என்று சொல்லும் குழந்தைகள் கூட இருக்காங்களா என்ன? சளி, இருமல், அஜீரணம், போன்றவற்றை நீக்கும் அருமையான இந்த இஞ்சி மிட்டாய் சுலபமாக வீட்டில் செய்து கொடுங்க.

ரொம்ப சுலபமான பூண்டு தொக்கு தயாராகி விட்டது. இது இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கும் சாதத்திற்கும் ஏற்ற ஒரு நல்ல சைடு டிஷ். இதில் பூண்டு, தனியா சேர்த்து இருப்பதால் உடலுக்கும் மிகவும் நல்லது. இதை ஒரு முறை செய்து வைத்து கொண்டால் ஒரு மாதம் வரை கூட வைத்து சாப்பிடலாம் கெட்டுப் போகாது.

- Advertisement -