ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல், 10 வருஷம் பழைசாக இருக்கும் கேஸ் ஸ்டவ்வை கூட, 10 நிமிடத்தில் புதுசு போல மாற்ற சூப்பர் ஐடியா இது.

gas
- Advertisement -

நம் வீட்டு சமையல் அறையில் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய பொருட்களில் இந்த கேஸ் ஸ்டவ்வும் ஒன்று. தினம் சமைத்து முடித்த பின்பு கேஸ் ஸ்டவ்வையும், கேஸ் ஸ்டவ்வுக்கு கீழே இருக்கும் மேடையையும் சுத்தம் செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. சமைத்த உணவு அப்படியே சமையல் மேடையில் சிந்தி இருந்தால், அது ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்ல விஷயம் அல்ல. சமையல் செய்த உடனே அடுப்பை துடைத்து எடுக்க வெறும் ஐந்து நிமிடங்கள் கூட ஆகாது. சோம்பேறித்தனப்பட்டு அப்படியே சமைக்கும் போது சிந்திய பொருட்களை எல்லாம் விட்டு விட்டால், அது காய்ந்து சொரசொரப்பாக அடுப்பிலும் மேடையிலும் ஒட்டி, நமக்கு சிரமத்தை கொடுத்து விடும். உங்களுடைய ஸ்டவ் எவ்வளவு பழைசாக இருந்தாலும், அதை ஒரு நிமிடத்தில் புதியதாக மாற்ற சூப்பரான டிப்ஸ் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. சுத்தத்தை விரும்பும் இல்லத்தரசிகள் இந்த பதிவை இறுதிவரை படித்து பலன் பெறலாம்.

முதலில் சமைத்த ஐந்து நிமிடம் கழித்து உங்களுடைய ஸ்டவ்வை இப்படி சுத்தம் செய்து பாருங்கள். ஸ்டவ்வுக்கு மேலே சிந்தி இருக்கக்கூடிய எல்லா உணவுப் பொருட்களையும், ஒரு துண்டை வைத்து சுத்தமாக துடைத்து கீழே தள்ளி விடுங்கள். எண்ணெய் பிசுபிசுப்பு சமைத்த குழம்பு இவையெல்லாம் அடுப்பின் மீது கொட்டி காய்ந்து இருந்தால் ஒரு ஈரத் துணியை வைத்து துடைத்து எடுக்கும் போது அது எல்லாம் நமக்கு நீங்கிவிடும். அதன் பின்பு ஒரு ஸ்பான்ச் ஸ்கிரப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கோலமாவு, சால்ட் உப்பு இந்த இரண்டு பொருட்களில் ஏதாவது ஒன்றை தொட்டால் போதும். அப்படி இல்லை என்றால், ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் சால்ட் உப்பு, 1 ஸ்பூன் கோலமாவு போட்டு கலந்து அதை ஸ்க்ரப்பரின் தொட்டு உங்களுடைய ஸ்டவ்வை நன்றாக துடைத்து எடுத்து விட வேண்டும். அதன் பின்பு காய்ந்த காட்டன் துணியை வைத்து ஸ்டவ்வை துடைத்து எடுத்து விட்டால், ஸ்டவ் பளிச் பளிச்சின மாறிவிடும்.

- Advertisement -

இப்படி செய்தால் கீறல் விழுந்து விடுமோ என்ற பயம் வேண்டாம். ஸ்டீல் ஸ்டவை இந்த முறைப்படி சுத்தம் செய்தால் உடனடியாக பளிச்சென சுத்தமாக மாறிவிடும். இறுதியாக 1 ஸ்பூன் விபூதியை எடுத்து இந்த ஸ்டவ்வின் மேலே நன்றாக தூவி விட்டு ஒரு துண்டை வைத்து ஸ்டவ்வை துடைத்து எடுத்து பாருங்கள். உங்கள் ஸ்டவ் எத்தனை வருடமாக பயன்படுத்திய பழைய ஸ்டவ்வாக இருந்தாலும் ஒரு நிமிடத்தில் பழைய ஸ்டவ், புதுசு போல பள பளப்பாக ஜொலிக்க தொடங்கி விடும். (இப்படி விபூதி போடும்போது பர்ணருக்கு உள்ளே போகாமல் பார்த்து கொள்ளுங்கள். பர்ணருக்கு மேலே ஏதாவது ஒரு கிண்ணத்தையோ துணியையோ போட்டு மூடி கொள்ளுங்கள்.)

உங்கள் வீட்டு சமையலறைக்கு வந்து இப்படி விபூதி போட்டு சுத்தம் செய்த ஸ்டவ்வை யாராவது பார்த்தால், இந்த ஸ்டவ்வை புதுசாக வாங்கினீர்களா என்று கேப்பாங்க. அந்த அளவிற்கு சூப்பரான ஒரு பளபளப்பை கொடுக்கக்கூடிய தன்மை விபூதிக்கு உண்டு. ட்ரை பண்ணி பாருங்க. விபூதியை தினம்தோறும் போட்டு துடைக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது. வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் விபூதி போட்டு உங்களுடைய ஸ்டவ்வை துடைத்து வைத்தாலும் சரிதான்.

- Advertisement -

சில பேர் வீட்டில் அசைவம் சமைத்தாலோ அல்லது எண்ணெய் பலகாரங்கள் அதிகம் செய்தாலோ சமையல் மேடை ஸ்டவ் அனைத்துமே ரொம்பவும் பிசுபிசுப்பாக இருக்கும். அப்போது வெறும் கோலமாவும் உப்பும் நமக்கு சுத்தத்தை கொடுக்காது. ஒரு சிறிய வாட்டர் கேனில் 1 ஸ்பூன் ஷாம்பு, 1 டம்ளர் தண்ணீரை ஊற்றி நன்றாக குளிக்க கொள்ளுங்கள்.

இந்த ஷாம்பு தண்ணீரை ஸ்டவ்விலும் மேடையும் மேலும் நன்றாக ஸ்பிரே செய்துவிட்டு ஒரு ஈரத்துணியை வைத்து நன்றாக துடைத்தால் எண்ணெய் பிசுபிசுப்பு அழுக்கு மொத்தமும் சுத்தமாக நீங்கிவிடும். பிறகு காய்ந்த துணியை வைத்து ஒருமுறை துடைத்து விட்டால் வேலை முடிந்தது. அசைவ வாசமும் வீசாது. இந்த ஷாம்பு வாடைக்கு எறும்பு கரப்பான் பூச்சி தொல்லையும் இருக்காது‌. உங்களுக்கு மேல் சொன்ன குறிப்புகள் பயனுள்ளதாக இருந்தால் உங்க வீட்ல ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. பிடிச்சிருந்தா தொடர்ந்து இந்த முறையில் உங்கள் சமையலறையை சுத்தம் செய்யலாம்.

- Advertisement -