கொஞ்சம் கூட கஷ்டப்படாமல் கருப்பாக இருக்கும் நாட்பட்ட கேஸ் பர்னரை கூட புதிதாக வாங்கியது போலவே தங்கம் போல் மின்ன செய்ய சமையற்கட்டில் இந்த 1 பொருள் இருந்தால் போதுமே!

gas-burner-eno
- Advertisement -

முந்தைய காலங்களில் எல்லாம் விறகடுப்பில் சமைத்தவர்கள், இப்பொழுது கேஸ் ஸ்டவ்வுக்கு மாறிவிட்டனர். இனி கேஸ் ஸ்டவ் இல்லை என்றால் சமையலே இல்லை என்பது போல ஆகிவிட்டது. இந்த கேஸ் ஸ்டவ் பயன்படுத்துபவர்கள் அதில் இருக்கும் பர்னரை அடிக்கடி சுத்தம் செய்வது கிடையாது. நாட்ப்பட்ட அழுக்குகள் அதனுள் சேர்ந்து சரியாக எறியாமல் போவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இப்படி விடாப்பிடியான கறை உள்ள கேஸ் பர்னரை கூட சிரமமே இல்லாமல் எளிதாக எப்படி புதிதாக வாங்கியது போல தங்கம் போல் ஜொலிக்க செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கேஸ் ஸ்டவ் பயன்படுத்துபவர்கள் அதனை வாரம் ஒரு முறையாவது முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். அப்போது தான் சுலபமாக இருக்கும். அப்படியே நீங்கள் மாதக்கணக்கில் விட்டு விட்டால், அதை அவ்வளவு சுலபமாக சுத்தம் செய்ய முடியாமல் போய்விடும். பர்னர் மட்டுமல்லாமல் பர்னரை சுற்றியுள்ள இடங்களிலும் விடாப்பிடியான கறைகள் ஒட்டிக் கொண்டிருக்கும். இதற்கும் இந்த வழியை பயன்படுத்தினால் ரொம்பவும் எளிதாக சுத்தம் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

அசிடிட்டிக்கு பயன்படுத்தப்படும் ஈனோ ரெண்டு நிமிடத்தில் நம்முடைய வயிற்று பிரச்சனையை சரி செய்து விடுகிறது. அதே போல இதை வைத்து வீட்டில் நிறைய பொருட்களை சுத்தம் செய்யலாம். அதில் இந்த கேஸ் பர்னரையும் எளிதாக சுத்தம் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்? முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். கொதிக்கும் தண்ணீரில் கேஸ் பர்னர்களை போடுங்கள்.

பின்னர் அதனுள் ஒரு பாக்கெட் அளவிற்கு ஈனோ சேர்த்துக் கொள்ளுங்கள். குறைந்தது 2 மணி நேரம் அப்படியே ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு பர்னரை எடுத்து லேசாக பழைய பல் துலக்கும் பிரஷ்சை சோப் தொட்டு தேய்த்தால் எல்லா அழுக்குகளும் நீங்கி வந்துவிடும். புதியது போல கேஸ் பர்னர் மின்ன ஆரம்பிக்கும். வெறும் ஈனோ பயன்படுத்தி இந்த முறையில் செய்பவர்கள் பிரஷ்சை கொண்டு துலக்க வேண்டி இருக்கும், ஆனால் கையே வைக்காமல் சுத்தம் செய்வதற்கும் ஒரு வழிமுறை உண்டு.

- Advertisement -

இரவில் நன்கு புளி தண்ணீரில் கேஸ் பர்னர்களை ஊற விட்டுக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் எழுந்து கொதிக்கும் நீரில் கேஸ் பர்னரை போட்டு ஒரு மூடி எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து ஊற்றுங்கள். அதனுடன் இதே போல ஈனோவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு இரண்டு மணி நேரம் கழித்து பார்த்தால் நீங்கள் கைகூட வைக்க தேவையில்லை, அதுவே பளிச்சென மாறிவிடும்.

அவ்வளவு எளிதாக கறைகள் முழுவதுமாக அந்த சுடும் தண்ணீரிலேயே கரைந்து விடும். அப்புறம் என்னங்க, இனி கேஸ் பர்னர் பளபளன்னு மின்னும். கேஸ் பர்னர் மட்டும் அல்லாமல் சுற்றியுள்ள இடங்கள், ஸ்டாண்டுகள் போன்றவற்றையும் இதே போல சுடு தண்ணீரில் போட்டு வைத்து ஈனோ சேர்த்து, ஊற விட்டு விடுங்கள். அதன் பிறகு தேய்த்தால் கறைகள் ரொம்பவும் எளிதாக நீங்கிவிடும். இதற்காக கஷ்டப்பட்டு ஸ்கிரப்பர் போட்டு தேய்க்க தேவையில்லை.

- Advertisement -