கேஸ் பர்னரை இவ்வளவு ஈஸியா வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருளை வைத்தே சுத்தம் செய்துவிடலாமா! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.

tips
- Advertisement -

வீட்டின் சமையல் அறையில் எப்போதும் அதிக முக்கியத்துவதோடு விளங்குவது அடுப்பு தான். ஆனாலும் சிலரது வீட்டில் கேஸ் பர்னர் கரை படிந்து பார்பதற்க்கே மிகவும் கருப்பாக இருக்கும். அப்படியான பர்னரை புதிதுபோல் பளபளவென்று சுத்தம் செய்ய நமது வீட்டு சமையல் அறையில் இருக்கும் புளியே போதுமானது. வாருங்கள் அதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

aduppu burner

முதலில் ஒரு எலுமிச்சை பழம் அளவிற்கு புளியை எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கறைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுப்பில் உள்ள பர்னரை கழற்றி புளி தண்ணீரில் 3 முதல் 5 மணிநேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு புளிதண்ணீரில் இருந்து பர்னரை எடுத்து அதை ஸ்க்ரப்பர் கொண்டு நன்றாக தேய்க வேண்டும். அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரணமாக சாமான் கழுவுவது போல் தேய்த்தாலே போதுமானது.

gas aduppu burner

அதன் பிறகு குழாயில் தண்ணீரை திறந்துவிட்டு அப்படியே பர்னரை அதில் காட்டி கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பர்னரில் உள்ள சிறு ஓட்டைகளில் இருக்கும் அழுக்குகள், தண்ணீரின் வேகத்தினால் வெளியில் வரும்.

- Advertisement -

பல மாதங்களாக பர்னரை சுத்தம் செய்யாமல் இருந்து தற்போது சுத்தம் செய்பவர்கள், இரவு சமையல் வேலை எல்லாம் முடிந்த பிறகு பர்னரை புளி தண்ணீரில் ஊறவைத்து காலையில் எழுந்து சுத்தம் செய்வதே நல்லது. இல்லை என்றால் அதிக நேரம் அழுத்தம் கொடுத்து தேய்க்கும்படி இருக்கும்.

gas aduppu

சிலர் இதே முறையில், வினிகர், எழுமிச்சை பழம் மற்றும் ஆப்ப சோடா ஆகியவற்றை கலந்து அதில் பர்னரை ஊறவைத்து சுத்தம் செய்வார்கள். இந்த இரண்டு முறைக்கும் உள்ள வித்யாசம் நேரம் மட்டுமே. புளி தண்ணீர் கொண்டு சுத்தம் செய்பவர்கள் அதிக நேரம் ஊறவைக்க வேண்டும். வினிகர், எழுமிச்சை பழம் மற்றும் ஆப்ப சோடா கொண்டும் ஊறவைப்பவர்கள் அதிகபட்சம் 3 மணிநேரம் ஊரவைத்தாலே போதுமானது.

- Advertisement -