அச்சு அசலாக பும்ராவை போன்ற ஸ்டைலுடன் பந்துவீசி அசத்தும் சிறுவன் – வைரல் வீடியோ

Bumrah

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா. தற்போதைய கிரிக்கெட் உலகின் நம்பர் 1 பவுலரும் இவரே. மேலும், உலகக்கோப்பை தொடரின் நாயகனாக திகழ்வார் என்றும் கருதப்படுபவர் அந்த அளவிற்கு கடைசி கட்ட ஓவர்களில் யார்க்கர் வீசுவதில் திறமைசாலி. வேகம் மற்றும் துல்லியம் என்று அசத்தும் பும்ராவை போன்றே ஒரு சிறுவன் பந்துவீசி வருகிறார் இதோ அந்த வீடியோ :

ஹாங் காங் நாட்டில் 13 வயதிற்கு உட்பட்டோர் போட்டிகளில் உள்ளூர் அணிக்காக விளையாடும் ஒரு சிறுவன் இந்திய அணிவீரர் பும்ராவை போன்று வீசி வருகிறார். இவரது பவுலிங் ஆக்சனை பார்த்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இதனை விடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. அந்த வீடியோவில் அந்த சிறுவன் அச்சு அசலாக பும்ரா பாணியில் பந்துவீசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட – ஐ.சி.சி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்